Friday, 30 June 2017

Image may contain: one or more people and text


தீர்வை நோக்கி… திறனுக்கேற்ற                                 ஊதியம் ....
ஒப்பந்த ஊழியர்கள் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு
அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும் என NFTCL தொடுத்த வழக்கின் விசாரணை
29/06/2017 அன்று சென்னையில்...
துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்றது.
தமிழகத்தில் குடந்தை மற்றும் தஞ்சாவூர் தவிர
ஏனைய மாவட்டங்களில் இருந்து உண்மையான தகவல்
மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்படவில்லை.
சென்னைத்தொலைபேசியில் 2 கோட்டங்களில்
இருந்துதான் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இப்பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் மேலும் காலதாமதம் செய்வது முறையானது அல்ல என்றும் DY.CLC உறுதியாக BSNL அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பல்வேறு விவாதங்களுக்குப்பின்…
ஒப்பந்த ஊழியர்களை அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ப
திறன் அடிப்படையில் பிரித்து உரிய கூலி வழங்குவதற்கு
ஒரு குழு அமைக்கப்படும் எனவும்...
அந்தக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்..
பணிகள் தரம் பிரிக்கப்படும் எனவும்…
பணிக்கேற்ற கூலி வழங்கப்படும் எனவும்...
இவை யாவும் விரைவில் செய்து முடிக்கப்படும் எனவும்...
தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிக கால அவகாசம் தர இயலாது எனவும்...
மேற்கண்ட பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும்…
அவசியமெனில் தமிழகம் மற்றும் சென்னை முதன்மைப் பொதுமேலாளர்களுக்குத் தாம் இதுபற்றி நேரில் வலியுறுத்த
தயாராக இருப்பதாகவும் DY.CLC தெரிவித்தார்.
அடுத்த கூட்டம் 26/07/2017 அன்று நடைபெறும் எனவும்...
அதில் இப்பிரச்சினை இறுதி செய்யப்படவேண்டும் எனவும்...
DY.CLC முடிவாக அறிவித்தார்... சென்னைத்தொலைபேசியிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டது.Image may contain: 3 people, people sitting
சென்னைத்தொலைபேசியில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்…
அனைத்துப்பணிகளும் ஒப்பந்த முறை TENDER மூலமே செயல்படுத்தப்படவேண்டும்…
QUOTATION மூலம் பணிகள் செய்வது நிறுத்தப்படவேண்டும்…
மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக்கூலி அமுல்படுத்தப்பட வேண்டும்..
என நமது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநில நிர்வாகத்திற்கு உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு திறன் அடிப்படையில் கூலி வழங்கும் பிரச்சினை ஜூலை 26க்குள் சாதகமாக முடிக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கான சூழலை உருவாக்கிய அதிகாரிகளுக்கும்... DY.CLCக்கும் நமது நன்றிகள்.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள்
NFTCL
தோழர்.ஆனந்தன் – மாநிலச்செயலர்
தோழர்.பாபு – மாநிலத்தலைவர்
தோழர்.மாரி – மாநில செயல்தலைவர்
தோழர்.சம்பத் – மாநிலப் பொருளர்
TNTCW
தோழர்.முருகையா
தோழர்.பழனிச்சாமி
தோழர்.வினோத்
தமிழ் மாநில நிர்வாகம்
திரு.இராஜசேகரன் AGM
சென்னைத்தொலைபேசி
திரு.கருப்பையா DGM
திருமதி.சங்கரி AGM
பிரச்சினை தீர்வில் மனித நேயத்துடன்
உரிய முறையில் பங்காற்றிய
திரு.இராஜசேகரன் AGM மற்றும்
திரு.கருப்பையா DGM ஆகியோருக்கும்
DY.CLC அவர்களுக்கும் நமது நன்றிகள்….

Saturday, 24 June 2017

நமது சம்மேளன உதவி தலைவர் தோழர். 

அசோக்ராஜானின் அருமையான  கருத்து 

முகநூலில்  இருந்து .......
Image may contain: 5 people, outdoor

பசுமை நினைவுகளை பரிமாறிக் கொள்வோம் :
* அன்று யாரோ ஒரு மதிவாணன் மீது கொலைப்பழி,காவல்துறை தேடுகிறது என்ற செய்தி வந்தபோது அது இந்த மதிவாணன்தான் என்று தேர்தல் நேரத்தைக்கூட பாராமல் மாநிலம் முழுதும் அவதூறு பரப்பி மகிழ்ந்தது.
* மாசில்லாத மாலியை "மானமிருந்தால் பதவியை ராஜினாமா செய்" என்ற மேதகு மேதாவியின் முழக்கம்.

* சம்மேளனச் செயலர் ஜெயராமனுக்கு "பனியன் வியாபாரி"என்று பட்டமளித்த குடந்தைக்குன்று.
மாநில மாநாட்டிலும் மாநாட்டிற்குப் பின்னும் திசை திருப்பலே இல்லாமல் பொங்கி வழிந்தோடும் ஒற்றுமை :
* பணி நிறைவு பெற்ற ஒரு தலைவருக்கு 'அல்வாவும்' இன்னொரு தலைவருக்கு 'ஆடம்பர விழாவும்' எடுத்து அசத்தியது.
* மேடையேறிய மதுரை சார்பாளரை அடியாள் இல்லாமல் தனியாளாக இடித்துத் தள்ளிய ஜாம்பவான்.
* சிறப்பு அழைப்பாளர் பதவிகளை ஒரு பக்கம் கிள்ளிக் கொடுத்து விட்டு மறு பக்கம் அள்ளிக் கொண்டு சென்றது.
* சேலம் செயற்குழுவிற்கு மாரி வந்தால் மாறி மாறி அடிப்போம் என மிரட்டல்.
* மாவட்டச் செயலர் மீதே நடவடிக்கை என வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம்.
* மாநிலக் கவுன்சில் உறுப்பினர்கள் அனைத்தும் எமக்கே என ஏப்பம் விட்டது.
எதிரிகளாக நடத்துவதுதான்
எதிர்காலக் கடமையோ.
எல்லைக்குள்ளேயே நடக்கும்
எல்லையில்லா போக்கு.
விடியலைத் தேடினாலும்
விடாது கருப்பு.

Thursday, 22 June 2017


ஒப்பந்த ஊழியர்களை அவர்கள் 

பார்க்கும் வேலைத்தன்மையின் 

அடிப்படையில் தரம் பிரித்து 

விவரங்கள் அளித்திட மாநில 

நிர்வாகம் மாவட்ட 

நிர்வாகங்களைப் பணித்திருந்தது. 


இன்னும் 7 மாவட்டங்களில் இருந்து 

விவரங்கள் வரவில்லையெனவும்.. 

29/06/2017 அன்று கூட்டம் முத்தரப்பு 

பேச்சுவார்த்தை Dy.CLC 

முன்னிலையில் 

நடைபெறவிருப்பதால் உடனடியாக 

விவரங்கள் அனுப்பப்படவேண்டும் 

எனவும் மாநில நிர்வாகம் 

கேட்டுக்கொண்டுள்ளது. பல 

மாவட்டங்களில் இருந்து 

NIL REPORTஅனுப்பப்பட்டுள்ளதாக 

அறிகிறோம். ஆனாலும் நாம் அதை 

மறுக்கும்பட்சத்தில்நமக்கான 

ஆதாரங்கள் வேண்டும் ஆகவே 

நமது  மாவட்ட  செயலர்கள் உங்கள் 

மாவட்டத்தில் பணிபுரியும் Skilled 

Semi-Skilled ,Unskilled என நமக்கு 

தெரிந்த விவரங்களை மாநில 

சங்கத்திற்கு தெரிவிக்கும்படி 

கேட்டுக்கொள்கிறோம் .


துணை முதன்மைத் தொழிலாளர் 

ஆணையர் முன்பு நிர்வாகத்தின் 

வாய்மையற்ற செயலை 

தோலுரிப்போம்… நமது 

உரிமையை.. கோரிக்கையை 

வலுவாக NFTCL சார்பாக 

எழுப்புவோம்..

Monday, 12 June 2017

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை !!!
ஜூன் - 12
தோழர்.விச்சாரே நினைவு நாள்
தோழர்.விச்சாரே

உயரத்திலே அகத்தியன்…
அகத்திலே உயர்ந்தவன்…
NFTE இயக்கத்திற்கு தூணானவன்…
எழுத்தர் கேடருக்கு துணையானவன்…
ஜெகனிடம் பித்தானவன்…
குப்தாவிடம் குழந்தையானவன்…
மராட்டியத்தை…
வெற்றி இடமாக மாற்றியவன்..
NFTEயின் வெற்றிடத்தை நிரப்பியவன்…
விச்சாரேயின் வெற்றியிடமும் நிமிரவில்லை…
விச்சாரேயின் வெற்றிடமும் நிரம்பவில்லை…
நினைவுகள் அகலா அன்புத்தலைவனை….
நினைவு நாளில் நினைந்தே வணங்குகிறோம்…
சிவந்தது… சேப்பாக்கம்…
தோழர்.அசோக்ராஜ் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்..

தோழர்.மதிவாணன் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கிறார் 
10/06/2017 – சென்னை சேப்பாக்கத்தில்…
காலையில் திரு.அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில்
நாடு நலம் பெற உழைத்திடும் விவசாயிகளின் போராட்டம்….
மாலையில் தோழர்.மதிவாணன் அவர்கள் தலைமையில்…
BSNL நிறுவனம் வளர்ந்திட நாளும் உழைத்திடும்
ஒப்பந்த தொழிலாளர்களின் உணர்ச்சிமிகு போராட்டம்…

இந்த தேசத்தின் முதுகெலும்பான…
விவசாயிகளும்…. தொழிலாளர்களும்
வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலைதான்
இந்த தேசத்தை ஆளுகின்ற ஆட்சியாளர்களின் சாதனைகள்…

சென்னை சேப்பாக்கம் உச்சிப்பொழுதில் இருந்தே…
ஒப்பந்த ஊழியர்களால் உணர்ச்சி மேலிட ஆரம்பித்தது…

மாநிலத்தலைவர் தோழர்.பாபு தலைமையேற்க…
மாநில செயல்தலைவர்.தோழர்.மாரி வழிநடத்த…
அகில இந்திய உதவித்தலைவர் தோழர்.அசோக்ராஜ் துவக்கி வைக்க…
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் விளக்கவுரையாற்ற…
தோழர்கள்.அன்பழகன், இராஜசேகரன்,
இளங்கோவன்,சுப்பராயன் ஆகியோர்
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளையும்
அதன் தீர்வில் NFTCL பங்கினையும் விவரிக்க…

பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள்
அரசியல் தெளித்த… அற்புத உரை நிகழ்த்த…
பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சியாளர்களும்…
தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் படம்பிடிக்க…

உணர்ச்சி மிகு முழக்கங்களோடு… 
உற்சாக மிகு பங்களிப்போடு…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
வந்த ஒப்பந்த ஊழியர்களின் பங்களிப்பில்
தர்ணா எழுச்சியோடு…முடிவுற்றது.

காரைக்குடி மாவட்டத்தில் இருந்து
40க்கும் மேற்பட்ட தோழர்களும்…
11 தோழியர்களும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்…

ஒப்பந்த ஊழியரின் வாழ்வை மேம்படுத்துவதில்
NFTCL தொடர்ந்து முன் செல்லும்...

Sunday, 11 June 2017

Image may contain: 8 people, people smiling, crowd and indoor

Image may contain: 8 people, people smiling


Image may contain: 9 people, crowd and indoor


VERY INSPIRING DHARNA BY NFTCL:

 On 10-06-17 near Chepauk guest house for more than three hours five hundred comrades continuously shouting slogans highlighting the demands of Contract Labourers in Tamilnadu. The State Executive Meeting at Tirunelveli held on 28-04-17 took two decisions to hold a demonstration at all the district headquarters on 20-05-17 and conduct a Dharna in State Headquarters ( Chennai) to demand settlement of Telecom Contract Labourers issues. Accordingly the programme on 20-May was successfully observed in all districts. Today the massive Dharna at Chennai also a huge Success. The next course of action will be decided by the Tamilnadu State Committee of NFTCL in the next state EC meeting to be held in July. The venue and exact date will be announced after consulting the District Secretaries. Our success in compelling the managements to agree for payment of wages category wise ( Unskilled/ Semi skilled/ Skilled/ Highly Skilled) through filing a case ( raising a dispute) with Deputy Labour Commissioner ( Central) in Chennai has enthused the mass of contract Labourers which has resulted in the massive mobilisation of contract Labourers for today's Dharna. We will keep up the tempo in the next hearing of the case which is fixed on 26-06-17. Congratulations to all the leaders and activists of both NFTE and NFTCL.
Tuesday, 6 June 2017

मुख्यमहाप्रबंधककाकार्यालय,बी.एस.एन.एल.                                                                     भारत संचार निगम लिमिटेड
O/o CHIEF GENERAL MANAGER BSNL                                                           (भारत सरकार का उद्यम)
तमिलनाडुपरिमंडल/ TAMILNADU CIRCLE                                                                         BHARAT SANCHAR NIGAM LIMITED
16,ग्रीम्सरोड,/16, GREAMS ROAD          (A Government of India Enterprise)
चेन्नै600 006 /CHENNAI 600 006
सामान्यअनुभाग / GENERAL SECTION
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No.ADMN/100-03/CL-ISSUES/2017-18/                        dated at Chennai-6 , the       05-06-2017

To
All   Heads   of SSA / Administrative units
Tamilnadu Circle

Sub:   Categorization of workers based on the works performed - reg
Ref :   Hearing held on 2-6-2017 at the chamber ofDy.CLC (Central)

                                                               ******    
            An hearing was held by Dy.CLC(C) on 22-05-2017 and subsequently on 2-6-17 regarding the petition filed by the National Federation of Telecom Labours against the management of BSNL,Tamilnadu Circle. In this regard the federation has bitterly complained about the BSNL,Tamilnadu Circle Management for not following the instructions issued by Dy.CLC(C) dated 25-10-2016.  In this regard Dy.CLC(C) has instructed BSNL to come with the details by identifying the works and grouping the contract labourers strictly in accordance with the works being carried out by them.

                Since each SSA is following different yard sticks/methods for categorization, it is creating huge confusion and we are not in a position to give a suitable reply to Dy.CLC(C). Hence, you are requested to identify all the jobs that are being performed by contract labourers in your SSA, group them and furnish the report in the following format on or before 20-06-17 so as to comply with the requirement of Dy.CLC(C) and to submit a report on next hearing which has been fixed on 29-06-2017.  In this regard, letter received from the Ministry of Labour and Employment dated 24-05-2017, which is enclosed may also be followed while grouping.   This should be given priority and the time schedule given may be strictly adhered to.

-Sd -
          Deputy General Manager (Admn)कृतेमु..प्र.,बी.एस.एन.एल./ For CGM, B.S.N.L
तमिलनाडुपरिमंडल,चेन्नै/T.N.Circle, CNI-6
Encl:  As above.


NAME OF SSA
JOBS THAT ARE BEING PERFORMED BY CONTRACT LABOURERS
UNSKILLED
SEMI SKILLED
SKILLED

Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting, beard and hat

வேலைக்கேற்ற கூலி
உழைப்புக்கு வாய்ப்பு…
எல்லாருக்கும் வேலை வாய்ப்பு..
ஆற்றலுக்கேற்ற வேலை வாய்ப்பு…
வேலைக்கேற்ற கூலி..
உழைப்புக்கேற்ற கூலி..
இதுவே சோஷலிசம். ..

என்று ரஷ்யா சென்று திரும்பி வந்த பின்
சோசலிசத்தைப் பற்றிய தனது சிந்தனையை
வெளியிட்டார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்…
தவத்திரு அடிகளாரின் சிந்தனையைத்தான்
தொழிலாளர் நலச்சட்டங்களும் வலியுறுத்துகின்றன…
தொழிலாளருக்குத்
திறன் அடிப்படையில் கூலி வழங்க வேண்டும்
என்பது இந்தியத் தொழிலாளர் சட்ட விதியாகும்….
ஆனால் முதலாளிகள் மட்டுமல்ல…
ஆளுகின்ற அரசுகளே… அரசு நிறுவனங்களே…
சட்டங்களைக் காலில் போட்டு மிதிப்பதுதான்
நமது தேசத்தில் நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்…
அதன் ஒரு சாட்சியாகத்தான்
நாம் பணிபுரியும் BSNL துறையில்
ஒப்பந்தத் தொழிலாளர்கள்
உறிஞ்சப்படும் நிலை காண்கின்றோம்…
வேலைக்கேற்ற கூலி…
உழைப்புக்கேற்ற கூலி.. என்பது
இங்கே இன்னும் அமுல்படுத்தப்படவில்லை….
NFTCL சங்கம் இப்பிரச்சினையை
தொழிலாளர் ஆணையர் முன் எழுப்பியது..
பல கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்…
DY. CLC – துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையரின் உத்திரவின் பேரில்…
தற்போது தமிழக BSNL நிர்வாகம்
மாவட்ட நிர்வாகங்களிடம்…
UNSKILLED/ SEMI SKILLED/ SKILLED
பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும்
ஒப்பந்த ஊழியர்களின் விவரங்களை
20/06/2017க்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக மாவட்ட நிர்வாகங்கள்
ஒப்பந்த ஊழியர் விவகாரத்தில்
உண்மையான புள்ளி விவரங்களை
அளிக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் NFTCL சங்கம்
BSNL நிர்வாகத்தின் மீது
கடுமையான குற்றச்சாட்டுக்களை
துணை முதன்மைத்தொழிலாளர்
ஆணையரிடம் கூறியுள்ளதாக
தனது 05/06/2017 சுற்றறிக்கையில்
தமிழ் மாநில நிர்வாகம் கூறியுள்ளது…
நாம் கூறியது குற்றச்சாட்டு அல்ல…
நாம் கூறியதெல்லாம்
சுரண்டல் என்னும் உண்மை…
உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை…
எனவே இந்திய தேசத்தின்
மாபெரும் BSNL துறை…
இந்த தேசத்தின் சட்டங்களை
மதிக்கும் என நம்புகிறோம்…
பல்வேறு பணிகளில்
உழைக்கும் தொழிலாளிக்கு..
அவனுக்கு உரிய கூலியைக் கொடுக்கும்
என எதிர்பார்க்கிறோம்…
வேலைக்கேற்ற கூலி..
உழைப்புக்கேற்ற கூலி..
இதுவே சோஷலிசம். ..
இதுவே நமது கோஷம்…
திறனுக்கேற்ற கூலி - சமரசப் பேச்சுவார்த்தை
BSNLலில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் திறனற்றவர்கள் UNSKILLED என்று வகைப்படுத்தி
BSNL நிர்வாகம் சம்பளம் வழங்கி வருகிறது.
இது தொழிலாளர்களை சுரண்டும் செயல்.
தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள்
கேபிள் பணி, எழுத்தர் பணி, காவல்பணி, ஓட்டுநர் பணி,
என பல்வேறு திறன்மிக்கப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள உரிய கூலியைக் கொடுக்க வேண்டும் என்பதே நமது சங்கத்தின் நிலைபாடு.
எனவே நமது NFTCL சார்பாக மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன்
துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையரிடம் வழக்குத் தொடுத்திருந்தார். பல கட்டப்பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த நிலையில் 02/06/2017 அன்று மீண்டும் BSNL நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் DY.CLC முன்னிலையில் சென்னையில் சமரசப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள்
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றது.
BSNL நிறுவனத்தில் துப்புரவுப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் திறன் படைத்த தொழிலாளர்களே என நமது சார்பில் வாதிக்கப்பட்டது. முடிவில் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்டம் வாரியாக எத்தனை பேர் எந்தெந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் என்ற விவரத்தைக் கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும் என DY.CLC BSNL நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார். அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை
29/06/2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன்மிக்கப் பணிகளில் தொழிலாளியைப் பயன்படுத்திக்கொண்டு திறனற்ற பணிக்கான கூலியைத்தருவது
மாபெரும் உழைப்புச்சுரண்டலாகும்.
இந்த உழைப்புச்சுரண்டலை எதிர்த்து
NFTCL தொடர்ந்து போராடும்…. நிச்சயம் வெல்லும்...
மாமேதை மார்க்சின் 200வது பிறந்த ஆண்டில்...
இந்த லட்சியத்தை உறுதியுடன் மேற்கொள்வோம்…
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள்
NFTCL சார்பாக
தோழர்.மதிவாணன்
தோழர்.ஆனந்தன்
தோழர்.அன்பழகன்
தோழர்.சம்பத்
நிர்வாகத்தின் சார்பாக
திருமதி.ஹேமமாலினி DGM(HR) – CHENNAI
திருமதி.சங்கரி AGM(EST) – CHENNAI
திரு.இராஜசேகரன் AGM – TN CIRCLENFTCL
ஜூன் 10 பெருந்திரள் தர்ணா
ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள்
கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழகத் தலைநகர் சென்னையில்
ஜுன் 10 – சனிக்கிழமை
மாபெரும்…பெருந்திரள் தர்ணா…
ஒப்பந்த ஊழியர்களே….
குரல் கொடுப்போம்…
உரிமை வெல்வோம்…
அலைகள் ஓயா வங்கக்கடலோரம்
அலைகடலென… திரண்டு வாரீர...
No automatic alt text available.

Friday, 2 June 2017

                             முத்தரப்பு பேச்சுவார்த்தை 

நமது மாநில சங்கத்தால் "சமவேலைக்கு சம ஊதியம்"  என்ற வழக்கு இரண்டு ஆண்டுகளாய் DCLC (துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ) அவர்கள் முன்னிலையில் நடைபெறுவது அனைவரும் அறிந்த ஓன்று. இன்று (02/06/2017) அதற்கான பேச்சுவார்த்தைக்கு  தொழிலாளர் நல ஆணையத்திடம் இருந்து அழைப்பு வந்தது.இன்றைய சிறப்பு என்னவென்றால் நமது பொது செயலர் "பேச்சுவார்த்தைக்கு நான் வருகிறேன் என்பதுதான் " நிறைய பேசினோம் இருதரப்பை யோசிக்க வைத்தோம். வாங்கும் வேலைக்கு சம்பளம் தர மறுக்கும் நிர்வாகம் "சமவேலைக்கு சம ஊதியம்" எப்படி தரும் முதலில் வேலைக்கேற்ற ஊதியம் தரட்டும் "சமவேலைக்கு சம ஊதியம்"  என்பதை உறுதி செய்யலாம் என்ற DCLC (துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ) வார்த்தை,  நமது நிறுவனத்தை பற்றிய அனுபவம்.நமது நிர்வாகமும் வருகின்ற 29/06/2017 அன்றுக்குள்  வேலைக்கேற்ற ஊதியம் அனைத்து மாவட்டங்கள்  தர ஆணையிடுவோம் என்று கூறினார் . போராட்டம் நமக்கு புதிதல்ல பழகி போன ஒன்று . ஆனால் பழக்கத்தை மாற்ற போகிறோம் மாற்றம் ஒன்றே  தீர்வு !!! 
பார்ப்போம் 10/06/2017 தர்ணா போராட்டத்தில் நாம் யார் என்று காண்பிப்போம் !
Image may contain: 2 people, people sitting, table and indoor

Image may contain: 4 people, people sitting and indoor