சனி, 17 ஆகஸ்ட், 2019

பயனுள்ள முத்தரப்பு கூட்டம்:
26-07-2019 அன்று புதுடெல்லியில் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு டில்லி வட்டார தொழிலாளர் ஆணையர் ( RLC) தேஜ் பஹதூர் NFTCL / BSNLEU/ நிர்வாகம் உள்ளிட்டவர்களை‌ அழைத்தார். NFTCL சம்மேளனத்தின் சார்பில் தோழர்கள் சி.கே.எம், ஆனந்தன், சர்மா ஆகிய மூவர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். எடுத்த எடுப்பிலேயே RLC திரு. தேஜ் பஹதூர் அவர்கள் இந்த கூட்டம் மிக அவசரமாக கூட்டப்பட்டதற்கு NFTCL சம்மேளனம் 19-07-19 அன்று மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கேங்வார் அவர்களை சந்தித்து...
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆறுமாதஙகளாக சம்பளம் தரப்படாத நிலையை விளக்கி அமைச்சர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கோரியது தான் காரணம் என‌ விளக்கினார். CLC மற்றும் மத்திய அமைச்சரை NFTCL சம்மேளனம் வற்புறுத்தியதன் விளைவாகவே இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக RLC உறுதிபட எடுத்துரைத்தார். BSNLEU சங்கம் சமீபத்தில் இதே பிரச்சனைக்காக தார்ணா ஒன்றை நடத்தியதால் அந்த சங்கத்தையும் இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்தாக RLC விளக்கினார். NFTCL சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.கே.எம் தனது வாதத்தை முதலில் எடுத்து வைத்தார். அவர் நிதி நெருக்கடியை காரணம் கூறும் நிர்வாகம் ஆறுமாத காலமாக அதிகாரிகளுக்கும் நிரந்தர ஊழியருக்கும் மட்டும் தடையின்றி மாத சம்பளத்தை வழங்குவது எப்படி என்று வினா எழுப்பினார். நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்ற திருமதி புதிரா சபர்வால், DGM மாதந்தோறும் நிர்வாகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் துண்டு விழுவதாக கூறினார். இந்த பதிலில் திருப்தி அடையாத RLC தொலைபேசியில் CMD யை தொடர்பு கொண்டு ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் பல மாதங்களாக வழங்கப் படாததால் இதுவரை‌ ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டதாக எடுத்து கூறினார். மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கேங்வார் இந்த பிரச்சினை குறித்து அக்கறை காட்டுவதையும் CMD க்கு RLC எடுத்துரைத்தார். பின்னர் CMD இந்த பிரச்சினையை மிக விரைவாக தீர்த்து வைக்க முயல்வதாக உறுதியளித்தார். இதனடிப்படையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 22 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No photo description available.

No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக