Monday, 28 November 2016

வரலாறு உன்னை வந்தனம் செய்யும்...
58 ஆண்டுகள் செங்கொடியை உயர்த்திப் பிடித்த
 அசல் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோ 
பிடல் காஸ்ட்ரோ...
அமெரிக்காவை அதிர வைத்தவன்...
58 ஆண்டுகள் செங்கொடியை உயர வைத்தவன்...

பிணி சேரா தேசத்தை உருவாக்கியவன்... 
அணி சேரா தேசங்களின் அங்கமானவன்...

பாலினத்தொழிலாளியை பட்டதாரி ஆக்கியவன்...
நோய் தீர்க்கும் பட்டதாரிகளை நாடெங்கும் உருவாக்கியவன்...

638 தடவை முயன்றும்...
CIA இவன் மயிர்க்கால்களைக் கூட அசைத்ததில்லை...

வரலாறு என்னை விடுதலை செய்யும்...
பிடல் காஸ்ட்ரோவின் புகழ் மிக்க வசனமிது...

செங்கொடி உலகில் பறக்கும் வரை...
வரலாறு காஸ்ட்ரோவை வந்தனம் செய்யும்...

செங்கொடியை தளராமல் உயர்த்திப்பிடித்த..
உலகின் மாபெரும் பொதுவுடைமைத் தலைவனுக்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலி...
==================================================================

2016 ஏப்ரல் 19ம் நாள் 
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 
தோழர்.பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய இறுதி உரை

கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் 
ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்...
மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக 
அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்...
மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் 
பொருட்களையும்கலாச்சாரச் செல்வங்களையும் 
அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்...
அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக 
நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது 
இதுவே கடைசியாக இருக்கலாம்... 
தொடர்ந்து முன்னேறுவோம்...
அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்...
அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது 
அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த 
ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம்...
நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது...


Thursday, 24 November 2016


 
 

63-வது சம்மேளன தினம்...(ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - 24.11.1954)UPTW என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை தபால், தந்தி, தொலைத்தொடர்பு, ஆர்.எம்.எஸ், நிர்வாக பகுதி என அனைத்தையும் ஒன்று சேர்த்து (P3 & P4, T3 & T4, E3 & E4, R3 & R4, நிர்வாக தொழிற்சங்கம் என 9 சங்கங்களை ஒன்றிணைத்து) NFPTE சம்மேளனத்தை தோழர். ஓம் பிரகாஷ் குப்தா உருவாக்கினர்.

நவம்பர் 24, 1954 அன்று கூடிய பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் NFPTE சம்மேளனம் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் பெடரல் கவுன்சில் தொடர்ந்தது. கடுமையான விவாதம். தோழர்கள். தாதாகோஷ் - K. ராமமூர்த்தி-க்கு இடையே போட்டி நிலவியது. 45 வாக்குகள் வித்தியாசத்தில் தோழர். தாதாகோஷ் வெற்றி பெற்றார். S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சக்திமிக்க ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா AITEEU CLASS III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய பொதுச் செயலராக இருந்தார்.
தொழிலாளர் இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.
9 சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய NFPTE சம்மேளனம் மத்திய தொழிற் சங்கங்களில் மிகப் பெரிய சக்தியாக விளங்கியது.
எத்தனை போராட்டங்கள்... எத்தனை தடைகள்... பல பிரதமர்கள், பல துறை மந்திரிகள், எண்ணற்ற அதிகாரிகள் என பலரையும் சந்தித்து அடைந்த சாதனைகளை அளவிட முடியாது.
சம்மேளன தினத்தைஅனைத்து கிளைகளிலும்
கொடியேற்றி கொண்டாடுங்கள். NFPTE
மற்றும்
NFTE ன் தியாகத்தை, செயல்திறத்தை ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
தோழர்கள்
அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின்...
NFPTE சம்மேளன தின நல்வாழ்த்துக்கள்...

 

 
63-வது சம்மேளன தினம்...

(ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - 24.11.1954)

UPTW என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை தபால், தந்தி, தொலைத்தொடர்பு, ஆர்.எம்.எஸ், நிர்வாக பகுதி என அனைத்தையும் ஒன்று சேர்த்து (P3 & P4, T3 & T4, E3 & E4, R3 & R4, நிர்வாக தொழிற்சங்கம் என 9 சங்கங்களை  ஒன்றிணைத்து) NFPTE சம்மேளனத்தை தோழர். ஓம் பிரகாஷ் குப்தா உருவாக்கினர்.

நவம்பர் 24, 1954 அன்று  கூடிய   பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் NFPTE சம்மேளனம் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் பெடரல் கவுன்சில் தொடர்ந்தது.   கடுமையான விவாதம்.   தோழர்கள். தாதாகோஷ் - K. ராமமூர்த்தி-க்கு இடையே போட்டி நிலவியது. 45  வாக்குகள் வித்தியாசத்தில் தோழர். தாதாகோஷ் வெற்றி பெற்றார்.  S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள் போட்டியின்றி   தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சக்திமிக்க ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா AITEEU CLASS III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய பொதுச் செயலராக இருந்தார். 

தொழிலாளர் இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது.  அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.

9 சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய NFPTE சம்மேளனம் மத்திய தொழிற் சங்கங்களில் மிகப் பெரிய சக்தியாக விளங்கியது.   

எத்தனை போராட்டங்கள்... எத்தனை தடைகள்... பல பிரதமர்கள், பல துறை மந்திரிகள், எண்ணற்ற அதிகாரிகள் என பலரையும் சந்தித்து அடைந்த சாதனைகளை அளவிட முடியாது. 
சம்மேளன தினத்தைஅனைத்து கிளைகளிலும் 
கொடியேற்றி கொண்டாடுங்கள்.  NFPTE 
மற்றும் 
NFTE ன் தியாகத்தை,  செயல்திறத்தை ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

தோழர்கள்
அனைவருக்கும்  மாவட்ட சங்கத்தின்...
NFPTE சம்மேளன தின நல்வாழ்த்துக்கள்...


Thursday, 24 November 2016

63 rd NFPTE anniversary

63வது சம்மேளன தினம்   சென்னையில் நடந்த பிருமாண்டமான விழா

இன்று குரோம்பேட் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்ற நமது NFPTE சம்மேளத்தின்  63 வது வருட விழா நடைபெற்றது. AITUC  மாநில தலைவர் தோழர்.கே.சுப்பராயன் மற்றும் தோழர்கள் சி.கே.மதிவாணன், அசோக்ராஜ்,ராஜசேகரன்,எம்.கே.ராமசாமி, இளங்கோவன் மற்றும் ரவி ஆகியோர்  கலந்து கொண்டு உரை ஆற்றினர்.

தோழர் கே.சுப்பராயன் "பொது துறை நிறுவனங்களை காப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.
Wednesday, 23 November 2016 
அடையாளங்களை  இழப்போமோ?

தியாகம்... நேர்மை... ஒற்றுமை..
NFTEயின் அங்க அடையாளங்கள்...

வாய்மை... எளிமை... தூய்மை...
NFTEயின் சங்க  அடையாளங்கள்...

ஆண்டுகள்  100 ஆனாலும்...
அடையாளங்களை இழந்திடுவோமோ..?

களத்திலே உழும் காலம் போய் விட்டது...
சொல்லிலே உழும் சுகம் வந்து  விட்டது...

சாதிக்கப் பிறந்த சங்கம் போய் விட்டது...
சாதிக்குப் பிறந்த சங்கமாக மாறிவிட்டது...

எளியவனை உயர்த்திடும் எண்ணம் போய் விட்டது...
வலியவனுக்கு வால் பிடிக்கும் வழக்கம் வந்து விட்டது...

இழப்பை மகிழ்ச்சி  என்னும் இன்ப நிலை போய் விட்டது..
ஏற்பது    புகழ்ச்சி என்னும் இழிநிலை வந்து விட்டது...

அடையாளங்களை மீட்போம்....
63வது சம்மேளனத்தினத்தில்...
ஆன்மாவைத் தொட்டு சபதம் ஏற்போம்...
நவம்பர் 24 : சம்மேளன தினம்


NFPTE இயக்கம் இயக்கம் உதயமான தினம்.

உலகில் எந்த் ஒரு தொழிற்சங்க இயக்கமும் சாதிக்க இயலாத சாதனைகளைச் சாதித்த இயக்கம்.

பல்வேறு கருத்துக்கள் கருத்து முரண்பாடுகள் கொண்டவர்க ளையும் அரவணைத்து ஒற்றுமையுடன் செயல்படமுடியும் என உலக்குக்கு
எடுத்துக் காட்டிய இயக்கம்.

சகிப்புத் தன்மைக்குச் சான்றாக விளங்கிய இயக்கம்.

பல்வேறு போராட்டங்களை உக்கிரமாக நடத்தி சாதனைகளைச் 
சமைத்து சரித்திரம் படைத்திட்ட இயக்கம்.

தொழில்நுட்ப வளர்ச்சி தொல்லைகளைத் தந்து  தொழிலாளிகளை வேலையிலிருந்து துரத்தி விடும்  என்ற கருத்தைத் தூக்கி எறிந்து தொழிலாளிகளுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெர்றுத் தந்து 
வரலாறு வடித்த இயக்கம்.

சமூக அக்கறையோடு செயலாற்றிய இயக்கம்.

எந்த ஒரு மாற்றத்தையும் தொழிலாளிக்கு ஏற்றம் தரும் வகையில் 
மார்றிக் காட்டிய இயக்கம்.
இந்த இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்தேன் என்ற கர்வத்தோடும், பெருமையோடும் இறுதி மூச்சு வரை வாழ்வோம்.

அனைவருக்கும் சம்மேளன தின வாழ்த்துக்கள்.

Friday, 18 November 2016
சோவியத்தில்  பொதுவுடமைப் புரட்சி தோன்றியது 1917ல்.. 
இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றியது 1920ல்...
தூத்துக்குடியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது 1908ல்..

புரட்சி வெடிக்கும்  முன்னே....
தொழிற்சங்கம்  பிறக்கும் முன்னே...
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய 
மாபெரும் தலைவன்தான் வ உ சிதம்பரம் பிள்ளை...

தூத்துக்குடியில் அன்று இருந்த கோரல் நூற்பாலையில் 
தொழிலாளர்கள் கோரமாக நடத்தப்பட்டார்கள்...
உரிய கூலி இல்லை... ஓய்வு இல்லை... விடுமுறை இல்லை...
கொடுமை கண்ட  வ உ சி கொதித்தெழுந்தார்...

வ உ சியும்... சுப்பிரமணிய சிவாவும்... 
தொழிலாளர்களை உணர்வேற்றினர்...
1908 பிப்ரவரி 27ம் நாள் 3 கோரிக்கைகளை முன்வைத்து 
வேலை நிறுத்தத்தை வ உ சி துவக்கினார்...
கூலி உயர்வு... வாரத்தில் ஒரு நாள் விடுமுறை... விடுமுறை நாட்கள் 
இவைதான் தொழிலாளர் அன்று முன் வைத்த கோரிக்கைகள்...

ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டது..
ஆனாலும் அஞ்சாமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்...
9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பின்...
பஞ்சாலை நிர்வாகம் பணிந்தது...
வ உ சி அனைத்து தொழிலாளர்கள் முன்னிலையில் 
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்...
கூலி உயர்வைக் கொடுக்கவும்...
வேலை நேரத்தைக் குறைக்கவும்...
வார விடுமுறை அளிக்கவும்...
பஞ்சாலை நிர்வாகம் ஒத்துக்கொண்டது...
வேலை நிறுத்தம்  மாபெரும் வெற்றி பெற்றது...

இன்று வ உ சி இல்லை...
ஆனாலும் இந்திய தேசத்தில் இன்றும்...
கூலி உயர்வுக்காகவும்... சலுகைகளுக்காகவும்...
தொழிலாளர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...

இந்திய தேச மானம் காக்க.. 
கடலிலே சுதேசிக் கப்பல் விடுவேன்....
இயலாவிட்டால் கடலிலே விழுந்து உயிரை விடுவேன்..
என்று சூளுரைத்துக் கப்பலோட்டிய தமிழன்...
தொழிற்சங்கம் இல்லாத காலத்திலும் 
தொழிலாளரை ஒன்று திரட்டிப் போராடி வென்ற தலைவன்... 
செக்கிழுத்த செம்மல் வ உ சி நினைவைப் போற்றுவோம்...

Saturday, 12 November 2016

செல்லா நோட்டு 

75 வயதைத் தாண்டிய பெரியவர் அவர்...
எங்கேனும் பார்த்தால் புன்னகைத்துக்கொள்வோம்...

நடக்க முடியாத... கண்பார்வை சரியில்லாத 
தன் மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்...
பெற்ற பிள்ளைகள் உற்ற பிள்ளைகளாக இல்லாததால்...
மற்ற.. மற்ற.. மனிதர்களை நம்பி வாழ்நாளைக் கடத்துகிறார்...

அன்று... நாடே அல்லோகலம்...
500 செல்லாது... 1000மும் செல்லாது...
அன்றைய அந்தி மயங்கும் வேளை...
கடைத்தெருவில் பெரியவர் தென்பட்டார்...
நமது கைகளைப் பற்றிக்கொண்டு 
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றார்...
அவரது கைகளில் நடுக்கம் இருந்தது... இறுக்கமும் இருந்தது...

தேநீர் அருந்துவோம் என்றேன்...
உடனடியாகத் தலையாட்டினார்...
நல்லவேளை... 
எனது கடைசி  100 ரூபாயில் காந்திமகான்...
தான் செல்லாமல் போன விவரம் தெரியாமல் 
வழக்கம் போல் சிரித்துக்கொண்டிருந்தார்...

தேநீர் அருந்தியபின் பெரியவர் சொன்னார்...
ரொம்ப நன்றி தம்பி...
காலையில் இருந்து நானும் என் மனைவியும் பட்டினி...
கண் பார்வை சரியாக இல்லாததால் அவளால் சமைக்க முடியாது...
ஓட்டல்களில் அவ்வப்போது ஏதேனும் வாங்கி உண்போம்...
இன்றைக்கு 500... 1000 செல்லாது என்று கேள்விப்பட்டேன் 
என்று சொல்லும் போதே அவர் கண்ணில் இருந்து 
கண்ணீர் அந்தக்காலத்துக் காவிரியாய்க் கொட்டியது...

எங்கள்  இருவரின் ஈமக்கிரியைக்காக...
நாற்பதாயிரம் ரூபாய் 500... 1000 நோட்டுகளாக வைத்துள்ளேன்...
அவையெல்லாம் செல்லாது என்று கேள்விப்பட்டவுடன் 
என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை...என்று விம்மினார்...
ஓட்டலில் உணவு வாங்கக் கூட பணமில்லை என்று புலம்பினார்...

அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு 
உங்களது பணத்தை நான் 100 ரூபாய் நோட்டுக்களாக 
மாற்றித் தருகிறேன்... கலக்கம் வேண்டாம் என்று கூறியபின்தான்...
அவரது முகத்தில் கவலை மேகம் சற்றே விலகியது...
மறுநாள் பத்து 100 ரூபாய் தாள்களை அவரிடம் நீட்டியபோது...
உலகத்தை வென்ற நிம்மதி அவரிடம் தெரிந்தது....

அவரிடம் இருந்து விடை பெறும்போது...
அவர் கேட்டார் " தம்பி... இதெல்லாம் நியாயமா?'
இதைச் செய்தவங்க நல்லா இருப்பாங்களா?
முதலையைப் பிடிக்கப் போறோம் என்று சொல்லி 
எங்களைைப் போன்ற தவளைகளைக்  கொல்வதா?

அதே கேள்வியைத்தான்...
இந்த நாட்டுப்பிரதமரிடம் நாமும் கேட்கிறோம்...

SURGICAL... 
வயித்துவலியைத் தீர்க்கலாம்...
வயித்துப்பசியை...?

Thursday, 10 November 2016

NFTCL காஞ்சிபுரம் அமைப்பு மாநாடு - செங்கல்பட்டு கோட்டச் சங்க மாநாடுSunday, 6 November 2016

வேலைக்கேற்ற கூலி 

04/11/2016 அன்று சென்னை துணை முதன்மைத்தொழிலாளர் 
ஆணையர் அவர்களுடன் நடந்த முத்தரப்புப் பேச்சு வார்த்தையில்
 எடுக்கப்பட்ட  முடிவுகள்  அடிப்படையில்...

கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணியில் 
ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு
 அவரவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட 
குறைந்த பட்சக்கூலியை வழங்கிடப் பணித்த...
 துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர்  அவர்களின் 
25/10/2016 தேதியிட்ட உத்திரவை உடனடியாக அமுல்படுத்துமாறு 
தமிழ் மாநில நிர்வாகம் 04/11/2016 அன்றே மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது. 

அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 
23/11/2016 அன்று நடைபெறுகிறது. 
எனவே  21/11/2016க்குள் முடிவுகள் அமுலாக்கம்
 செய்யப்பட்ட விதம் பற்றி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு 
தெரியப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் பிரச்சினை மாவட்ட நிர்வாகங்களின் கையில் உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் பாவப்பட்ட  உறிஞ்சப்படும் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு என்ன செய்யப்போகின்றன? 
என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வேலைக்கேற்ற கூலி விவரம் 


காவல் பணி - ஆயுதம் இல்லாமல் 

தற்போது வழங்கப்படும் UNSKILLED கூலி 
A  பிரிவு நகரம்   - ரூ.374/=
B  பிரிவு  நகரம்  - ரூ.312/=
C   பிரிவு  நகரம்  - ரூ.250/=


வழங்கப்பட வேண்டிய கூலி 

A  பிரிவு நகரம்   - ரூ.414/=   கூலி வித்தியாசம்  நாளொன்றுக்கு ரூ.40=
B  பிரிவு  நகரம்  - ரூ.353/=   கூலி வித்தியாசம்  நாளொன்றுக்கு ரூ.41=
C   பிரிவு  நகரம்  - ரூ.293/=  கூலி வித்தியாசம்  நாளொன்றுக்கு ரூ.43/=

மாதம் ரூ.1200/= அளவில் காவல் பணி செய்வோரின் கூலி பறிபோகிறது.எழுத்தர் மற்றும் கேபிள் பணி 

தற்போது வழங்கப்படும் UNSKILLED கூலி 
A  பிரிவு நகரம்   - ரூ.374/=
B  பிரிவு  நகரம்  - ரூ.312/=
C  பிரிவு  நகரம்  - ரூ.250/=


வழங்கப்பட வேண்டிய கூலி 

A  பிரிவு நகரம்   - ரூ.456/=   கூலி வித்தியாசம்  நாளொன்றுக்கு ரூ.82/=
B  பிரிவு  நகரம்  - ரூ.414/=   கூலி வித்தியாசம்  நாளொன்றுக்கு ரூ.102/=
C  பிரிவு  நகரம்  - ரூ.353/=  கூலி வித்தியாசம்  நாளொன்றுக்கு ரூ.103/=

மாதம் ரூ.3000/= என்ற அளவில் 
கேபிள் மற்றும் எழுத்தர் பணி செய்வோரின் கூலி பறி போகிறது.


நித்தம் நித்தம் பறி போகும்...
 அடிமட்டத்  தொழிலாளியின் 
அன்றாட அப்பமும்...தண்ணீரும்...
மறுதலிக்கப்படாமல்... மனித நேயத்துடன்...
 அவர்களுக்குத் தரப்பட வேண்டும்...
இதுவே நமது மனம் கசிந்த வேண்டுகோள்...


-நன்றி காரைக்குடி மாவட்ட சங்கத்திற்கு .


Saturday, 5 November 2016

முத்தரப்பு பேச்சுவார்த்தை 

சம வேலைக்கு சம ஊதியம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் BSNL  நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்கிடக்கோரி NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் சென்னை DEPUTY C.L.C.,  துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் வழக்குத் தொடுத்திருந்தார். 

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 
 25/10/2016 அன்று DEPUTY C.L.C.,  நமது நிர்வாகத்திற்கு அளித்திருந்த கடிதத்தில்  BSNLலில் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களில்..

கேபிள் பணி புரிவோர்...
காவல் பணி புரிவோர் 
அலுவலகங்களில் எழுத்தர் பணி புரிவோர்..

ஆகியோருக்கு  அந்தந்தப் பணிகளுக்குரிய சம்பளம் வழங்கிடவும் 
இது சம்பந்தமான அறிக்கையை சென்னை மற்றும் தமிழ் மாநில நிர்வாகங்கள்   04/11/2016 அன்று நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது சமர்ப்பிக்க வேண்டும் 
எனவும் குறிப்பிட்டிருந்தார்.

04/11/2016 அன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 
நமது நிர்வாகம் வழக்கம் போலவே வந்திருந்தது. DEPUTY C.L.C.,யின் 25/10/2016 கடிதத்தில் உள்ள வழிகாட்டுதல்களை அமுல்படுத்துவதற்குப் பதிலாக அந்தக் கடிதத்தின் மீது மாவட்ட நிர்வாகங்களின் கருத்துக்களை தமிழ் மாநில நிர்வாகம் கேட்டிருந்தது. 

இது முறையற்ற செயல் என்று குறிப்பிட்ட DEPUTY C.L.C.,  
நமது BSNL  நிர்வாக அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.

மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள BSNL நிறுவனம் 
ஒரு முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும் எனவும்... தொழிலாளர் நலச்சட்டங்கள் எந்தவிதத்  தயக்கமும் இன்றி அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் உறுதிபட எடுத்துரைத்தார்.  

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்திரவை நினைவூட்டிய DEPUTY C.L.C., அவர்கள் BSNL நிறுவனம் உச்ச நீதிமன்ற உத்திரவை மதிக்க வேண்டும் எனவும் சமவேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கையை அமுல்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் தெளிவுபடக் கூறினார். 

BSNL நிறுவனம் அமுல்படுத்த தயங்கும் பட்சத்தில்
 சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிர்வாகத்தின் மீது  
நிச்சயம் எடுக்கப்படும் என்பதனையும் கூறினார். 

வரும் 23/11/2016 அன்று இறுதிக்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அதற்கு முன்பாக சம வேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு 
மாநில நிர்வாகம் உரிய உத்திரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் 
எனவும் உத்திரவிட்டுள்ளார்.

04/11/2016 கூட்டத்தில் 
தமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பாக 
உதவிப்பொது மேலாளர்  திரு.ஆஞ்சநேயன் அவர்களும்...
சென்னை மாநில நிர்வாகத்தின் சார்பாக 
உதவிப்பொது மேலாளர்  திருமதி.சங்கரி  அவர்களும்...

NFTCL சார்பாக மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன்,
காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர்.மாரி...
சென்னைத் தோழர்கள் பாபு... இளங்கோ ஆகியோரும்...

TNTCWU சார்பாக தோழர்கள். முருகையா... பழனிச்சாமி 
ஆகியோரும் கலந்து கொண்டனர்...

மிகுந்த மனித நேயத்துடன் ஊழியர் தேவைகளைப் பரிசீலித்த 
துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் 
திரு,ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும்....

நமது மாநில நிர்வாகங்களும் மனித நேயத்தோடு
 தங்களது பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்...