செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

NFTCL-லில் பணி செய்வது 

நிறைவளிக்கிறது

நமது செயல் தலைவர்... 

AITUC – NFTCL கையெழுத்து இயக்கம்
Image may contain: 10 people, people standing
கையெழுத்து இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி
 எடுத்துரைக்கும் தோழர்.PLR மற்றும் தோழர்.இரவி 
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி
AITUC – NFTCL சார்பில் காரைக்குடியில்
26/02/2017 அன்று  பேரவைக்கூட்டம்
மிக எழுச்சியாக நடைபெற்றது.

AITUC துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தலைவர்
தோழர்.முருகன் தலைமையேற்றார்..
NFTCL மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன்
NFTCL செயல்தலைவர் தோழர்.மாரி
NFTCL மாநில உதவிச்செயலர் தோழர்.மாரிமுத்து
NFTCL மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர்
AITUC போக்குவரத்து தலைவர் தோழர்.மணவழகன்
AITUC கட்டுமான சங்கத்தலைவர் தோழர்.சிவசாமி
AITUC பல்கலை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தலைவர் தோழர்.சண்முகம்
AITUC உள்ளாட்சி துணைப்பொதுச்செயலர் தோழர்.PLR
ஆகிய தலைவர்கள் பங்கேற்க

AITUC துணைப்பொதுச்செயலர் தோழர்.இரவி சிறப்புரையாற்றினார்.
நூற்றுக்கணக்கான துப்புரவுத்தொழிலாளிகள் கலந்து கொண்டனர்
உட்கார இடமில்லாததால் இருக்கைகள் அகற்றப்பட்டு
தரையிலே தோழர்கள் அமர்ந்து தலைவர்கள் உரையைக் கேட்டனர்
கையெழுத்து இயக்கத்தை 
செய்து முடித்திட 30 குழுக்கள் அமைக்கப்பட்டன
குழு ஒருங்கிணைப்பாளராக தோழர். PLR செயல்படுவார்..
சிவகங்கை மாவட்டம் முழுமையும் 50000 கையெழுத்துக்கள் பெறவும்
ஏப்ரல் 11 கோட்டை நோக்கிய பேரணிக்கு 
1000 பேர் திரளவும் உற்சாகமுடன் முடிவு எடுக்கப்பட்டது

குப்பையாய்ப் போனவர்களின்.. 
பின்னால் சென்று நாமும்.. 
குப்பையாய் போவதை விட..
குப்பையை அள்ளும் அடிமட்ட 
ஊழியனுக்குப் பணி செய்வது சாலச்சிறந்தது...

ஆம்... தோழர்களே...
NFTEயில் பணி செய்வதை விட...
NFTCLலில் பணி செய்வது நிறைவளிக்கிறது

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கா.சி. மணியரசு. to உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
15 hrs
இது யாரோட இந்தியா வைரமுத்து அணுகுண்டு கவிதை: ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா ?
வி ஐ பி களுக்கே இந்தியா…!!!
பாவனா -வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி
ஹாசினி -களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!
அம்பாணி, அதாணி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி -கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!
அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது
அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!
கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!
போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!
இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .
ஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?




                                 Membership Form for NFTCL No automatic alt text available.

சனி, 25 பிப்ரவரி, 2017

நமது சங்கத்தின் சர்பாக தொழிலாளர் துறை முதன்மை அதிகாரி Chief Labour Commissioner(Central),  அவர்களிடம் அளித்த மனுவின் நகல் . 

To
Hon’ble .Sh .Anil Kumar Nayak, CLC(C),
Office of the Chief Labour Commissioner(Central),
 New Delhi .

Respected  Sir,
I am the State Secretary of National Federation of Telecom Contract Labours union, Tamil Nadu Branch.   On behalf of NFTCL Tamil Nadu State branch I am conveying  our heartfelt wishes and greetings to you.
 I am  submitting the  few lines  for  your kind  notice about the  pathetic condition of  poor contract laborers working in BSNL. In our BSNL Tamil Nadu region more than 10,000 contract workers are working for the  last 15 years. More than one lack labourers are working  all over India.  Even though the work is in perennial nature  the work is given on  contract basis only. Eventhough contract system is going on in BSNL organization the Statutory rules are not followed elsewhere.  On our repeat complaint to Dy.CLC ,RLC and ALC regarding the denial of statutory benefits  they have  also issued many  guidelines and instructions  regarding implementation of Labour laws.  But  the instructions of the Labour department is  not at all  obeyed by our BSNL Administration .
The Labour issues are as follows:
1)     The Wages of the contract laborers are not paid in fixed date.  The wages are being paidas to the will and pleasure of the contractors.  As a principal employer BSNL not at all intervenes in this matter. In most of the places the wags are paid once in two/three months interval also.
2)     Contract  laborers are not provided with employment card or Identity Card either by the Contractor  or  by the BSNL management. Due to this the laborers are facing problem during their duty time.
3)     There is no regular practice of paying Bonus every year to the contract laborers. Every year we are raising the issue before the Labour Authorities for the payment of  Bonus. Even though the Labour department authorities are directing the BSNL to ensure the payment of Bonus to the Contract Labourers nothing is paid to the labourers and they are denied bonus.
4)     Wage slips are not supplied to the Laborers   by the Contractors whichgives room for ambiguity.  The Laborers are put in dark about their wages and statutory benefits  such as EPF and ESI etc..  eligible for them.
5)     The Minimum Wages  notified by the Labour Ministry  is also denied in BSNL. Laborer are paid with meager amount as Wages to the will and pleasure of the  Contractors and Principal employer.
6)     In most of the places the statutory benefits EPF are not paid. No UAN number is allotted to them. No ESI facility is extended and the ESI card supplied to the labourers.
7)     In BSNL the Contract Labourers are  engaged in various works as follows:
a)      Cable Jointing and trenching work
b)      Watch and ward  duty with and without arms.
c)      A/C plant maintenance
d)      House keeping work
e)      Sweeping and Cleaning work
f)       Computer data entry work
g)      Clerical work
For the above all categories Labourers are paid wages under  “UNSKILLED”  category only.  Even though the Labour Ministry has categorized the workers andnotified their eligible wages clearly,   the BSNL management is paying wages at par with Unskilled category only. This  is purely against the Labour ministry guidelines and  also  against the  verdict of  Honble Supreme court of India.
Hence I pray the honorable CLC to look into the above  matter and render justice to the poor Contract Labourers who are working in BSNL years together without enjoying the Labour rights and benefits.
We shall be thankful and grateful to your favorable action Sir.

                                                   Thanking you
                                                                                            
         
      ( S.ANANDHAN)
                                                                                                State  Secretary-NFTCL,
                                                                                                                    Tamil Nadu.

Copy to: (1)  Chairman Cum Managing Director, Bharat Sanchar Bhavan, Harish  Chandra Mathur                        Lane, Janpath Road, Janpath, Delhi - 110001         

 

 (2)   Deputy Labour Commissioner ,Shastri Bhavan, No:26, Haddows Road,Chennai.

             
               (3)  Com. C.K. Mathivannan –All India General Secretary NFTCL –S4, Sayani                                                        
                     Complex, 96.K.H. Road ,Ayanavaram-Chennai-23.

              (3)  Regional .Labour Commissioner, Shastri Bhavan, No:26, Haddows Road,Chennai.


To

1.    The Chief General Manager
BSNL, Chennai Telephones, Chennai.

2.    The Chief General Manager
          BSNL, Tamil Nadu Circle, Chennai.

Madam,
                   Sub: Submission of NFTCL – Office bearers List – reg.,
                   It is very glad to intimate to you that the First State Conference of our NFTCL union was conducted at Karaikudi on 11/02/2017 and 12/02/2017 under the presidentship of  Com.S. Mahalingam, Retired STS/Erode.  Our NFTCL All India General Secretary Com.C.K.Mathivanan, Retired SDE/Chennai  greeted the conference.
                        More than thousands of Delegates from all over Tamilnadu participated in the conference. The Conference had unanimously elected the office bearers of NFTCL Union  for the ensuing year. The list of office bearers is enclosed in the annexure.  We are assuring our fullest  cooperation for the betterment of BSNL.  Kindly extend your cooperation with our union   for the improvement of the  welfare of the Contract Laborers.
                                          Thanking you,                                                  

Yours faithfully


(S.ANANDHAN)
STATE SECRETARY, NFTCL UNION



Copy to:
1.    All General Managers, BSNL
Tamil Nadu Circle/Chennai Telephones.
2.    The General Secretary, NFTCL, Chennai
3.    The DY.CLC/Chennai
4.    All RLCs/Tamil Nadu
5.    All Regional Commissioners/EPF/Tamil Nadu
6.    All Directors, ESI/Tamil Nadu
7.    All District Secretaries/NFTCL/Tamilnadu.


LIST OF OFFICER BEARERS OF NFTCL UNION -  TAMILNADU STATE BRANCH
    President                     :         V.Babu-Telecom Technician - Chennai.
Working President           :         V.Mari –Accounts Officer- Karikudi.
Vice Presidents            :            1) R.Ganapathyraman- Office Superindent - Ambasamuthiram.
                                                2)  N.Anbalgan- Office Superindent - Cuddalore.
                                                3)  D.Kevin Raj- Contract Labour - Trichy
                                                4)  G.Kumar – Rtd Office Superindent - Erode
                                                5)  R.Vedhagiri- Rtd Office Superindent -Chennai
                                                6) K. Murugesan- Telecom Technician – Chennai

State Secretary:               S.Anandhan-Junior Engineer – Cuddalore.

Asst .Secretary                        :            1) U.Balasubaramaniyan -   Telecom Technician – Trichy
                                                2)  A.Sekar - Telecom Technician – Thiruvarur
                                                3)  S.Nagaiya –Junior Engineer – Chennai
                                                4)  R.Marimuthu - Contract Labour – Karaikudi
                                                5)  M.Vetriselvan - Telecom Technician – Chennai
                                                6)  R.Ravi - Telecom Technician – Cuddalore
                                                7)  D.Dayalan - Contract Labour – Chennai

Treasurer              :         E.Sampath - Office Superindent – Chennai

Asst. Treasurer            :           V.Rathinam - Telecom Technician – Chennai
Organizing secretary:             1)  S.Arumugam - Telecom Technician – Tanjore
                                                2)  J.A. Ruban Doss -  ContractLabour – Chennai
                                                3)  V.Mariyappan - Contract Labour – Trirunelvelli
                                                4)  K.Pannerselvam - Telecom Technician – Thuthukudi
                                                5)  K..Mathivanan - Contract Labour  –Cuddalore
                                                6)  D.William Henry – Junior Engineer – Trichy
                                                7)  T.Poiyathappan - Contract Labour – Chennai

Auditor:           P.Sangili – Deputy General Manager - Chennai     
                                                                       (S.ANANDHAN)


  State Secretary- NFTCL –Tamil Nadu.
AITUC – NFTCL கையெழுத்து இயக்கம் 

சமவேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்தக்கோரி….
காரைக்குடி NFTCL மாநில மாநாட்டில் துவக்கப்பட்ட
கையெழுத்து இயக்கத்தின் தொடர் இயக்க

புதன், 22 பிப்ரவரி, 2017

938 மதிப்பெண்ணுக்குமருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு
NFTCL காரைக்குடி தமிழ் மாநில மாநாட்டில் ESI இணை இயக்குனர்உயர்திரு கணேசன் அவர்கள் பங்கேற்று ESI திட்டம் குறித்து மிக விரிவாக எடுத்துரைதார்.
ESI திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்குமருத்துவ வசதி,அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி,பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டல் கிடைக்கும் விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,மனைவியின் பிரசவ காலத்தில் கனவணுக்குக் கிடைக்கும் விடுப்பு,என பல்வேறு திட்டங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் கூறிய ஒரு செய்தி
"ESI திட்டத்தில் இணைந்துள்ள ஒரு தொழிலாளி என்னைச் சந்தித்து மிக்க நன்றி எனக் கூறினார். எதற்கு எனக் கேட்டேன். எனது பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அதற்காகத்தான் என்றார். என்ன மதிப்பெண் என்று கேட்டேன். 938 என்று சொன்னார்."
அவர் மேலும் தனது உரையில் "938 மதிப்பெண் பெற்றவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சாத்தியமல்ல.ESI திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு 20 சத ஒதுக்கீடு உண்டு. அதனால்தான் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது" என்று கூறினார்.

ESI திட்டத்தில் உள்ள பல்வேறு திட்டங்க்களையும் வசதிகளையும் அவர் அழகு தமிழில் அருமையாக எடுத்துரைத்தார்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017



   இப்படியும்ஒரு அதிகாரி

Image may contain: 3 people, people standing
காரைக்குடியில் நடைபெற்ற NFTCL மாநில மாநாட்டில் EPF மண்டல அதிகாரிஉயர்திரு சங்கரலிங்கம் அவர்கள் பங்கேற்றார்.
EPF திட்டம் குறித்து விரிவாகவும் தெளிவாகவும்ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எளிதில் புரியும்படிதாய்மொழியாம் தமிழ் மொழியில் எடுத்துரைத்தார்.அதுமட்டுமல்லாது "நான் EPF விதிகள் குறித்து கூறினேன். சந்தேகங்கள், கேள்விகள் கேளுங்கள்" என தெரிவித்தார்.ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பல் தோழர்கள் கேள்விகள் கேட்டனர்.அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக,விளக்கமாக பதில் அளித்தார்.அத்தோடு "EPF பிரச்னை சம்பந்தமாக என்னை எப்போதும் சந்திக்கலாம். நான் ப்ரச்னைகளைத் தீர்த்துத் தருகிறேன்" என்று கூறி தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் அறிவித்து "நேரில் வர இயலாதவர்கள் "என்னை இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம"  எனவும் தெரிவித்தார்.
இப்படியும் ஒரு அதிகாரி இருக்கிறார் என்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.