வியாழன், 20 டிசம்பர், 2018

To
Com. P. Abhimanyu, 
General Secretary/ BSNLEU &
Convenor/ AUAB 
Newdelhi 
Dear Comrade,
Kindly accept my congratulations on your unanimous reelection as the General Secretary Of BSNLEU at the just concluded All India Conference in Mysore. Hope you will bestow your undivided attention hereafter to get the third Wage revision in BSNL. I read your All India Conference resolution on the third wage revision in BSNL. I have noted a point in the said resolution that if within a “ reasonable time” Wage revision was not implemented with 15% fitment benefits AUAB will organise agitation once again . 
You know already two years have passed since 01-01-2017 , the date of implementation of Third wage revision. So I could not understand what you mean by “ a reasonable time “?. Kindly spell out the exact time frame as thousands are retiring from BSNL every month. Due to the delay in implementation of IDA Wage revision in BSNL unjustifiably the Pension revision is also kept pending for the BSNL Pensioners who have opted from DOT in 2000. 
There are information that our CMD himself informed Union Leaders recently that the Affordability clause mentioned in the third PRC is not applicable to non- executives wage revision but applicable only for Pay revision of executives. Is it true? We know there are different methods applied for Pay revision to the Executives and Wage revision to Non-Executives in BSNL. The Non- Executives Wage revision is done by bilateral negotiations between the management and the recognised unions whereas Executives Pay revision is decided by a Central Government appointed PRC whose recommendations are common for all the executives in all Central PSUs. In this different scenario I feel the linking of Executives Pay revision with Non- Executives Wage revision itself a wrong approach by AUAB . Kindly reconsider this decision so that delinking is done at the earliest.
Further it was circulated that in the discussion with Hon’ble MOC on 03-12-2018 , the Minister and DOT officers have indicated that they may consider Wage revision but 15% fitment benefits as demanded by AUAB will not be given ( Circular by AUAB dated 13-12-18). You have agreed to that and deferred the indefinite strike indefinitely. Now your Mysore AIC resolution demands that you will not settle for Third wage revision with less than 15% fitment benefits . This is contradictory of AUAB stand circulated on 13-12-18. I appeal to you to inform us the actual position and not to create unnecessary expectations among the non executive employees . As you are aware during the second Wage revision negotiated by BSNEU in 2009 as the only recognised union in BSNL you have agreed to the management proposal to postpone the negotiations on all Perks & allowances till the financial position of BSNL improves. But till this day you didn’t raise this issue with the management resulting in the non- revision of allowances from 01-01-2007. But without any sensitivity the BSNL management has once again informed all concerned that the allowances will be frozen to the level as on 31-12-2016. This is a most retrograde step by the management when the price of all essentials go on increase unstoppable. BSNL has officially informed the DOT at the beginning itself that no discussion would be held on allowances even before the Joint Wage Negotiations Committee begins its work in July 2018. In this background the absence of anything regarding revision of allowances in your Mysore AIC resolution is baffling me. Kindly ponder over the above points raised by me at the earliest as employees are a frustrated lot and completely in the defeatist mood due to the indefinite deferment of indefinite strike planned from 03 rd December.
With Regards,
Yours fraternally, 
C. K. Mathivanan, 
Chairman/ AUAB &
Circle Secretary/ NFTE- BSNL 
Chennai Telephones Circle 
20-12-2018.

திங்கள், 17 டிசம்பர், 2018

No automatic alt text available.

இன்று ஓய்வூதியர் தினம்.BSNL ஊழியர்களுக்கு மத்திய அரசு நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கிட தலைமையேற்று போராடிய அருமைத்தலைவர் O.P.குப்தா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.ஓய்வூதியர் நலன்களை மேலும் மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட உறுதி ஏற்போம் !

தோழர் P..S என்று அழைக்கப்படும் P.சுப்ரமணியன் முன்னாள் மாவட்ட செயலாளர் , பொருளாளர் (NFTE) மற்றும் நமது சங்கத்தின் NFTCL கடலூர் மாவட்ட முன்னாள் தலைவருமான தோழர் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிற்சங்கம் என்ற பெயரில் சில ஜென்மங்கள் இன்னமும் ஒப்பந்த தொழிலாளர்களை ஏமாற்றி தன்னை வசதிப்படுத்திக்கொள்ள அலைகிறது ..அது தெரிந்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் எலும்பு துண்டு கொடுக்காவிட்டால் அங்கீகாரம் கொண்டதாக சொல்லும் நாய்கள் நம்மை கடித்துவிடும் என்பதற்காக பாவ பட்ட தோழர்கள் வேறுவழியில்லாமல் கொடுக்கும் சந்த உனக்கு உறுப்பினர் ஆகாது அது நிரந்தரம் இல்லை .

Image may contain: text
Image may contain: text

5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னால் தலைகாட்ட முடியாமல் சிக்கித் தவிக்கும் மோடி .முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் கொஞ்சமா நஞ்சமா செஞ்சீங்க நான்கரை ஆண்டு காலமாக இந்திய மக்கள் படும் துயரங்கள் கணக்கிலடங்காதவை.சந்தோஷ நிலையில் இந்திய நாட்டு மக்களை இன்று தான் பார்க்க முடிகிறது.கோடிக்கணக்கில் கொள்ளையடித்த முதலாளிகளுக்கு ஆதரவும் . பசியால் பஞ்சத்தால் குடும்பத்தாருக்கு உணவு அளிக்க முடியாமல் தற்கொலை செய்த குடும்பங்கள் எத்தனையோ அவர்களை வஞ்சித்த கொடுமையும் நிறைவுக்கு வருகிறது என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. வரப்போகும் அரசாவது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம்

இன்று(10-12-18) சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் விரிவடைந்த மாநிலச் செயற்குழு கூட்டம் தின் ரோஸ் இணைப்பக வளாகத்தில் நடைபெற்றது.170 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் ராமசாமி தலைமை ஏற்க தோழர் சி.கே.எம் ஆய்படு பொருளை விளக்கினார்.காலவரையற்ற வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது குறித்து விவாதம் நடந்தது. ஆறு தீர்மானங்கள் மூத்த தோழர் சபாபதி அவர்களால் முன்மொழியப்பட்டது. விரிவான விவாதங்களுக்கு பிறகு அவை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. நான்கு மாவட்டங்களில் தலா ஒரு மையத்தில் விளக்க கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட கோட்டச் சங்க மாநாடுகளை டிசம்பர் 31 க்குள் நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டது.

Image may contain: 5 people, including Ragul Anandhan and Elangovan Bsnl, people sitting and outdoor

Image may contain: 6 people, including Babu Varadharaj, people sitting, table and outdoor

Image may contain: 7 people, including Babu Varadharaj, tree and outdoor

Image may contain: 16 people, including Sundara Moorthy, Balaguru Murugaiyan, Ramakrishnan K Tvl, Thirumalai Raman and Suresh Velayudham, outdoor




Image may contain: 1 person

வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைத்தது போல்
BSNL வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது
அரசுத் துறை நிறுவனமான BSNL.தொடர்ந்து வாழ
இயலாத BSNL எப்போது உயிரை விடும் என்று
போட்டி நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
-------------------------------------------------------------------------- நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறதுஅரசுத் துறை நிறுவனமான BSNL.தொடர்ந்து வாழஇயலாத BSNL எப்போது உயிரை விடும் என்றுபோட்டி நிறுவனங்கள் காத்திருக்கின்றன.நெருக்கடியில் இருந்து தன்னை விடுவித்துக்
கொள்ளவும், கண்ணெதிரே தெரிகின்ற மரணத்தில்
இருந்து தப்பித்து தன்னுடைய உயிரைக்
காப்பாற்றிக் கொள்ளவும் இறுதிக்கும் இறுதியான
ஒரு முயற்சியை அண்மையில் BSNL மேற்கொண்டது.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பான AUAB (All Unions and Associations of BSNL)
சார்பாக காலவரம்பற்ற வேலைநிறுத்தத்திற்கு
அறிவிப்பு கொடுக்கப்பட்டது. டிசம்பர் 3, 2018 முதல்
காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்க
ஊழியர்களும் அதிகாரிகளும் ஆயத்தமாயினர்.
ஆனால் என்ன துரதிருஷ்டம்! இந்த
வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கிய
மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுத் தொழிற்சங்கமான
BSNLEU (BSNL Employees Union) வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைத்து விட்டது. ஆம், வேலைநிறுத்தத்தை
வாபஸ் பெற்று விட்டது.வேலைநிறுத்தம் வாபஸ்
என்ற தனது சொந்த முடிவை, கூட்டுப் போராட்டக்
குழுவான AUAB மீது மார்க்சிஸ்ட் சங்கம் திணித்தது.
இதன் விளைவாக திட்டமிடப்பட்ட டிசம்பர் 3
வேலைநிறுத்தம் சுக்குநூறாக நொறுங்கிப்
போனது. அதோடு சேர்த்து BSNLன் எதிர்காலமும்
நொறுங்கிப் போனது.
முற்றிலும் அறிவியல்-தொழில்நுட்பத் துறையான
தொலைதொடர்பில் ஒரு நிறுவனத்தின் வாழ்வு
என்பது அது வைத்திருக்கும் தொழில்நுட்பத்தைச்
சார்ந்தே உள்ளது. இங்கு தொழில்நுட்பம் என்பது
பிரதானமாக அலைக்கற்றையைக் குறிக்கும்.
உலகெங்கும் 5G எனப்படும் ஐந்தாம் தலைமுறை
அலைக்கற்றை மிகவும் பரவலாகி விட்டது.
இந்தியாவில் 5G அலைக்கற்றை (3300-3400 MHz
மற்றும் 3400-3600 MHz) 2019ஆம் ஆண்டின்
பிற்பகுதியில் ஏலம் விடப்படும் என்று
தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர்
திருமதி அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
(பார்க்க:எகனாமிக் டைம்ஸ், செப்டம்பர் 23, 2018).
இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில்
பல்வேறு தனியார் நிறுவனங்கள் 4G
அலைக்கற்றையை வைத்திருக்கின்றன.
ஆனால் BSNL நிறுவனத்துக்கு இன்னமும்
4G அலைக்கற்றை வழங்கப்படவில்லை.
வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவை
வழங்க வேண்டுமெனில், முன்னேறிய
தலைமுறையைச் சேர்ந்த அலைக்கற்றை
அவசியம். ஒரு திரைப்படத்தை ஒருவர்
பதிவிறக்கம் செய்கையில், 4G அலைக்கற்றையானது
வினாடிக்கு 1 ஜிபி (1gbps) வேகம் தரும். ஆனால்
5G அலைக்கற்றையானது வினாடிக்கு 20 ஜிபி
(20 gbps) வேகம் தரும். (பார்க்க: அமைச்சர் மனோஜ்
சின்ஹா நாடாளுமன்றத்தில் கூறியது; எகனாமிக்
டைம்ஸ், பெப்ரவரி 27.2018)
ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்
தற்போது 4G அலைக்கற்றையை வைத்திருக்கின்றன.
அடுத்து 5G அலைக்கற்றையையும் அவர்கள்
வாங்கி விடுவார்கள். ஆனால் BSNLன் நிலை என்ன?
BSNL இடம் 4G இல்லை. 5Gயை நினைத்துப் பார்க்கவே
BSNLஆல் முடியாது. இந்நிலையில் BSNL உயிர்
வாழ்வது எப்படி? ஏற்கனவே கடந்த பல
ஆண்டுகளாகவே BSNLல் வளர்ச்சிப் பணிகள்
எவையும் மேற்கொள்ளப் படவில்லை. இதன்
பொருள் சந்தையின் தேவைக்கும்
வாடிக்கையாளர்களின் தேவைக்கும் BSNL ஈடு
கொடுக்க முடியவில்லை என்பதே. சுருங்கக்
கூறின், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல்
பட்டினி கிடக்கும் நிலையில்தான் BSNL உள்ளது.
நிறுவனத்தின் நிலை இவ்வாறு இருக்க, ஊழியர்களின்
நிலையோ இன்னும் மோசம். அவர்களுக்கான
பழைய ஊதிய விகிதம் காலாவதி ஆகிவிட்டது.
ஊதியம் திருத்தி அமைக்கப் பட வேண்டும். இது
முன்பே செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்
செய்யப்படவில்லை. நிர்வாகமும் அரசும் சேர்ந்து
தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தன.
எனவே ஊதியம் திருத்தி அமைத்தல், 4G அலைக்
கற்றையை BSNLக்கு வழங்குதல் உள்ளிட்ட
கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 3 முதல்
காலவரமற்ற வேலைநிறுத்தம் செய்ய BSNL
தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தன.
நெருங்கி வரும் மரணத்தில் இருந்து BSNLஐக்
காப்பாற்ற வல்ல இந்த வேலைநிறுத்தத்தை
வாபஸ் பெற்று BSNLக்கும் ஊழியர்களுக்கும்
துரோகம் இழைத்துள்ளது மார்க்சிஸ்ட்
தொழிற்சங்கமான BSNLEU. இச்சங்கம் சீதாராம்
எச்சூரியிடம் இருந்து நேரடியாகக் கட்டளைகளைப்
பெறும் சங்கம் ஆகும்.
காலவரம்பற்ற இந்த வேலைநிறுத்தம்
நடைபெறுமானால் அது தமது அரசுக்குப் பெரும்
சங்கடத்தை விளைவிக்கும் என்று கருதிய
மோடி, இந்த வேலைநிறுத்தம் நடக்கக் கூடாது
என்று விரும்பினார். இத்துறையில் முன்பு
அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திடம்
வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் பொறுப்பை
மோடி ஒப்படைத்தார்.
ரவிசங்கர் பிரசாத் சீதாராம் எச்சூரியிடம்
பேசி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற
வைத்தார். சாம பேத தான தண்டம் என்னும்
நான்கு முறைகளில் மூன்றாவது முறையைக்
கையாண்டு யெச்சூரியை வீழ்த்தியுள்ளார்
ரவிசங்கர் பிரசாத் என்கிறது RSS வட்டாரம்..
மார்க்சிஸ்ட் தலைமை பெட்டி வாங்கிக் கொண்டு
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று விட்டது
என்ற செய்தி காட்டுத்தீயாக நாடு முழுவதும்
பரவி உள்ளது. ஒவ்வொரு டெலிபோன் எக்சேஞ்சிலும்
ஒவ்வொரு BSNL அலுவலகத்திலும் ஊழியர்கள்
கொதித்துப்போய் இருக்கிறார்கள். வாயில் கூட்டம்
நடத்தி ஊழியர்களை நேரடியாகச் சந்திக்க
இயலாமல் பயந்து போய்க் கிடக்கிறது
மார்க்சிஸ்ட் சங்கத் தலைமை.
மார்க்சிஸ்ட் தலைமை பெட்டி வாங்கி விட்டது
என்று இரண்டு லட்சம் ஊழியர்களும் கருதுவதை
யாரும் எளிதில் புறக்கணிக்க முடியாது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
பேசுகிறவர்கள் அல்ல BSNL ஊழியர்கள்.
வேலைநிறுத்தம் ஏன் வாபஸ் பெறப்பட்டது
என்பதற்கு தர்க்கபூர்வமாகவோ நியாயமாகவோ
எந்தவொரு காரணத்தையும் மார்க்சிஸ்ட் சங்கத்
தலைமையால் கூற இயலவில்லை. ஏற்கத்தக்க
காரணம் எதுவும் இல்லாத வெற்றிடத்தை கனத்த
சூட்கேஸ்கள் நிரப்புவது இயற்கையே.
4G அலைக்கற்றையை அரசிடம் இருந்து வாங்குவது
என்பது பிரதானமாக இரண்டு அம்சங்களைக்
கொண்டது.
1. அலைக்கற்றையின் விலை. இது பல்லாயிரம்
கோடி ரூபாய் செலவினம். உதாரணமாக அதிதிறன்
வாய்ந்த 700 MHz அலைக்கற்றையின் விலை
(Base price per mega Hertz ) ரூ 11,485 கோடி ஆகும்).
2. அடுத்து 4G சேவையை வழங்குதல் (Service roll out).
இதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவினம்.
இன்றைய நிலையில் லட்சம் கோடி ரூபாய்
செலவழித்து அலைக்கற்றை வாங்கி சேவை
வழங்குவது என்றால்,அதற்குரிய நிதி ஆதாரம்
BSNLல் இல்லை.
ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட எல்லாத் தனியார்
நிறுவனங்களும் தங்களின் சொந்த மூலதனத்தில்
சேவை வழங்கவில்லை. அவை பொதுத்துறை
வங்கிகளிடம் கடன் வாங்கியே தங்களின்
நிறுவனத்தை நடத்துகின்றன. இதைப் பொதுமக்கள்
அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, அரசு வங்கிகளிடம் இருந்து ஏர்டெல்
1,13,000 கோடி ரூபாய் கடன் .வாங்கியுள்ளது. சுனில்
மிட்டல் தன் சொந்த மூலதனத்தில் ஏர்டெல்
நிறுவனத்தை நடத்தவில்லை. இது போலவே,
ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவங்கள் சேர்ந்து
பொதுத்துறை வங்கிகளிடம் 1,20,000 கோடி ரூபாய்
கடனாக வாங்கி உள்ளன.
ஆனால் BSNL நிறுவனம் மட்டுமே தன் சொந்த
மூலதனத்தில் வாழ்ந்து வருகிறது. தற்போது
4G அலைக்கற்றையை வாங்குவதற்கும், சேவை
வழங்குவதற்கும் தேவைப்படும் லட்சம் கோடி
ரூபாயை BSNL எங்கிருந்து பெற இயலும்?
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றுத்தான்
4G சேவையை BSNLஆல் வழங்க இயலும்.
ஆனால், வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம்
கடன் வாங்குவதற்கு மோடி அரசு அனுமதிக்கவில்லை.
இது BSNL மீதான அரசின் மிகப்பெரிய தடை.
அது மட்டுமல்ல, அரசானது BSNLஐ ஒழிப்பதற்கு
முனைப்பாக உள்ளது என்பதற்கு இது
சான்றாகும்.
நிலைமை இவ்வாறு படுமோசமாக (precarious)
இருக்கும்போது, ஒரு வேலைநிறுத்தத்தை
நடத்தி, அரசைப் பணிய வைத்திருக்க வேண்டாமா?
பொத்துத்துறை வங்கிகளிடம் கடன் வாங்க
BSNLக்கு மட்டும் தடை விதித்த அரசின்
ஒரவஞ்சனையை எதிர்த்துப் போராடி இருக்க
வேண்டாமா?
பேச்சுவார்த்தையில் வங்கிக்கடனுக்கான
தடையை நீக்குவது குறித்து எதுவும்
பேசப்பட்டதா? இல்லை. AUAB தலைவர்கள்
கையெழுத்திட்டு வெளியிட்ட வேலைநிறுத்த
வாபஸ் அறிக்கையில் இது குறித்தெல்லாம் எதுவும்
இல்லை.
உடன்பாடு ஏற்படாமல், ஒப்பந்தம் போடாமல்
வேலைநிறுத்தத்தை ஒருதலைப் பட்சமாக
மார்க்சிஸ்ட் சங்கம் வாபஸ் பெற்றுள்ளது.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு
ஒரு எளிய தர்க்கத்தைக் கூட மார்க்சிஸ்ட்
சங்கத்தால் முன்வைக்க இயலவில்லை. இதன்
விளைவாக இன்று இரண்டு லட்சம் ஊழியர்களிடம்
அம்பலப்பட்டும் தனிமைப்பட்டும் கிடக்கிறது
மார்க்சிஸ்ட் சங்கம்.
துரோகம் இன்று தற்காலிகமாக வெற்றி
பெற்றிருக்கலாம். எனினும் இறுதிக்கும்
இறுதியான பரிசீலனையில் இரண்டு லட்சம்
தொழிலாளர்களின் நான்கு லட்சம் கரங்களும்
உயரும்போது, துரோகம் தூள் தூளாகும்.
கோடிக்கால் பூதமடா தொழிலாளி
கோபத்தின் ரூபமடா!

Baba Sahib Dr.B.R.Ambedkar's 62nd remembrance day was observed today by the Nfte n Nftcl Circle Union at Taylors Road quarters complex.Nfte n Nftcl Circle n State President Com.M.K.Ramaswamy n V.Babu garlanded the statue n paid their respect.Coms.K.Sabapathy,V.Babu,K.M.Elangovan, & M.Nagarajan spoke about the achievements of Dr.Ambedkar.

O.P. குப்தா ஒரு தீர்க்கதரிசி
நமது தொலை தொடர்பு இலாகாவை இரண்டு நிலைகளில்தான் மதிப்பிட முடியும் அது குப்தாவிற்கு முன் , குப்தாவிற்கு பின் என்றுதான் .
தோழர்.குப்தாதான் கார்பரேஷனுக்கு ஒப்பு கொண்டார் நங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னவர்கள்தான் BSNL உருவான அன்று முதல் பந்தில் உட்கார்திருந்தது.நங்கள் கார்பொரேஷன்னுக்கு வரவில்லை என்று இன்றைய ITS அதிகாரி போல் இருந்திருக்கலாம் , ஆனால் குப்தாவை குறை சொல்லியே சங்கம் நடத்த தெரிந்த இவர்களுக்கு அவருக்கு பின் சங்கத்தை எவ்வாறு நடத்துவது என்று தெரியவில்லை. விளைவு நடுத்தெருவில் நாம் . தோழர் .O.P. குப்தா ஒரு தீர்க்கதரிசி இதனை தவிர்க்க இயலாது, அதனை ஏற்று, நமது தோழர்களுக்கு எதாவது இயன்றவரை செய்ய வேண்டும் என்று யோசித்து தொலைநோக்கு பார்வையோடு பார்த்த தலைவன் வாழ்ந்த காலம் ஓ.பி.குப்தாவிற்கு முன். அடுத்த காலம் ஓ.பி.குப்தாவிற்கு பின் ஒன்றுமே சொல்லத்தேவையில்லை போராடி பெற்ற சலுகைகளையும் உரிமைகளையும் இழந்த காலம் அதுதான் இன்றைய காலம். தோழர் குப்தா செப்டம்பர் போராட்டத்தில் யாரையும் நம்பி போராட்டத்தை துவக்கவில்லை தன்நம்பிக்கையை வைத்து களம் கண்டார் வெற்றியடைந்தார் . அன்று மத்திய அரசாங்கம் கூறியது 1000 நாள் போராடினாலும் பென்ஷன் என்பது உங்கள் நிறுவனத்திற்கு கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறியாது . போபால் சென்ற அன்றைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை மூன்றாவது நாள் போராட்டத்திற்கு விமானம் மூலம் வரவைத்து ஒரு நலத்தோரு பென்ஷன் உடன்பாட்டை போட்ட ஓ.பி.குப்தாவின் சங்கமா ? இன்று அமைச்சருக்காக ஏழுநாட்கள் காத்திருக்கும். அடகு பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் வைர அட்டிகை கழுத்தில் அழகுதரும் என்று எதிர்பார்ப்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டது போன்று இருக்கிறது
Image may contain: 4 people, including Babu Varadharaj, people smiling, people sitting and text
Image may contain: text

டிசம்பர்- 3 துவங்கும் நாடுதழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட இன்றைய பொழுதை பயன்படுத்திக் கொள்வோம். இன்று (டிசம்பர் 2)நிர்வாகம் நமது தலைவர்களை மதியம் 12 மணியளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளது. எப்படியாவது நாளை துவங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்திட நிர்வாகம் சாகசங்கள் செய்கிறது. அது நாம் முன்வைத்துள்ள மிக நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்யாமல் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல வேலைநிறுத்தம் வேண்டாம் என்பதை மட்டுமே வற்புறுத்தி வருகிறது. இது நியாயமற்ற அணுகுமுறையாகும்.
ஜனவரி 2007 க்கு பின்னர் கடந்த 12 ஆண்டாய் நமக்கு ஊதியம் மாறாத அவலம் தொடர்கிறது. 2002 ஜனவரிக்குப் பிறகு அலவன்ஸ்கள் மாறாமல் " என்றும் 16 ஆக மார்கண்டேயனைப் போல" நீடிக்கும் கொடுமை. இந்த அக்கிரமம் போதாதென்று நிர்வாகம் அலவன்ஸ்கள் குறித்து பேச முடியாது என சண்டித்தனம் செய்கிறது. "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல" நமது அலவன்ஸ்களை 31-12-2016 தேதியில் இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப் போவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இந்த அநீதிகளை களைய முயலாமல் வெறுமனே நமது வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வற்புறுத்துவதால் எந்த பயனும் இல்லை.
முக்கிய பிரச்சினைகளான ஊதிய மாற்றம் மற்றும் அலவன்ஸ்கள் உயர்வு குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை எனில் வேறு எந்த காரணம்/ சாக்கு சொல்லி ஏ.யூ.ஏ.பி.தலைமை இப்போதைய வேலைநிறுத்தத்தை தவிர்க்க முயன்றால் அது நம் அனைவருக்கும் பெரும் இழிவையும் இழப்பையும் ஒருசேர அளிக்கும். எனவே காலவரையற்ற வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி துவங்குவோம். போராடாமல் புதுவாழ்வு இல்லை.
போராட்ட வாழ்த்துக்களுடன்
சி.கே.மதிவாணன்
தலைவர்/ஏ யூ ஏ பி
சென்னை தொலைபேசி மாநிலம்.

NFTCL- தமிழ்மாநில செயற்குழு, 29-11-2018
கேளம்பாக்கம், சென்னை.
--------------------------------------
தீர்மானங்கள்:
-----------------------
** AUAB- வின் நாடுதழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்..
NFTCL-தேசிய சங்கத்தின் அறைகூவலை ஏற்று..NFTCL- தமிழ்மாநில சங்கம் முழுவீச்சில் பங்கேற்பது..!
** புதுடெல்லியில் நடைபெறவுள்ள NFTCL- அகில இந்திய மாநாட்டுக்கான நன்கொடை உள்ளிட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது..!
** விடுபட்ட போனஸ்,
7- ஆம் தேதிக்குள் முழுமையான மாத சம்பளம், இன்றளவும் பல மாவட்டங்களில் அமலாகாமலிருக்கும்" திறனுக்கேற்ற ஊதியம்" போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாண.. நீதிமன்றத்தை அணுகுவது, வலுவான இயக்கங்கள் நடத்துவது..! எனவும்,
** இம்மாநில செயற்குழு நடத்துவதற்கு அழகான இடவசதியையும் அருமையான உணவையும் உவந்தளித்த.. 30-11-2018- ல் பணிநிறைவு பெறுகின்ற அன்பு தோழர் .முத்துகருப்பன் -TT அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.Image may contain: 7 people, including S Mahalingam, Subbarayan Lakshman and Milton Yonas, people sitting
Image may contain: 7 people, people sitting
Image may contain: 5 people, including Ragul Anandhan, Babu Varadharaj and Subramanian Ravi, people sitting
Image may contain: one or more people and people standing
Image may contain: 3 people, including Babu Varadharaj, people smiling, people sitting and people standing
Image may contain: 2 people, including Natarajan Krishnamoorthy, people standing
Image may contain: 4 people, including Ragul Anandhan, people smiling, people sitting and text
Image may contain: 3 people, including Babu Varadharaj, people standing, people sitting and indoor
Image may contain: 3 people, people on stage, people sitting, people standing and indoorImage may contain: one or more people and people sitting

Image may contain: 3 people, including Ragul Anandhan, people standing

AITUC 13-வது கடலூர்  மாவட்ட மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது .மீண்டும் M .சேகர் மாவட்ட செயலராக தேர்தெடுக்கப்பட்டார் .

Image may contain: one or more people, crowd, tree and outdoor
Image may contain: 9 people, including Sundara Moorthy, people smiling, people standing and crowd
Image may contain: 11 people, including Kottiappan Shanmugam, Arulrajan Durai and Sundara Moorthy, people smiling, people standing
Image may contain: one or more people, crowd and indoor


திங்கள், 3 டிசம்பர், 2018


AITUC கடலூர் மாவட்ட 13வது மாநாட்டில் மீண்டும் ஏகமனதாக தோழர் M.சேகர் AITUC கடலூர் மாவட்ட பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.நமது 

AITUC கடலூர் மாவட்ட 13வது மாநாட்டில் மீண்டும் ஏகமனதாக தோழர் M.சேகர் AITUC கடலூர் மாவட்ட பொது செயலாளராக தேர்வு
செய்யப்பட்டார்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

O.P. குப்தா ஒரு தீர்க்கதரிசி
நமது தொலை தொடர்பு இலாகாவை இரண்டு நிலைகளில்தான் மதிப்பிட முடியும் அது குப்தாவிற்கு முன் , குப்தாவிற்கு பின் என்றுதான் .
தோழர்.குப்தாதான் கார்பரேஷனுக்கு  ஒப்பு கொண்டார் நங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னவர்கள்தான் BSNL உருவான அன்று முதல் பந்தில் உட்கார்திருந்தது.நங்கள் கார்பொரேஷன்னுக்கு வரவில்லை என்று இன்றைய ITS அதிகாரி போல் இருந்திருக்கலாம் , ஆனால் குப்தாவை குறை சொல்லியே சங்கம் நடத்த தெரிந்த இவர்களுக்கு அவருக்கு பின் சங்கத்தை எவ்வாறு நடத்துவது என்று தெரியவில்லை. விளைவு நடுத்தெருவில் நாம் . தோழர் .O.P. குப்தா ஒரு தீர்க்கதரிசி இதனை தவிர்க்க இயலாது, அதனை ஏற்று, நமது தோழர்களுக்கு எதாவது இயன்றவரை செய்ய வேண்டும் என்று யோசித்து தொலைநோக்கு பார்வையோடு பார்த்த தலைவன் வாழ்ந்த காலம் ஓ.பி.குப்தாவிற்கு முன்.  அடுத்த காலம் ஓ.பி.குப்தாவிற்கு பின் ஒன்றுமே சொல்லத்தேவையில்லை போராடி பெற்ற  சலுகைகளையும் உரிமைகளையும் இழந்த காலம் அதுதான் இன்றைய காலம். தோழர் குப்தா செப்டம்பர் போராட்டத்தில் யாரையும் நம்பி போராட்டத்தை துவக்கவில்லை தன்நம்பிக்கையை வைத்து களம் கண்டார் வெற்றியடைந்தார் . அன்று மத்திய அரசாங்கம் கூறியது 1000 நாள் போராடினாலும் பென்ஷன் என்பது உங்கள் நிறுவனத்திற்கு கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறியாது . போபால் சென்ற  அன்றைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை மூன்றாவது நாள் போராட்டத்திற்கு விமானம் மூலம் வரவைத்து ஒரு நலத்தோரு பென்ஷன் உடன்பாட்டை போட்ட ஓ.பி.குப்தாவின் சங்கமா ? இன்று அமைச்சருக்காக ஏழுநாட்கள் காத்திருக்கும். அடகு பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் வைர அட்டிகை கழுத்தில் அழகுதரும் என்று எதிர்பார்ப்பது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்டது போன்று இருக்கிறது.

புதன், 21 நவம்பர், 2018

22-11-2018 அனைத்து மாவட்ட தலைநகரங்களில் NFTCL அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து ..: மாதந்தோறும் சம்பளம் BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏழாந்தேதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் போக்கினை கண்டித்து நமது மாநிலச் சங்கம் 22-11-2018 ல் ஆர்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து நமது சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.கே.எம். இன்று இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.நாளை கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கும் சூழல் உள்ளது.எனவே நமது மாநிலச் சங்கம் திட்டமிட்ட 22-11-18 ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. உடனடியாக தலையிட்டு பிரச்சினை தீர்வுக்கு உதவிய தோழர் சி.கே.எம்.அவரகளுக்கு 



.Image may contain: 2 people, including Ragul Anandhan, beard, hat and outdoor
       நமது நன்றி!!! நன்றி!!! நன்றி!!!.....
                                        தோழமை அன்புடன்
                                             எஸ்.ஆனந்தன்
                                     மாநிலச் செயலாளர்
                                            NFTCL, தமிழ்நாடு.

பிரச்சினையின் தீர்வு இருக்கட்டும் ஒருபுறம் 

எந்த பிரச்சனைக்கு ஆவது நாம் இப்படி இறங்கி வேலை செய்கிறோமா ? என்பதை அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் யோசிக்க வைத்த இன்றைய நிகழ்வு அதுதான் நமது பொதுச் செயலாளர் தோழர் சி கே மதிவாணன் இன்று செய்த செயல் .
புயலால் பாதிக்கப் பட்டிருக்கும் திருவாரூர் தஞ்சை தூத்துக்குடி அறந்தாங்கி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மல்லி செக்யூரிட்டி ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்காததை தமிழ்நாடு சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலாளரிடம் வருத்தத்தை பதிவு செய்தேன் தோழர் சிறிதளவும் யோசிக்காமல் நான் நேரடியாக சென்று அந்த ஒப்பந்ததாரரை சந்தித்து சம்பள பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்துகிறேன் என்றார் கேட்கவே வியப்பாக இருந்தது சிறிது நேரத்தில் அவர் முகநூலில் போட்டிருக்கும் பதிவை கண்டவுடன் அகம் மகிழ்ந்தேன் இன்று தொழிற்சங்கம் நடத்த தெரியாத தலைவர்களும் , நாங்களும் தொழிற்சங்கம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பெயரளவில் நடத்திக்கொண்டிருக்கும் தொழிற்சங்கவாதிகள் என்று ஏமாற்றும் தலைவர்கள் மத்தியில் இன்று நமது தோழர் செய்த செயல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரின் மனதிலும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.தான் கொண்ட கொள்கையும் தான் நடந்து செல்லும் பாதையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு உயர்வை ஏற்படுத்த வேண்டுமென்று இயங்கிக் கொண்டிருக்கும் தோழர் சி கே மதிவாணன் அவர்களுக்கு தமிழ்நாடு மாநில சங்கத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம் நன்றிகள் பல ....
Image may contain: 1 person, standing


சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவோம் என்ற தோழர் குப்தா அவர்களின் பொன்மொழியை இதயத்தில் ஏந்தி செயலாற்றும் தோழர் CKM அவர்களின் பாராட்ட வேண்டிய செயல்பாடு.
மனிதாபிமான அடிப்படையில் "மல்லி" கான்ட்ராக்டருக்கு வேண்டுகோள்.:
இன்று (21-11-2018) நேரடியாக" மல்லி" கான்ட்ராக்டர் அலுவலகம் சென்று நான் அதன் தலைமை நிர்வாகி கர்னல் மலையப்பன் உள்ளிட்டவர்களை சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தேன். குறிப்பாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வற்புறுத்தினேன். நேற்று வங்கிகளில் ஊதியம் போடப்பட்டு விட்டதாக அவர்கள் கூறினர். அங்கிருந்தே திரு. வினோத் PGM தஞ்சாவூர் BSNL அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் இத்தகவலை உறுதிப்படுத்தினார். இன்று வங்கிகள் விடுமுறை என்பதால் நாளைக்கு சம்பளம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கையில் கிடைக்கும் என்று நம்புகிறேன். போனஸ் தொகை சிலருக்கு மிகவும் குறைவாக வழங்கப்பட்டதையம் சுட்டிக் காட்டினேன். அதற்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு மாதம் மட்டுமே பணிபுரிந்ததே காரணம் என விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில் தூத்துக்குடி ஜெய்சங்கரை மீண்டும் பணியமர்த்துவது, மீஞ்சூர் மனோகரனின் சென்னை இடமாற்றல் உள்ளிட்ட பிரச்சினைகளில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண நான் அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உள்ள இன்னல்களை "மல்லி" கான்ட்ராக்டர் விரைவில் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன்.
சி.கே.மதிவாணன்.
21-11-2018/சென்னை.

செவ்வாய், 20 நவம்பர், 2018

புயலில் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கும் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாதம் கூட சரியாக சம்பளம் போடாத ஒப்பந்ததாரரை ஏன் ஒப்பந்தத்தில் வைத்திருக்க வேண்டும் நமது பிஎஸ்என்எல் நிர்வாகம் ? . BSNL நிதிப்பற்றாக்குறை பற்றி அனைவரும் அறிந்த விஷயமே ஆனாலும் ஒப்பந்ததாரர்கள் பிஎஸ்என்எல் கொடுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்ய 
நடுத்தர கார்கள் போல் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயம் .BSNL பணம் கொடுத்தால் மட்டுமே அதை வாங்கிக் கொடுப்போம் என்ற நிலை என்பது முதலீடு வைக்காமல் லாபத்தை மட்டும் சம்பாதிக்க நினைக்கும் ஒப்பந்ததாரர்கள் தேவையா? இது போன்ற அவல நிலை தொடராமல் இருக்க 22/11/2018 அன்று நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்



போராட தயாராவோம்
அன்பார்ந்த தோழர்களே !!!தோழியர்களே !!!
அக்டோபர் மாத சம்பளம் 20 தேதி ஆகியும் நமது கையில் கிடைக்காத நிலையே நிலவுகிறது இதனை கண்டித்து பலமுறை நிர்வாகத்திடமும் ஒப்பந்ததாரரிடம் பேசி பயன் இல்லாத காரணத்தால் வருகின்ற
22 11 2018 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று மாநில சங்கத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து தலைநகரங்களில் மாநில நிர்வாகத்தை கண்டித்தும் ஒப்பந்ததாரர்களை கண்டித்தோம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட மாநில சங்கம் கேட்டுக்கொள்ளப்படுகிறது போராடுவது புதிதல்ல!!!பிரச்சனைகளும் புதிதல்ல !!!புதியது என்னவென்றால் மாத சம்பளம் பிரதி மாதம் 7ஆம் தேதி கிடைப்பதுதான் !!!அதை பெற வலுவான போராட்டங்கள் மட்டுமே வழிவகை செய்யும் அதற்கான களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம் போராடுவோம் வெற்றி பெறுவோம் 
Image may contain: 3 people, people sittingவாழ்த்துக்களுடன் 

S.ஆனந்தன் மாநிலச் செயலாளர் NFTCL தமிழ்நாடு

செவ்வாய், 13 நவம்பர், 2018

ஒரு விரல் புரட்சி என்றால் என்னவென்று இதை பார்த்துதான் தெரிய வந்தது 

செவ்வாய், 30 அக்டோபர், 2018

அருமையான  தோழர்.ஆறுமுகம் பார்ப்பதற்கு சாந்த வடிவம் அவர் பேசுவதில் அடக்கம் . ஆனால்  ஒப்பந்த தொழிலாளிக்கு பிரச்சனை என்றால் அணல் பறக்கும் பேச்சு ...பணி ஓய்வு காலம் சிறக்க மாநில சங்கம் வாழ்த்துகிறது .

Image may contain: one or more people and people standing

மீண்டும் ஓர் வெற்றி பயணம்.....
 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் என்று பத்து வருடத்திற்கு மூன் எழுப்பிய பிரச்சனை இன்று ஒருஅளவுக்கு நிறைவை எட்டியிருக்கிறது என்றால் அது நமது சங்கத்தையே  சாரும் .ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் என்று கேட்டபோழுது நிரந்தர ஊழியர்களுக்கு கொடுக்க படாத ஓன்று  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எப்படி கிடைக்கும் ? என்று ஏளனம் செய்தவர்கள் ,இன்று நமது சங்கம் செய்தது, நமது முயற்சிதான் போனஸ் பெற்று தந்தது என்று ஊரான் வீட்டு பிள்ளைக்கு பெயர் வைக்கிறது . குப்தாவை குறை சொல்லியே வாழ்ந்த கூட்டம்ஒன்று தோழர் .சி.கே.மதிவாணன் பார்த்து பயந்து அலறும் கூட்டம் ஒன்று.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் ,உரிமைகள் பெற NFTCL என்றும் முன்நிற்கும் என்பதை எடுத்துக்காட்டும் உத்தரவு
 Dy .CLC .  உத்தரவு இதனை பயன்படுத்தி  போனஸ் பெறாத தோழர்களை பற்றி யோசிப்போம்.அனைவருக்கும் போனஸ் ரூபாய் 7000/- என்று நமது சங்கத்தின் சார்பாக திருச்சியில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டின் தீர்மானத்தை வெற்றி பெற அணைத்து முயற்சிகளையும் எடுப்போம் .
 





ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சிக்கலிருந்து வெளியேறும் வழி..... BSNL இன்றைய நிலைமை....காரணம் யார். நாம் என்ன செய்ய வேண்டும்......



தோழர்களே... பல்வேறு பகுதிகளிலிருந்து பலவகையான கவலை கொள்ளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சென்ற வாரம் நடந்த தலைமைபொதுமேலாளர்கள் கூட்டத்தில் மஹாராஷ்ட்ரா மாநில தலைமை பொதுமேலாளர் தொழிலாளர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்துக் கொண்டுதரலாம் என ஆலோசனை வைத்ததாக ஒரு தகவல் பரவியுள்ளது. இது உண்மையா இல்லையா என்று சந்தேகிக்கும் நேரத்தில் இன்று கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்ட பொது மேலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொலைபேசி நிலையங்களின் அன்றாட செலவுகள், மின்கட்டணம் போன்ற செலவுகளுக்கு தொழிலாளிகளிடமிருந்து வட்டி இல்லா கடன் வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளது.

நமது தொழிலாளர்கள் அனைவரும் புதிய சம்பள விகிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த வேளையில் இது போன்ற தகவல்கள் மிகுந்த கவலையை உண்டாக்கியுள்ளது என்றால் மிகையல்ல...

இதிலிருந்து எப்படி நாம் வெளிவருவது.. இதற்காக பயந்து நாம் இருக்கவேண்டியது இல்லை தோழர்களே!


நாம் 2000 ஆண்டில் பொதுத்துறையாக மாற ஒத்துக்கொண்ட போது மூன்று நிபந்தனைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவை

1. அனைவருக்கும் அரசு தொகுப்பு நிதியிலிருந்து பென்ஷன்
2. அனைவருக்கும் வேலை பாதுகாப்பு
3. BSNL நலிவுறாமல் இருக்க வேண்டிய அளவுக்கு நிதி பாதுகாப்பு.

ஆனால் இன்றுவரை முதல் இரண்டு வாக்குறுதிகளூம் காப்பாற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மூன்றாவது வாக்குறுதி காற்றோடு போனது. அதுதான் உண்மை.

2004 இலிருந்து தான் ஒருவனே ஆகப்பெரும் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று கூறிக்கொண்ட BSNLEU இந்த மூன்றாவது வாக்குறுதிபற்றி எந்த கவலையும் படவில்லை என்பது மிக வருத்தத்தை தரக்கூடிய விஷயம்.

இரண்டாவது தலைமுறை அலைவரிசை வந்த போது அப்போது நடைபெற்ற ஏலத்திலே நாம் பங்குபெறாமல் தடுக்கப்பட்டோம். நம்மிடமிருந்து ரூ40,000 கோடி இதற்காக வலுக்கட்டாயமாக அரசினால் பிடுங்கப்பட்டது . இதுதான் நமது சரிவின் ஆரம்பம்.

அதன்பிறகு நம்மை விரிவுபடுத்திக்கொள்ள நம்மை அரசு அனுமதிக்கவில்லை. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் தற்போதய சூழலுக்கு ஏற்ப தம்மை விரிவுபடுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டமல் BSNLEU சங்கம் எதுவும் செய்யாமல் வாளாவிருந்ததுதான் நமது துரதிஷ்டம்.

நமது கம்பெனிக்கு என்வாயிற்று? ஏன் இந்த அவல நிலை? இதற்காக நாம் சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசிப்பதுகூட தவறில்லை என நினைக்கிறேன்.

இதற்கான திட்டங்களை நாம் உடனடியாக தொடங்கவேண்டும். இந்த அரசு நமக்கு நிதிப்பாதுகாப்பு தந்து நம்மை காப்பாற்ற வேண்டியது அதன் தலையாய கடமை என்பதை புரிய வைக்க வேண்டும். இதற்காக நாம தெருவில் இறங்கி போராட் வேண்டும். ஒவ்வொரு இந்திய மக்களும் BSNL  ஏன் இந்த நிலைமைக்கு ஆனது. இதற்கான காரணம் என்ன என்பதை உணரும் வண்ணம் நமது போராட்டம் இருக்க வேண்டும். இது மத்திய அரசு பொதுத்தேர்தலை சந்திக்கும் தருணம். இதுவே பொதுமக்களிடம் நம்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நமக்கு ஆதரவு திரட்டும் நேரம். 

நமது வாழ்வாதாரம் இந்த BSNL ஐ நம்பியே உள்ளது. ஆனால் சில பொதுமேலாளர்கள் கேட்ட ஊழியரிடமிருந்து வட்டி இல்லா கடனை நான் கடுமையாக எதிர்க்கிறேன். 

இது நமது பிரச்சனையை தீர்க்காது. நாம் நம்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் கதவை தட்டுவது ஒன்றே தீர்வளிக்கும்.

தோழமை வாழ்த்துக்களுடன்

சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலர் NFTE-BSNL
06-10-2018