Thursday, 29 December 2016

மோதி மிதித்து விடு... முகத்தில் உமிழ்ந்துவிடு 

நாட்டு மக்களை 
நடுத்தெருவில் நிறுத்திய 
நாணயங்கெட்ட..
நாலுங்கெட்ட.. 
நடுவண் அரசைக் கண்டித்து 
அனைத்து சங்கங்களின் சார்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம் 

22/12/2016 - வியாழன் 
மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி. 

மாலை 05.00 மணி 
கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம்  
காரைக்குடி.

நம்மை வீதியில் நிறுத்தியோரை...
நாம்  வீதிக்கு இழுப்போம்...
வாரீர்... தோழர்களே...

Saturday, 24 December 2016

பெரியார் நினைவு தினம்

டிசம்பர் 24

தொலைபேசி குறித்து பெரியார்

இங்கிருந்து கொண்டே பட்டினத்துக்கு டெலிபோன் (தொலை பேசி) மூலம் பேசலாம். இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து வடகோடி இமயமலை அடி வாரத்தில் உள்ளவரிடம் பேசலாம். ஆங்கில நாட்டுடன் பேசலாம்.

இவைகள் என்ன? மாயமா! மந்திரமா! மாயா ஜாலமா! அல்லது யாராவது நடுவில் இருந்துகொண்டு தவம் செய்கிறார்களா? மந்திரம் ஜெபிக்கிறார்களா? ஒன்றுமே இல்லை! அவைகள் (மந்திரம், தவம்) அத்தனையும் பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கவே இவ்வித அற்புதங்கள் தோன்றி இருக்கின்றன. எல்லாம் பகுத்தறிவு சக்திதான். இவைகள் அத்தனையும் பகுத்தறிவால் உண்டானவை. இப்படி மனிதன் பகுத்தறிவின் தன்மையால் மிக முன்னேற்றமடைந்து கொண்டு போகிறான். இந்த நிலைமை இன்னும் எவ்வளவு தூரத்தில் போய் முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது."

Wednesday, 21 December 2016

BSNL  தாராளம் ... ஏராளம்.. 

16/12/2016 முதல் PREPAID வாடிக்கையாளர்களுக்கு
 நமது BSNL  நிறுவனம் 
புது சலுகைகளை அறிவித்துள்ளது. 
இது 90 நாட்களுக்குப் பொருந்தும். 
வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் 
பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம்.
 மாநிலங்களுக்கேற்ப புதுப்புது 
கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

STV MRP in Rs. 
Freebies 
Validity (in calendar days)
Telecom Circles
(inclusive of service tax) 
99* 
Unlimited local/STD BSNL to BSNL with 300 MB data 
28
Kolkata TD, WB, Bihar,JKD, Assam, Gujarat, MP, CG, MH, Rajasthan
119* 
28 
UPE,UPW, Uttaranchal
139 
28
HR, OR, PUN, AP, J&K, KTK, Chennai TD, NE-I/II,TAMILNAD
149*
28
Kerala,HP
339
Unlimited local/STD BSNL to BSNL/others with 1 GB data
28
Pan-India

Image may contain: 2 people

Sunday, 18 December 2016

நெஞ்சம் நிறைந்த  NFTCL  மாவட்ட மாநாடு 

காரைக்குடி மாவட்ட NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் 
முதலாம் மாவட்ட மாநாடு தோழர்கள்.லால்பகதூர் மற்றும் முருகன் தலைமையில் பாரதி பிறந்த 11/12/2016 அன்று காரைக்குடி 
கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
NFTCL பொதுச்செயலர் தோழர்.CK.மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

இது மாவட்ட மாநாடு அல்ல... 
நடக்கப்போகும் மாநில மாநாட்டின் 
முன்னோட்ட மாநாடு என்று சொல்லுமளவு...
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 
தலைவர்களும்...தோழர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் 
மாநிலப்பொருளர் தோழர்.சுப்பராயன் 
சென்னைத் தொலைபேசி தோழர்.இளங்கோ 
மதுரை மாவட்டச்செயலர் தோழர்.சிவகுருநாதன் 
நெல்லை மாவட்டச்செயலர் தோழர்.கணேசன் 
திருச்சி AIBSNLOA மாவட்டச்செயலர் தோழர்.காமராஜ் 
முன்னாள் மாநிலப்பொருளர் தோழர்.அசோக்ராஜன்
மாநிலச்சங்க நிர்வாகிகள்...
தோழர்கள் புதுக்கோட்டை  ஆசைத்தம்பி. கரூர் ஆறுமுகம், 
தென்காசி சண்முகம், சுபேதார் அலிகான்,
காரைக்குடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
மூத்த தோழர்கள் பூபதி,நாகேஸ்வரன்...
அஞ்சல் தோழர்.கருப்பசாமி மற்றும் ஏராளமான தலைவர்களும் தோழர்களும் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சினைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.

மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் 
புதிய நிர்வாகிகளாக  ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டத்தலைவர் : தோழர். S.முருகன் -STS ஓய்வு - காரைக்குடி 
மாவட்டச்செயலர்   : தோழர். B.முருகன் - TT  - சிவகங்கை 
மாவட்டப்பொருளர்: தோழர். L.வீரசேகர் - CL - காரைக்குடி .

புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் பல காலம் கவனிப்பாரற்று... கேட்பாரற்றுக் கிடந்த 
ஒப்பந்த ஊழியரின் உரிமைகளை  மீட்கும்  போராட்டத்தில்...
 NFTCL உளப்பூர்வ ஈடுபாட்டுடன் தன்னை முன்னிறுத்தி...
 ஒப்பந்த ஊழியரின் வாழ்வு மேம்படுத்திடும் பணியில்  
அர்ப்பணிப்புடன் செயல்பட   வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
பாங்குடன் நடந்த பாரதி விழா...
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்...
NFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்...
AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம்...
NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்...

கரம் கோர்த்தன... களிப்புடனே... 
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில்...
காலத்தை வென்ற மகாகவி பாரதியின் 
பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்தன...

முன்னாள் காவல்துறை அதிகாரி பேனா மனோகரன் கவி பாட...
ஆசிரியர் ஜோல்னா ஜவஹர் கருத்தரங்கத் தலைமையேற்க...
கருத்தாழமிக்க உரைகளை கல்லூரி மாணவர்கள்... 
கரவொலிக்கிடையில் கணீர் குரலில் கருத்துரைக்க...
எழுத்தாளர் சந்திரகாந்தன் ஏற்றமிகு கருத்துக்களை எடுத்தியம்ப...
இலக்கியச் செம்மல் கோவி ஜெயராமன்...
கம்பனையும் பாரதியையும் வள்ளலாரையும் கலந்து 
ஆழமான கருத்துக்களை அற்புதமாக எடுத்துரைக்க...
மதி நுட்பப் பேச்சாளர் தோழர் மதிவாணன்...
சரவெடியாய் அரசியல் கருத்துக்களை... சபையில் வெடிக்க...
பேராசிரியர் பழனியப்பன் நன்றி நவில...
மகாகவி பாரதி விழா மனம் நிறைந்து முடிவுற்றது...

இயக்கவாதிகளுக்கு  இலக்கியமும்...
இலக்கியவாதிகளுக்கு இயக்கமும்...

இருவரும் இணைந்த இந்த நிகழ்வு...
அடுத்த கட்ட நகர்வு... என்ற 
தோழர்.மாலி அவர்களின் பாராட்டுதல் 
இந்நிகழ்ச்சியின் உரைகல்...

Tuesday, 13 December 2016


கலை கட்டியது காரைக்குடி மாநாடு !!!

முப்பெரும் விழா ,
புகழாஞ்சலி கூட்டம் , பாரதியார் பிறந்தநாள் விழா , மற்றும் NFTCL  மாவட்ட மாநாடு . ஒரு விழாவிற்கு ஒரு விழா ஈடு கொடுக்க முடியாது ஒரு வார்த்தையில் சொன்னால், சிறப்பு !!!
 புகழாஞ்சலி கூட்டம் நமது பொது செயலர் C .K .மதிவாணன் அவர்களால் துவங்கி ,பாரதியார் விழாவில் சிறப்புற்று ,NFTCL  மாவட்ட மாநாட்டால் நிறைவு பெற்றது . கூட்டம் நமது மாநில மாநாடு போல் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் அடைங்கிய கூட்டமாக இருந்தது. போராளிகள் ஒன்று கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்தது என்றால் மிகையாகது . 

Wednesday, 7 December 2016

டிசம்பர் 11 - காரைக்குடியில் திருவிழா... 

மகாகவி பாரதி விழா 
NFTCL  மாவட்ட மாநாடு 
NFTE மாவட்ட செயற்குழு 

11/12/2016 - ஞாயிறு - காலை 9 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
காரைக்குடி.

பங்கேற்பு 
தோழர்.C.K.மதிவாணன்
NFTCL அகில இந்திய பொதுச்செயலர் 

தோழர்.G.ஜெயராமன் 
NFTE சம்மேளனச்செயலர் 

தோழர்.ஆனந்தன் 
NFTCL மாநிலச்செயலர் 

தோழர்களே... வருக...

Tuesday, 6 December 2016

Condolences .National Federation of Telecom Contract Labourers (NFTCL) extremely sorry to announce the death of Mrs. Leelavati Singh , beloved wife of the General Secretary Of NFTE-BSNL after a prolonged illness in Bihar at about 10.30 am. We pay our respectful homage to the departed soul.  

ஆழ்ந்த இரங்கல்

நமது சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங்க் 
அவர்களின் மனைவி திருமதி லீலாவதி சிங்க் அவர்கள் 
இன்று  காலை 10 30 மணிக்கு காலமானார்.

  அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

"அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல்படியாகும்.
ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான். தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும்!
- தோழர் அம்பேத்கர்,
#அம்பேத்கர்_நினைவு_தினம் #சுதந்திரம் #தீண்டாமை #அம்பேத்கர்


                       ஆழ்ந்த இரங்கல் 

.


வாழ்க்கையே போராட்டமாகவும் சாதனையாகவும் நிகழ்த்திக் 
காட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா 
அம்மையார் அவர்களின் மறைவுக்கு 
நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்...
என்ன தான் கலாய்த்தாலும் தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்
கொஞ்சம் சிரித்து பேசினாலும் பட்டம் கட்டிவிடும் ஆண்களின் மத்தியில்,அவர்களை காலில் விழ வைத்து ஆட்சி நடத்திய அல்லி ராணி அம்மையார் என்றால் அது மிகையல்ல
எத்தனை விமர்சனம், எத்தனை தாக்குதல் அத்தனையிலும் தன்னந்தனியாய் ஜெயித்தவர்
ஒரு குடும்பமே எதிர்த்து அரசியல் செய்யும் பொழுது, ஒற்றை சிங்கமாய் கர்ஜித்தவர் ..
மொழி புலமையில் இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை..
துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை
மரணத்திடம் போராடிய ஜான்சிராணி இறுதியில் வீழ்ந்தார்

Monday, 5 December 2016
அம்மான்னா சும்மா இல்ல டா அவ  இல்லனா யாரும் இல்லடா  

 

Thursday, 1 December 2016

இன்குலாப் ஜிந்தாபாத்...

இன்குலாப் ஜிந்தாபாத்...
தொழிலாளர்களின் வேத மந்திரம்...

அதனையே தனது பெயராகக் கொண்டவர் 
நம் மண்ணின் மைந்தர்...
ஒடுக்கப்பட்ட மக்களின் பிறப்பிடம்... 
இராமநாதபுரம்  மாவட்டம்  கீழக்கரையில் பிறந்த...
பேராசிரியர் தோழர். சாகுல் ஹமீது...

மக்கள் கவிஞர் எனப் பெயர் பெற்ற
தோழர்.இன்குலாப்...
இன்று 01/12/2016 உடல் நலக்குறைவால்...
மண்ணுலகை விட்டு மரித்தார்...

மனுசங்கடா... 
நாங்க  மனுசங்கடா...
உன்னைப்போல...
அவனைப்போல...
எட்டு சாணு...
உயரமுள்ள மனுசங்கடா...

என்ற அவரது உணர்ச்சிமிகு பாடல்...
ஒடுக்கப்பட்டவர்களின் 
உரிமை கீதமாக என்றென்றும் ஒலிக்கும்...


மக்கள் கவிஞர் 

இன்குலாப் 

மறைவிற்கு 

நமது மனங்கசிந்த அஞ்சலி...


மக்களுக்காக
வாழ்வை
அர்பனிப்பது
பெரும் தியாகம்
அதைவிட
பெரும் தியாகம்
அப்படிப்பட்ட
போராளியோடு
பயனிப்பது
தோழர் ஆர். நல்லக்கண்ணு
அவர்களுடனான
புரட்சிப்
பயணத்திலிருந்து
தன்
பெரு வாழ்வை
நிறைவு செய்த
அன்னைக்கு
எனது
வீரவணக்கம்....
Like
Comment