செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

மோடி அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவது மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும். ஏனெனில் மோடி அரசு 2019 க்குப் பிறகும் அதிகாரத்தில் தொடருமானால் நிச்சயமாக அது நம் நிறுவனத்தை இழுத்து மூடும்.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் நாட்டின் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சேவையையும் ஒப்படைத்து விடும்.எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்தம் குடும்பத்தினரும் நண்பர்களும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதனுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் எதிராக வாக்களித்து தோல்வி அடையச் செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகளை மறந்து மோடி ஆட்சி அகல இந்த அரசியல் கடமையை அனைவரும் செய்ய தீவிர பிரச்சாரம் செய்வதும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களின் பிரதான கடமையாகும். நிதி ஆயோக் நம் நிறுவனத்தை மூடுவது உட்பட எல்லா அம்சங்களையும் ஆலோசிக்க அரசுக்கு அறிவுறுத்தியிருப்பது நம் முன் உள்ள அபாயம் எத்தகையது என்பதை உணர்த்துகிறது.

Image may contain: 3 people, people sitting
Image may contain: 5 people, including Kottiappan Shanmugam, people sitting and indoor
Image may contain: 5 people, including Subbarayan Lakshman, people standing and indoor


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக