Tuesday, 30 August 2016அதிகார வர்க்கத்தின் ஆணவ போக்கை அடித்து நொறுக்கும் கை .இது எவருக்கும் அஞ்சிடாத உழைக்கும் மக்களின் சிவந்து நிற்கும் கை .
செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தின் ஓங்கி ஒலிக்கும் NFTCL கை . போராட்டத்தை ஒத்தி வைக்க மத்திய அரசாங்கம் இன்று தொழிலாளி நிலையை உணர வைத்துள்ள கை . அதன் காரணமாக 2008-இல் ஒப்பந்த தோழர்கள் ஊதியம் மாறியது அதோடு இன்றுதான் நம்மை பற்றி அரசாங்கம் யோசித்திருக்கிறது . அதன் காரணமாக இதுவரை நாள் ஒன்றுக்கு ரூபாய்-246/- தினக்கூலியாய்  பெற்ற தொழிலாளி இனிமேல் ரூபாய் 350/- பெரும் வாய்ப்பு  கிடைத்திருக்கிறது . இதுவே நமது செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தின் முதல் வெற்றி . மேலும் வெற்றி பயணத்தை செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்புற செய்வோம். NFTCL ஜிந்தாபாத் !!!    

Centre raises minimum wage to preempt trade unions strike

Union Finance Minister Arun Jaitley on Tuesday also announced that Central Government employee will get their two years bonus, which has been pending for some time now.

Former prime minister Narasimha Rao, Narasimha Rao's reforms out of complusion, failure of Nehruvian economics, Nehruvian economics held India back, Finance Minister Arun Jaitley, India's economic policy, India's economy, Indian economy, Hindu rate of growth, Slow hindu rate of growth, latest news, India news
Union Finance Minister Arun Jaitley on Tuesday also announced that Central Government employee will get their two years bonus, which has been pending for some time now.
The Union Government of India, in its attempt to dissuade trade unions from going ahead with the proposed mass strike this Friday, has accepted the advisory board recommendations and raised the minimum wage from Rs 246 to Rs 350 per day for non-agricultural workers.
Union Finance Minister Arun Jaitley on Tuesday also announced that Central Government employees will get their two years bonus, which has been pending for some time now. The Centre has decided to write to all states regarding compliance of contract workers law, Jaitley added.
The likely financial implications of the bonus move translate into Rs 1,920 crore per annum. “In the last one and a half years, the inter-ministerial committee had met with central trade unions. Trade unions placed various demands. Some were labour related and some economic policy issues related. The government has taken some decisions with regard to those on the basis of their recommendations,” added Jaitley.
Power and Coal Minister Piyush Goyal and Labour and Employment Minister Bandaru Dattatreya were also present. Jaitley said it has been decided to fix the minimum wages at Rs 350 per day for unskilled non-agricultural workers for ‘C’ category areas keeping in view the modalities of fixing minimum wages.
The decision was taken following deliberations at the meeting of the Minimum Wage Advisory Board under the chairmanship of the labour minister for revising the basic minimum wages in the central sphere.
The registration of the contract workers and their staffing agencies is mandatory and states will be advised to strictly implement the same, the finance minister said. Errant contractors will face appropriate action for any violation, he warned.
The issue of giving social security benefit to the unorganised sector (like Anganwadi, mid-day meal, Asha volunteers) will be examined by a committee which will give its report at the “earliest”.
Asked about the strike call, Jaitley said: “I think we have responsible trade unions.” On the opposition to the government’s plans to merge associate banks of SBI with the parent bank, Jaitley said “the merger is not subject of trade unions”.
“Their service conditions are not being hurt adversely or affected at all. There will be no impact of merger on service conditions of any employee. If government decides that we need strong banks, then unions would have to change their approach to the whole issue,” he asserted.
Dattatreya has held meetings with central trade unions wherein detailed discussions were held with regard to their charter of demands.
The issues have been taken up by inter-ministerial committee headed by the finance minister. As many as 10 central trade unions have given a call for a one-day pan-India strike on September 2, 2016, to protest against the government’s labour reforms and “not paying heed to their demands”.
On Monday, Prime Minister Narendra Modi chaired an emergency meeting, in which the Union Labour Minister Bandaru Dattareya was also present, to decide on the Centre’s plan of action to preempt the trade strike called by agitating union workers.

Friday, 26 August 2016

யார் தொழிலாளிக்காக உழைக்கும் தலைவன் 

என்று நம்மை சாரா மற்ற நிறுவனங்கள் 

அறிந்து இருக்கும் போது நம்ம சங்க தோழர்கள்

 கத்தியை முழுங்க நினைப்பதும் ஏனோ ? 


கடலூர் மாவட்ட E.S.I எனப்படும் மருத்துவ காப்பிடு குழமம் 

நடத்திய கலந்தாய்வு கூட்டம்  நமது NFTCL மாநில செயலர் 

s.ஆனந்தன் தலைமையில்  நடைபெற்றது . இக்கூட்டத்தில் 

தோழர் மதிவாணன் மாவட்ட பொருளாளர் வரவேற்புரை 

நிகழ்த்தினார் . இதை அடுத்து ESIC 

நிறுவனம் தொழிலாளர்களின் மருத்துவக் காப்பீட்டுத் 

தொகையை ரூபாய் 15000த்திலிருந்து ரூபாய் 25000ஆக 

உயர்த்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை 

செய்துள்ளது.மத்தியஅரசு அனுமதிக்குப்பின் அமுலாக்கம் 

வரும் என்று  மருத்துவ காப்பிட்டு ஆய்வாளர் 

விளக்கவுரையாற்றினார். இக் கூட்டத்தை  தோழர் 

நித்தியானந்தம் மருத்துவக் காப்பீட்டுத்அலுவலர்   நன்றி கூறி 

முடித்து வைத்தார்.இக்கூட்டத்தில் ஒரு தொழிலாளி வேலை 

பார்க்கும் இடத்தில் விபத்தால் தன் கையை இழந்தவருக்கு 

Pension Order யை நமது  மாநில செயலர் வழங்கினார்.

Monday, 22 August 2016

ஆறிலே... ஒன்றும்... ஆயிரத்திலே.. ஒன்றும்..
பிரதமர் மோடிக்கு கைப்பந்து வீராங்கனை பூஜா  கடைசியாக எழுதிய கடிதம்


உலகில் ஆறில் ஒருவன் இந்தியன்...
ஒலிம்பிக்கில் ஆயிரத்தில் ஒருவன் இந்தியன்...

உலக மக்கள் தொகை 735 கோடி...
இந்திய மக்கள் தொகை 130 கோடி...

ஒலிம்பிக்கில் மொத்தப் பதக்கங்கள்  2102...
இந்தியா பெற்ற பதக்..கங்கள்  வெறும்  2...
கடைசி இலக்கத்தை எப்படியோ.. 
கணக்காய்ப் பெற்று விட்டோம்...

140 கோடிப் பேரைப்  பெற்றெடுத்த  சீனா பெற்றது 70...
130 கோடிப் பேரைப் பெற்றெடுத்த  இந்தியா பெற்றது 2..

2016 போனால் போகட்டும்...  
2020 ஒலிம்பிக்கில்... 
சத்தியமாக சீனாவை முந்திவிடுவோம்...
பதக்க வீரர்களாக அல்ல... பாலூட்டிகளாக...

சிந்துவிற்கும்... சாக்ஷிக்கும்  கோடிகள் குவிகிறது...
ஏதோ ஒரு கோடியில்... 
பஞ்சாபில் வாழ்ந்த கைப்பந்து வீராங்கனை.. 
பூஜா உடலில் வெள்ளைக்கோடி இறுதியாக வீழ்கிறது...

பூஜா தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை...
விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் 
விடை பெற்றுச் சென்று விட்டார்...

இது கூஜாக்களின் தேசம்...
பூஜாக்களுக்கான தேசமல்ல...

தனது நிலை யாருக்கும் வேண்டாம் என...
பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...
பூஜா எமனிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...

பெற்ற  இரண்டு பதக்கங்களை விட..
பிரிந்து விட்ட ஒரு உயிர்...
நம் நெஞ்சை வதைக்கிறது...

இந்த தேசம் வெற்றி பெற்றவனை மட்டுமே 
தலையில் வைத்துக் கூத்தாடும்...

திறமை இருந்தாலும்... நேர்மை இருந்தாலும்..
எளியவனைத்  தரையில் போட்டுப் பந்தாடும்...

அரசியல் விளையாட்டாகிப்போன தேசமிது...
விளையாட்டும் அரசியலாகிப்போன நாசமிது...

நேர்மையும்... திறமையும்.. என்று மதிக்கப்படுகிறதோ...
அன்றுதான் இந்த தேசத்தின் தலை நிமிரும்...
பாதகங்கள் அகலும்... பதக்கங்கள் குவியும்...
அதுவரை பூஜாக்கள் கதை தொடரும்...

Friday, 12 August 2016
                              சென்னை மாநில சங்க தர்ணாவில் 
நமது மாநிலச் செயலர் தோழர் கே.நடராஜன்
Sunday, 7 August 2016


        NFTCL தனது பயணத்தில் மேலும் ஒரு                                                      வெற்றி!!! 

02/08/2016 அன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தையில் Dy .Chief Labour Commissioner வழிங்கிய உத்தரவு மற்றும் அன்று நடத்த பேச்சுவார்தையின் அனைவ்ரும் ஒப்பு கொண்டு கையெழுத்திட்ட  தொகுப்பு .  (மினிட்ஸ்) 


Saturday, 6 August 2016


வாக்கியப் பஞ்சாங்கப்படி  02/08/2016 காலை 9.23  மணிக்கு 
குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
அனைவருக்குமான பொதுப்பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BSNL  நிறுவனம்
இதுநாள் வரை எட்டாம் இடத்தில் அமர்ந்து நட்டங்களையும்... நற்பெயருக்கு களங்கத்தையும் உண்டுபண்ணிய குருபகவான் 
இனிமேல் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கப்போகிறார்.  இனிமேல் செலவுகள்  குறையும். லாபம் கூடும். 
SIM விற்பனை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை 
மாறி சூடு பிடிக்கும். வாடிக்கையாளர் உறவு மேம்படும். 
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  இதுநாள் வரை தொல்லை தந்த ஓய்வூதியச்சுமை குறைந்து மகிழ்ச்சி உருவாகும். 
ஆனாலும் பங்கு விற்பனை... தனியார்மயம் போன்ற
பயமுறுத்தல்களும் அவ்வப்போது வந்து போகும். 
பொதுவாக இந்தக் குருபெயர்ச்சி நற்பலன்களையே தரப்போகிறது.

பணியாளர்கள் 
பணியாளர்களுக்கு இது முக்கியக்காலக்கட்டமாகும். 
ஒற்றுமையுடன் போராடினால்  போனஸ், மருத்துவப்படி,78.2ல் வீட்டு வாடகை, 2017 முதல் ஊதிய உயர்வு ஆகியவற்றை அடையலாம். ஒற்றுமை நீங்கில் தாழ்வே வந்து சேரும். பதவி உயர்வுத்தேர்வுகளில் தடைகளும்.. தாமதங்களும் வந்து நீங்கும். ஆனாலும் தளராமல் ஊழியர்கள் தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நிறுவனம் உயர,  அதன் மூலம் தங்கள் நிலை உயரப்  பணியாளர்கள் கூடுதலாகப் பணி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களை வசப்படுத்த வேண்டும். 
உண்மையுடனும், நேர்மையுடனும்  உழைத்தால் இந்தக்குருபெயர்ச்சி மட்டுமல்ல... எல்லாக்குருபெயர்ச்சியிலும்  நற்பலன்களைப்பெறலாம்.

அதிகாரிகள் 
அதிகாரிகளுக்கு அனுகூலமான காலமிது. 2017 ஜனவரி முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனாலும் வாங்கும் சம்பளத்தில் பாதியை வட்டியாகவும்... வரியாகவும் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். ஊழியர்களுடன் விரோதம் பாராட்டாமல்.. அன்பு பாராட்டினால் அவர்களிடம் கூடுதலாக வேலை வாங்க முடியும். மாறாக அதிகாரப்பிரயோகம்  செய்வது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். நிறுவனம் காத்திடும் முயற்சியில் ஊழியர்களுடன் இணைந்து போராட வேண்டிய அவசியம்  உருவாகும்.

ஒப்பந்த ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் அதன் பாதிப்பு இந்தக்குருபெயர்ச்சியிலும் தொடரும். சம்பளம் சரியான தேதிக்கு கிடைக்காது. EPF ESI போன்றவை எட்டாக்கனியாகவே இருக்கும். போனஸ் என்ற வார்த்தை காதில் விழும். கையில் விழாது.  போராட்டங்கள்  மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். 
நல்ல கதை எதுவும் நடக்காது.   ஆனாலும் தோழர்கள்  சோர்வடையத்தேவையில்லை. 2016 செப்டம்பர் 2க்குப் பின் வாங்கும் சம்பளம் உயரும் வாய்ப்புள்ளது.  இதற்காக மற்ற மத்திய சங்கங்களோடு இணைந்து செப்டம்பர் 2ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்து வர கெடுபலன்கள் குறைந்து நல்லவை நடைபெறும்.  

சங்கங்கள் 
ஏழாமிடத்துக்குரு எட்டாமிடத்திற்கு செல்வதால்    சங்கங்களுக்கிடையே ஒற்றுமை எட்டாத இடத்திற்குச் செல்லும். போட்டி... பூசல் அதிகரிக்கும். உள்கட்சிப்பூசல் பூதாகரமாக வெடிக்கும்.  சங்கங்கள்  தனித்தனிக் குழுக்களாக செயல்படும்.  தலைகள் உருளும்.  ஊழல் தலைகளும்... உதவாதப் பெருந்தலைகளும்  நேர்மை வெளிச்சத்தில்  மிரளும். ஊழல்வாதிகள் தலைமையைப் பிடிக்கத்  திட்டம் தீட்டுவர். ஆனாலும் அது தோல்வியில் முடியும். உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமே கெடுபலன்களைக் குறைக்க முடியும். சங்கத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும் அவர்கள் பால்க்காவடி.. பழக்காவடி தூக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். கச்சேரிகளில் ஜால்ரா சத்தம் குறைவாக இருப்பது 
கச்சேரியின் இனிமையைக் கூட்டும். 

பரிகாரம் 

உழைப்பு...ஒற்றுமை...நேர்மை...
என்ற குரு மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால்
கெடுபலன்கள் குறைந்து நல்லதே  நடக்கும்...

Wednesday, 3 August 2016

                               NFTCL    ZINDABAD

Today a conciliation meeting is conducted 

before Honorable Dy. Chief Labour Commissioner regarding 

the Minimum Wage and equal pay for equal work. In which 

more than 10 Contractors all over Tamil Nadu and Chennai 

and also our administrative authorities DGM-HR,AGM Estb-

Chennai and DGM &AGM -,Tamil Nadu participated.

Our NFTCL Union representatives State Sec. S.Anandhan 


and State Treasurer V.Babu & NFTE All India Sec. 

K.M.Elangovan participate in this discussion. Which paved

 way to rectify irregularities of Contractors and made 

administration to the know the Current position of Contract 

workmen. A positive move was really happy to say....We 

have thank Labour Department which acts for the welfare of 

Labourers.