புதன், 25 மே, 2016



பராமரிக்க முடியாத ஒரே காரணத்தால், மலேசியா வருத்தத்துடன் கைவிட்ட நாடு- சிங்கப்பூர்...
போதுமான குடிநீர் கிடையாது...
கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது...
ஆனால், தனியாகப் போராடி, தொழில்த் துறையில்‪#‎வல்லரசுகளுக்குச்‬ சவால் விடும் அளவு முன்னேற்றம்...
மென்பொருள், வன்பொருள் வல்லுனர்கள் அதிகமாய் வேலைக்குச் செல்ல ஆசைப் படும் நாடு(சிலிகான் வேலிக்குப் போட்டியாய்)
சுற்றுலாத்துறையில் அபரிவிதமான வளர்ச்சி...
இத்தனையும் சாத்தியமானது- ஒரே ஒருவரால்- லீ க்வான் யூ...
எப்படி சாத்தியமானது அனைத்தும்...???!!!
அவரது- ஒரே சூத்திரம்- சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்...
‪#‎தமிழை_ஆட்சிமொழி_ஆக்கி_அழகு_பார்த்தார்‬...
எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான்- அத்தனை தமிழனும்...
தமிழை கவுரவப்படுத்திய அவருக்கு, நன்றி நவில்தல் நம் அனைவரின் கடமை...
இன்னும் முக்கியமாக, ராசபக்சே ஒரு இனப் படுகொலையாளன்-இலங்கையில் நடந்தது, இனப்படுகொலை (Genocide) என்று உலக அரங்கிற்கு உரக்கச் சொன்னவர் அய்யா லீ க்வான் யூ..
நம் மொழியையும், இனத்தையும் மதித்த சிங்கப்பூரின் தந்தைக்கு , உலகத் தமிழர் அத்துணை பேரின் சார்பிலும்
புகழ் வணக்கம் செலுத்துவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக