வியாழன், 18 பிப்ரவரி, 2016


.நாங்கள் தேச துரோகிகள்தான்.....,

.
நீங்கள் நிறுவ நினைக்கும்
காவிதேசத்தின் தூரோகிகள்.
மூவாயிரம் ஆண்டுகளாய்
வாழ்ந்து வரும்
ஓர் இனத்தை
கருவறுத்து அதன்
சமாதியில் விளைச்சல்
செய்ய நினைக்கும்
நீங்கள் நிறுவும் தேசத்தின்
துரோகிகள்.
.
சாதியின் பெயரால்
அம்மனமாக்கி.
மலம் தின்ன வைக்கும்
நீங்கள் சொல்லும்
தேசத்தின் தூரோகிகள்
தான் நாங்கள்.
.
டாலர் கணக்கில்
ஆயில் பேரல்
விலை குறைந்தாலும்
விலையை குறைக்காமல்
எளியவர்களின்
வயிற்றில் அடித்து
முதலாளிகளின்
செருப்புகளை
நக்கிப் பிழைக்கும்
நீங்கள் சொல்லும்
தேசத்தின் துரோகிகள்தான்
நாங்கள்.
.
வெமுலாக்களும்,
இளவரசன்களும்,
கோகுல்ராஜுக்களும்,
இறந்து கொண்டே இருக்கும்
வரை எங்களின்-நீங்கள்
குறிப்பிடும் துரோகத்தின்
பட்டியல் நீண்டு
கொண்டே இருக்கும்.
.
AIYF strongly condemnig the illegal arrest of Kannaiah Kumar,JNUSU President on sedition case.AIYF NWC calls upon all its state dist units to go on protest against BJP Fascist Govt.We demand unconditional release of Kannhaiah Kumar.We request all left and democratic forces to extend support.





வெள்ளி, 12 பிப்ரவரி, 2016



எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!!

ஏமாற்றும் இந்த சங்கங்களை இனியும்  நம்ப வேண்டுமா ? தோழர்களே  சிந்திப்பர்   ......,

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 26 நாள் சம்பளம் என்ற பிரச்சனை நமது கடலூர் மாவட்டத்தில் நிலவி வருவது அனைவரும் அறிந்த விஷயம் . 
அன்றைக்கும் நமது மாவட்ட சங்கம்தான்  உயர் நீதிமன்றம் அணுகி தடை ஆணை பெற்றோம் . அதனால் மட்டுமே கடந்த 3ஆண்டுகளாக நாம் 30 நாள் சம்பளம் பெறுவது அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் அறிந்ததே.
ஆனால் தீடிர் என்று மாவட்ட நிர்வாகம் பல பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது .  அந்த உத்தரவுகளை நிறைவேற்றினால் நமது மாவட்ட சங்கம்  வழக்கு தொடரும் என்ற வக்கீல் நோட்டீஸ் கொடுத்தோம் .மாவட்ட நிர்வாகமும் செவி சாய்த்தது.31 நாள் சம்பளம் அனைத்து ஒப்பந்ததாரரையும் கொடுக்க உத்தரவிட்டது.
மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள்  நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தொழிற்சங்கங்கள் 16/02/2016 உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறதாம் . நிர்வாகம் 26 நாள் சம்பளம்தான் வழங்க முடியும் என்று சொல்லும் பொழுது  எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காது .இன்று நாடகம் நடத்தும்....இந்த சங்கங்ககளை இனியும்  நம்ப வேண்டுமா ? 
தோழர்களே சிந்திபீர் !!!




புதன், 10 பிப்ரவரி, 2016



திவாலாகிப்போன BSNLEUவின்    நிலைபாடுகள் !

BSNLEU  சங்கத்தின் தமி ழ் மாநில சங்க கிளையும் சென்னை தொலைபேசி மாநில சங்க கிளையும் 7 வது அங்கீகாரத் தேர்தலுக்கான முதல் நிகழ்வை  அரங்கேற்றியுள்ளன. 

ஆம் !  தமிழக BSNL ஊழியர்களின் கூட்டுறவு சொஸைட்டியை எதிர்த்து 
தனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே கூட்டுறவு சங்கம்  BSNLEU சங்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமலில் இருந்த வட்டி விகிதம் 16.5 %

தற்போது நமது சங்க கூட்டணியின் ஆதரவோடு  செயல்படும்போது,
அதைவிட 0.5 சதம் குறைவாக 16 சத வட்டிதான் அமலில் உள்ளது.

இருந்தாலும் BSNLEU சங்கத்தினர்  வட்டியை குறைக்க கோரி  ஆர்ப்பாட்ட நாடகம் நடத்தியுள்ளனர்.

BSNLEU  சங்க  கட்டுப்பாட்டில்  இருந்தபோது வசூலிக்கப்பட்ட  16.5 சத வட்டியை  குறைக்க நாம் வலியுறுத்தியபோது, அது சாத்தியமில்லை 
என்று உறுதியாக கூறியதோடு,  அதை  பல காரணங்களைக் கூறி நியாயப்படுத்தியதையும் ஊழியர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

2004லிருந்து 12 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகாரத்தில் இருக்கிறது  BSNLEU சங்கம்.

 இந்த 12 ஆண்டுகளில் BSNLEU சங்கம்  ஊழியர்களுக்கு கொடுத்த 
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.அதற்கு மாறாக 
கடந்த காலங்களில் நமது சங்கம் போராடிப் பெற்ற பல உரிமைகளயும் சலுகைகளையும் நிர்வாகத்திடம் சரண்டர் செய்தனர் என்பதே உண்மை..   

அதில் ஊழியர்களின் கண்ணை உறுத்தும் சில உதாரணங்கள் :

1. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக போனஸ் இழப்பு 

2. பதவி உயர்வில் SC/ST ஊழியர்க்கு இட ஒதுக்கீடு ரத்து 

3. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் என்பது
  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று ஆனது.

4. அபிமன்யூவின் அர்த்தமற்ற எதிர்ப்பு காரணமாக LTC செல்லும்போது
     ELஐ பணமாக பெறும் வசதி ரத்து ஆனது.  

5. நமது சங்கம் பெற்ற சகல வசதிகளுடன் கூடிய மருத்துவ திட்டம்    
   சின்னாபின்னமானதோடு , மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்ட
  வெளிப்புற சிகிச்சைக்கான மெடிக்கல் அலவன்ஸ்  ரத்து  ஆனது.

  தங்களது செயல்பாட்டின்மையை குற்ற உணர்வோடு பரிசீலிக்காமல் ,
 16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இதற்கெல்லாம் கார்ப்பரேஷன் ஆனதுதான் காரணம் என்று  தோழர் குப்தா அவர்கள் இறந்த பின்னும் அவர் மீது வீண்பழி சுமத்துவது ஒன்றே அவர்களது  ஒற்றை வரி பதிலாக உள்ளது .  

பொய்யான வாக்குறுதி அளித்து ஊழியர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவது ஒன்றே அவர்களது சாதனையாக உள்ளது.

அவர்கள்  நிறைவேற்றாத ஒரு சில வாக்குறுதிகள் ..... 

1.அனைத்து ஊழியர்களுக்கும் 5 கட்ட பதவி உயர்வு 

2. அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் 5 நாள் வேலை திட்டம்

3. பரிட்சை இல்லாமல்  பதவி உயர்வு.  அனைத்து T.Mech  ஊழியர்களுக்கும்  
     சீனியாரிட்டி அடிப்படையில் TTA பதவி உயர்வு . 

4.குறைந்த பட்ச போனஸ் ரூ.10,000/-

5.MTNL ஊழியர்க்கு இணையான ஊதியம்

இந்த முறையும் அதுபோன்ற பொய்யான வாக்குறுதிகள் வழங்கி ஊழியர்களை ஏமாற்ற முடியாது.  

ஊழியர்கள் விழித்துக் கொண்டு விட்டதால், கடந்த ஐந்து முறை 
பொய்யான வாக்குறுதிகளை நம்பியதைப்போல இம்முறை ஏமாற 
மாட்டோம் என்ற உறுதியுடன் உள்ளனர்.

அச்சங்கத்துடன் கடந்த காலங்களில் கூட்டணி வைத்தவர்கள்கூட
 இம்முறை அவர்களுடன் கூட்டணி அமைக்க   தயக்கம் காட்டுகின்றனர்.  

கடந்த 12 ஆண்டுகளில் எந்த உருப்படியான சாதனையையும் செய்ததாக அவர்களால் நெஞ்சு நிமிர்த்தி கூற முடியாததால்தான், BSNLவளர்ச்சியில் 
அதீத அக்கறை உள்ளபவர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். 

BSNLEU சங்கத்தினரின் தொடர்ந்த எதிர்மறைப் பிரச்சாரம் ஊழியர்களிடையே 
சலிப்பை ஏற்டுத்தியுள்ளது.

BSNLEU சங்கத்தின் துரோகத்திற்கும் செயல்பாடின்மைக்கும் பாடம் புகட்ட  ஊழியர்கள்  தயாராகி விட்டனர்.
  
அந்த நல்ல முடிவு எடுத்துள்ள அனைத்து  ஊழியர்களை அணி திரட்டுவோம் !

ஒரு மகத்தான  வெற்றி மே 12 அன்று நமக்கு காத்திருக்கிறது.