செவ்வாய், 24 நவம்பர், 2015

நவம்பர் 24 : சம்மேளன தினம்


NFPTE இயக்கம் இயக்கம் உதயமான தினம்.

உலகில் எந்த் ஒரு தொழிற்சங்க இயக்கமும் சாதிக்க இயலாத சாதனைகளைச் சாதித்த இயக்கம்.

பல்வேறு கருத்துக்கள் கருத்து முரண்பாடுகள் கொண்டவர்க ளையும் அரவணைத்து ஒற்றுமையுடன் செயல்படமுடியும் என உலக்குக்கு
எடுத்துக் காட்டிய இயக்கம்.

சகிப்புத் தன்மைக்குச் சான்றாக விளங்கிய இயக்கம்.

பல்வேறு போராட்டங்களை உக்கிரமாக நடத்தி சாதனைகளைச் 
சமைத்து சரித்திரம் படைத்திட்ட இயக்கம்.

தொழில்நுட்ப வளர்ச்சி தொல்லைகளைத் தந்து  தொழிலாளிகளை வேலையிலிருந்து துரத்தி விடும்  என்ற கருத்தைத் தூக்கி எறிந்து தொழிலாளிகளுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெர்றுத் தந்து 
வரலாறு வடித்த இயக்கம்.

சமூக அக்கறையோடு செயலாற்றிய இயக்கம்.

எந்த ஒரு மாற்றத்தையும் தொழிலாளிக்கு ஏற்றம் தரும் வகையில் 
மார்றிக் காட்டிய இயக்கம்.
இந்த இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்தேன் என்ற கர்வத்தோடும், பெருமையோடும் இறுதி மூச்சு வரை வாழ்வோம்.

அனைவருக்கும் சம்மேளன தின வாழ்த்துக்கள்.


சபாஷ் 

மகாதேவா...வாழ்த்துக்கள் 

ஓரிரு தினங்களுக்கு முன்பு...
உள்ளூரில் நண்பன் ஒருவனின் 
அகால மரணத்திற்கு சென்று  விட்டு..
தோழர்களுடன் அரசுப்பேருந்தில்.. 
காரைக்குடி திரும்பிக்கொண்டிருந்தோம்...

வரும் வழியிலேயே... நமது தோழர் ஒருவருக்கு..

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல்...
குறைந்த ரத்த அழுத்தம் உருவாகி  உடல் நலிவு ஏற்பட்டு விட்டது...

உடனே.. திருவாடானை கிளைச்செயலர்..

தோழர்.பாலமுருகனிடம் தொடர்பு கொண்டோம்.
திருவாடானையிலேயே இறங்கி விடுமாறும்..
அங்குள்ள அரசு மருத்துவமனையில் 
சிகிச்சை பெறலாம் என்றும் சொன்னார்..

அரசு மருத்துவமனை என்றாலே பலருக்கு அலர்ஜிதான்....
ஆனாலும் ஆபத்தான கட்டமாக இருந்ததால்
திருவாடானையிலே இறங்கி விட்டோம்..
ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம்...
மருத்துவர் பணி முடித்திருந்தாலும்...
நமக்காகவே காத்திருந்தார்...
பாதிக்கப்பட்ட தோழரின் நாடித்துடிப்பை சோதித்தார்...
நாடித்துடிப்பே தென்படவில்லை என்றும் 
நாற்பதுக்கு கீழே போய்விட்டதென்றும் கூறி விட்டு
அவசர அவசரமாக முதலுவி சிகிச்சையில் ஈடுபட்டார். 

இரண்டு மருத்துவர்கள்... மூன்று செவிலியர்கள்...
கடமையுணர்வோடு செயல்பட்டு.. 
நாடித்துடிப்பைச்சீர்செய்து  நலம் பெற வைத்தனர்.

மருத்துவருக்கு நன்றி தெரிவித்தோம்..

அவர் சொன்னார்.. 
"நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டியதில்லை... 
இதோ  இவருக்கு நன்றி  செலுத்துங்கள் என்று..
நம் தோழர்  ஒருவரைக் குறிப்பிட்டுக் கூறினார்"

மருத்துவர்  மேலும் தொடர்ந்தார்.. 

"நான் பணி முடித்து வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்..
மகாதேவன் போன் செய்து...
அவசரமாக எங்கள் தோழருக்கு  சிகிச்சை அளிக்க வேண்டும் 
என கேட்டுக்கொண்டதால் நான் காத்திருந்தேன்....
காரணம்... 
மகாதேவன்.. காலையும் மாலையும் 
அரசு மருத்துவமனைக்கு வந்து 
BSNL சேவை சரியாக உள்ளதா? என நித்தமும் 
எங்களை கேட்டு விட்டுத்தான் BSNL அலுவலகம் செல்வார்...
ஏதேனும் பழுது என்றால் பறந்து வந்து சரி செய்வார்...
இங்கு பழுது என்பது சில நிமிடங்களே இருக்கும்...
எனவே அத்தகைய கடமை உணர்வுள்ள 
ஒரு தோழர்.சொன்னதால்தான் 
நான் பணி முடித்தும்... 
மதிய உணவு உண்ணாத நிலையிலும் 
இங்கே காத்திருந்தேன்" என்று சொன்னார்.

அவர் அளித்த சிகிச்சையை விட 
அவரது பேச்சைக்கேட்டதும்... 
நமது நாடித்துடிப்பு உற்சாகமாக ஓடத்துவங்கியது...

தோழர்களே...

யார்? இந்த மகாதேவன்...
ஆறு இலக்கத்தில் சம்பளம் பெறும் அதிகாரியா?
ஐந்திலக்கத்தில் ஊதியம் பெறும் ஊழியரா?
SDEயா? JTOவா? TTAவா? போன் மெக்கானிக்கா?
இல்லை.. தோழர்களே...இல்லை...
அவர்... ஒரு ஒப்பந்த ஊழியர்...

மாதம் மூவாயிரம் மட்டுமே சம்பளமாகப் பெற்று 
சாதாரண வாழ்க்கை நடத்தும் அடிமட்ட ஊழியன்..
தன் இளம்பருவத்திலே இருந்து..
இங்கு பணி புரியும் சாதாரண மனிதன்...
ஆனாலும் கடமை உணர்வு தவறாமல்..
BSNL தழைக்க தன் உழைப்பை சிந்தும் தோழன்..

இவனைப்போன்றவர்கள்தான்...

இந்த நிறுவனத்தின் இன்றைய வேர்கள்...
இவர்கள் வெளிச்சம் காண்பதில்லை...
இவர்களின் வேதனைகள் யாருக்கும் புரிவதில்லை..
ஆனாலும் வேர்களாக நின்று 
இந்த நிறுவனம் தாங்கும் 
இவர்களை நெஞ்சாரா வணங்குகிறோம்...

தோழர்களே...
ஆதி இரத்தினேஸ்வரர் 
அருள் புரியும் திருவாடானையில்...
அரசு மருத்துவமனையின் அற்புதம் தெரிந்தது...
அடிமட்ட ஊழியனின் அர்ப்பணிப்பும் புரிந்தது...

அர்ப்பணிப்பு மிக்க...மகாதேவன் போன்ற 
வெளிச்சம் காணாத.. வேர்களின் விடியலைத்தான்..
தொடர்ந்து இங்கே தேடிக்கொண்டிருக்கின்றோம்...

வியாழன், 19 நவம்பர், 2015


போராடாமல் வென்றதில்லை!போராடி நாம் !!தோற்றதில்லை !!!


நமது மாநில சங்கத்தின் சார்பாக 20/11/2015 அன்று முதல் நடக்கவிருந்த தொடர் வேலை நிறுத்தம் முத்தரப்பு பேச்சுவார்த்தையின்  அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளது . நமது கோரிக்கையின் நியாத்தையும் ,உணர்வையும் புரிந்து கொண்ட  தொழிலாளர் நல ஆணையர் விடுத்த அவசர  கூட்டத்திற்கு நமது சங்கத்தின் சார்பாக நமது மாநிலசெயலர்  S .ஆனந்தன் ,மாநில பொருளாளர் Y . பாபு , கடலூர் மாவட்ட துணை செயளர் ரவி ,ஒப்பந்த தொழிலாளர்கள் பழனி  மற்றும் ரூபன் தாஸ் மற்றும்  நமது மாநில நிர்வாகத்தின் சார்பாக தமிழ் மாநில DGM (Admin ) M .ரவி அவர்களும் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலத்தின் DGM (Admin ) திருமதி R .உமா அவர்களும் பங்கேற்றனர் . சிறப்பான விவாதம், நிறைய கருத்து பரிமாற்றம் முடிவில் Regional Labour Commissioner (C ) அவர்கள் 

ஒப்பந்த விதிகளை மீறும்  ஒப்பந்ததாரர்கள்  பட்டியலை இரு மாநில நிர்வாகங்களுக்கும்தொழிற்சங்கம் (NFTCL ) அளிக்க வேண்டும். அதனடிப்படையில் இரு மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ,.இருவாரங்களுக்குள் பதிலளீ க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நம்மையும் வேலை நிருத்த அறிவிப்பை நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார் .எனவே நாம் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தம் தள்ளி  வைக்க பட்டுள்ளது ....,






புதன், 18 நவம்பர், 2015

நமது மாநில சங்கத்தின் சார்பாக 20/11/2015 அன்று முதல் தொடர் வேலை நிருத்தம் செய்ய மாநில செயற் குழு வில் நாம் எடுத்த தீர்மானத்தின்  அடிப்படையில், நாம் கொடுத்த STRIKE NOTICE -யை  நமது தொழிலாளர் நல துறை ஏற்று நாளை 4.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு  ,நமது மாநில செயலருக்கும் ,சென்னை தொலைபேசி நிர்வாகத்திற்கும் மற்றும் நமது தமிழ் மாநில நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பியது மட்டுமல்லாமல் 
தொலைபேசி வாயிலாக முக்கியதுவத்தை தெரிவித்து உள்ளனர் .நமது சங்கத்தின் சார்பாக நாம் அந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் .நாளை வேலை நிருத்தம் பற்றி அறிவிப்பு  வெளிவரும் ,







ஞாயிறு, 8 நவம்பர், 2015

அவுரங்காபாத் மத்திய செயற்குழு 
தீர்மானங்கள்... 
போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்.. மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி - GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL நிர்வாகம்  உடனடியாக 78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும்.

நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012 வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால் ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட  வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான  இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும் தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.

வியாழன், 5 நவம்பர், 2015

05/11/2015 எழுச்சிமிகு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 

2014-2015 ஆண்டிற்கான போனஸ் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு முன் சம்பள பட்டுவாடா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களின் உ ரிமைகளுக்கும் ,சலுகைகளுக்கும் ஆன நீதி அரசர்  Dy .Cheif Labour Commissioner -13/10/2015 அன்று பிறப்பித்த உத்தரவை   நிறைவேற்ற கோரியும் பெருந்திரள் கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது .


இதில் 100 - க்கும் மேற்பட்ட  ஒப்பந்த தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர் . மாவட்ட தலைவர் .தோழர் .G .வேதாச்சலம் தலைமை ஏற்று , தோழர். E .விநாயகமூர்த்தி  கோஷம் எழுப்பிட ,அமைப்பு செயளர் தோழர் .M . மஞ்சினி வரவேற்று , தோழர் அன்பழகன் துவக்க உரையாற்றினார் . மாநில செயளர்  தோழர் .S .ஆனந்தன் கோரிக்கைகளை பற்றிய அறிமுக உரையாற்றினார் .


அகில இந்திய செயளர் தோழர் .G  .ஜெயராமன் நமது நிறுவனம் மற்றும் நமது மாவட்ட தோழமை சங்கங்களின் அவலங்கள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினர் .

AITUC மாவட்ட செயலரும் மற்றும் நமது சங்கதின் சட்ட ஆலோசகருமான  தோழர் M .சேகர் சட்ட ரீதியான அணுகுமுறை பற்றியும் நமது சங்கத்தின் வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்தார் .

போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நிர்வாகத்தில்  இருந்து  மகிழ்ச்சியான செய்தி  அறிவிக்கபட்டது .06/11/2015 அதாவது இன்று சம்பளத்தோடு  இணைந்த போனஸ் பட்டுவாடா  நடை பெரும்  என்ற தகவலோடு நிறைவுபெற்றது .


சுமார் 3 மணி நேரம் கால்கடுக்க நின்றது நமது சங்க தோழர் ,தோழியர்களுக்கு நன்றியுடன் , தீபாவளி நல்வாழ்த்துகள் !!!














செவ்வாய், 3 நவம்பர், 2015


ஒளரங்காபாத் மத்திய செயற்குழுவில் பேசிய நமது மாநிலச் செயலரின் பேச்சு :

நமது அகில இந்திய  செயலரின் ஒருமணி நேர அனல் தெரிக்கும் உரைவீச்சு:
1. போனஸ் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். முன்னதாக தேவைப்பட்டால் இதற்காக நாம் மட்டுமே போராட்டம் நடத்தினால் கூட தவறில்லை.. தமிழகத்தில் NFTCL தொழிலாளர் நலத்துறை செயலரை அணுகி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பெற்றுத்தந்தது. அதேபோல நாமும் CLC ஐ அணுகி ரூ.800/- கோடிக்கு மேல் சென்ற நிதியாண்டில் லாபம் நமது துறை ஈட்டியதை சுட்டிக்காட்டி பெறவேண்டும். முன்னதாக DPE 2011 லேயே லாபத்துடன் இணைந்த போனஸை பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதன் லாப அடிப்படையில் பார்க்க வேண்டியதில்லை எனக் கூறியதை நினைவுகூறவேண்டும்.
2. மேற்கு வங்காளம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அமைப்பு நிலை பிரச்சனைகள் எதிர்வரும் தேர்தலுக்கு முன் தீர்க்கப்பட வேண்டும்.
3. நமது வாக்கு வங்கியை அதிகரிக்க நம்மோடு ஒத்த கருத்தோடு வரும் சங்கங்கள் .SEWA and TEPU இவைகளை வரும் ஏழாவது அங்கீகாரத் தேர்தலில் கூட்டணியாக சேர்க்க வேண்டும்.
4. 01-10-2000 பிறகு வேலையில் சேர்ந்த புதிய தோழர்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.
5. மூன்று வருடங்களாக அனைத்து மட்டங்களிலும் நடைபெறாத கவுன்சில் கூட்டங்கள் உடனடியாக கூட்டப்படவேண்டும்.
6.இப்போது இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்தை கணக்கில் கொண்டு கவுன்சில்களுக்கான அஜண்டா இரண்டு சங்க செயலர்கள் கையொப்பமிட்டு கொடுக்க வழிவகை செய்யவேண்டும். ஏனென்றால் பல இடங்களில் .BSNLEU தான் தணிக்கை அதிகாரி போல செயல்பட்டு அஜண்டா சமர்ப்பிக்கபடுகிறது.
7.சங்கம் என்ற மரத்தின் ஆணிவேராக கிளைப்பகுதிகள் கருதப்படவேண்டும் அதே போல கொல்கத்தா மற்றும் சென்னை டெரிடோரியல் சர்கிள் அந்தஸ்து தரப்பட வேண்டும்.
8.நம்மை பாதிக்கும் தனி டவர் கம்பெனி முயற்சி முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் அது நமது நிதிநிலையை மேலும் மோசமடையச் செய்து விடும்.