செவ்வாய், 30 அக்டோபர், 2018

அருமையான  தோழர்.ஆறுமுகம் பார்ப்பதற்கு சாந்த வடிவம் அவர் பேசுவதில் அடக்கம் . ஆனால்  ஒப்பந்த தொழிலாளிக்கு பிரச்சனை என்றால் அணல் பறக்கும் பேச்சு ...பணி ஓய்வு காலம் சிறக்க மாநில சங்கம் வாழ்த்துகிறது .

Image may contain: one or more people and people standing

மீண்டும் ஓர் வெற்றி பயணம்.....
 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் என்று பத்து வருடத்திற்கு மூன் எழுப்பிய பிரச்சனை இன்று ஒருஅளவுக்கு நிறைவை எட்டியிருக்கிறது என்றால் அது நமது சங்கத்தையே  சாரும் .ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் என்று கேட்டபோழுது நிரந்தர ஊழியர்களுக்கு கொடுக்க படாத ஓன்று  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எப்படி கிடைக்கும் ? என்று ஏளனம் செய்தவர்கள் ,இன்று நமது சங்கம் செய்தது, நமது முயற்சிதான் போனஸ் பெற்று தந்தது என்று ஊரான் வீட்டு பிள்ளைக்கு பெயர் வைக்கிறது . குப்தாவை குறை சொல்லியே வாழ்ந்த கூட்டம்ஒன்று தோழர் .சி.கே.மதிவாணன் பார்த்து பயந்து அலறும் கூட்டம் ஒன்று.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் ,உரிமைகள் பெற NFTCL என்றும் முன்நிற்கும் என்பதை எடுத்துக்காட்டும் உத்தரவு
 Dy .CLC .  உத்தரவு இதனை பயன்படுத்தி  போனஸ் பெறாத தோழர்களை பற்றி யோசிப்போம்.அனைவருக்கும் போனஸ் ரூபாய் 7000/- என்று நமது சங்கத்தின் சார்பாக திருச்சியில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டின் தீர்மானத்தை வெற்றி பெற அணைத்து முயற்சிகளையும் எடுப்போம் .
 





ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சிக்கலிருந்து வெளியேறும் வழி..... BSNL இன்றைய நிலைமை....காரணம் யார். நாம் என்ன செய்ய வேண்டும்......



தோழர்களே... பல்வேறு பகுதிகளிலிருந்து பலவகையான கவலை கொள்ளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சென்ற வாரம் நடந்த தலைமைபொதுமேலாளர்கள் கூட்டத்தில் மஹாராஷ்ட்ரா மாநில தலைமை பொதுமேலாளர் தொழிலாளர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்துக் கொண்டுதரலாம் என ஆலோசனை வைத்ததாக ஒரு தகவல் பரவியுள்ளது. இது உண்மையா இல்லையா என்று சந்தேகிக்கும் நேரத்தில் இன்று கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்ட பொது மேலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொலைபேசி நிலையங்களின் அன்றாட செலவுகள், மின்கட்டணம் போன்ற செலவுகளுக்கு தொழிலாளிகளிடமிருந்து வட்டி இல்லா கடன் வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளது.

நமது தொழிலாளர்கள் அனைவரும் புதிய சம்பள விகிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த வேளையில் இது போன்ற தகவல்கள் மிகுந்த கவலையை உண்டாக்கியுள்ளது என்றால் மிகையல்ல...

இதிலிருந்து எப்படி நாம் வெளிவருவது.. இதற்காக பயந்து நாம் இருக்கவேண்டியது இல்லை தோழர்களே!


நாம் 2000 ஆண்டில் பொதுத்துறையாக மாற ஒத்துக்கொண்ட போது மூன்று நிபந்தனைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவை

1. அனைவருக்கும் அரசு தொகுப்பு நிதியிலிருந்து பென்ஷன்
2. அனைவருக்கும் வேலை பாதுகாப்பு
3. BSNL நலிவுறாமல் இருக்க வேண்டிய அளவுக்கு நிதி பாதுகாப்பு.

ஆனால் இன்றுவரை முதல் இரண்டு வாக்குறுதிகளூம் காப்பாற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மூன்றாவது வாக்குறுதி காற்றோடு போனது. அதுதான் உண்மை.

2004 இலிருந்து தான் ஒருவனே ஆகப்பெரும் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று கூறிக்கொண்ட BSNLEU இந்த மூன்றாவது வாக்குறுதிபற்றி எந்த கவலையும் படவில்லை என்பது மிக வருத்தத்தை தரக்கூடிய விஷயம்.

இரண்டாவது தலைமுறை அலைவரிசை வந்த போது அப்போது நடைபெற்ற ஏலத்திலே நாம் பங்குபெறாமல் தடுக்கப்பட்டோம். நம்மிடமிருந்து ரூ40,000 கோடி இதற்காக வலுக்கட்டாயமாக அரசினால் பிடுங்கப்பட்டது . இதுதான் நமது சரிவின் ஆரம்பம்.

அதன்பிறகு நம்மை விரிவுபடுத்திக்கொள்ள நம்மை அரசு அனுமதிக்கவில்லை. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் தற்போதய சூழலுக்கு ஏற்ப தம்மை விரிவுபடுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டமல் BSNLEU சங்கம் எதுவும் செய்யாமல் வாளாவிருந்ததுதான் நமது துரதிஷ்டம்.

நமது கம்பெனிக்கு என்வாயிற்று? ஏன் இந்த அவல நிலை? இதற்காக நாம் சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசிப்பதுகூட தவறில்லை என நினைக்கிறேன்.

இதற்கான திட்டங்களை நாம் உடனடியாக தொடங்கவேண்டும். இந்த அரசு நமக்கு நிதிப்பாதுகாப்பு தந்து நம்மை காப்பாற்ற வேண்டியது அதன் தலையாய கடமை என்பதை புரிய வைக்க வேண்டும். இதற்காக நாம தெருவில் இறங்கி போராட் வேண்டும். ஒவ்வொரு இந்திய மக்களும் BSNL  ஏன் இந்த நிலைமைக்கு ஆனது. இதற்கான காரணம் என்ன என்பதை உணரும் வண்ணம் நமது போராட்டம் இருக்க வேண்டும். இது மத்திய அரசு பொதுத்தேர்தலை சந்திக்கும் தருணம். இதுவே பொதுமக்களிடம் நம்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நமக்கு ஆதரவு திரட்டும் நேரம். 

நமது வாழ்வாதாரம் இந்த BSNL ஐ நம்பியே உள்ளது. ஆனால் சில பொதுமேலாளர்கள் கேட்ட ஊழியரிடமிருந்து வட்டி இல்லா கடனை நான் கடுமையாக எதிர்க்கிறேன். 

இது நமது பிரச்சனையை தீர்க்காது. நாம் நம்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் கதவை தட்டுவது ஒன்றே தீர்வளிக்கும்.

தோழமை வாழ்த்துக்களுடன்

சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலர் NFTE-BSNL
06-10-2018