Tuesday, 22 September 2015

மத்திய அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றில் எவராலும் மறக்க இயலாத நாள். 

மத்திய அரசு 3 ஆம் ஊதிய குழுவை அமைத்த போது அதன்  செயல்பாட்டு 
வரைமுறை குறிப்பில் " தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தை " 
சேர்க்க மறுத்தது. ஆகவே, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை அடிப்படைசம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை முதலிய  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது. 

அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. அரசின் திமிர்த்தனமும், 
ஊழியர்களை துச்சமென மதிக்கும் போக்கும் ஊழியர்களை  மேலும் கொதிப்படைய செய்தது.

வேலை நிறுத்தம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். 10,000 மேற்பட்டோர் suspend செய்யப்பட்டனர். 3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். Casual .ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு, தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாத்பாய் அவர்களின் கண்டன உரை நாடாளுமன்றத்தை உலுக்கியது. 
அவரது உரையின் சில பகுதிகள் : 

" வேலை நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். 

இந்த வேலை நிறுத்தம் அரசியல் பின்னணி கொண்டது என்று கூறுகிறார்கள். 

எது அரசியல் பின்னணி ? ஒரு ஊழியன் தனது சாப்பாட்டுக்கு தேவையான 

14 அவுன்ஸ் தானியம், 3 அவுன்ஸ் பருப்பு, சிறிது காய்கறி, கொஞ்சம் பால், 
இவற்றை வாங்கிட தேவையான சம்பளம் கேட்கிறான் . வருடத்துக்கு 12 மீட்டர் (குறைந்த பட்சம்) வேண்டும் என்கிறான். இதை பூர்த்தி செய்யும் கூலி தான் தேவை 

அடிப்படையிலான குறைந்த பட்ச ஊதியம் என்பது. இது அதிகம் என்று யாராலும் கூற முடியுமா ? இதில் அரசியல் நோக்கம் எப்படி வரும் ? புதிய பாரதம் பிறந்த தினத்தன்று சுதந்திர தினத்தில் ராவி நதிக் கரையில் மூவர்ண கொடியினை பறக்க விட்டு நாட்டு மக்களுக்கு நாம் கூறிய உறுதி மொழி இது தானே ? இதை கூட நிறைவேற்ற இந்திய அரசால் முடியாதா ...? 1957 இந்திய தொழிலாளர் மாநாடு தேவை 

அடிப்படையிலான குறைந்த பட்ச ஊதியத்தை பரிந்துரை செய்தது. இதே கோரிக்கைதான் 1960 வேல நிறுத்த போராட்டத்தின் போதும் வலியுறுத்தப்பட்டது. மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள். அடக்கு முறையினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு 

தோல்வி இல்லை. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசுக்குத்தான் தோல்வி இது. " 

நாத்பாயின் குரல் இன்றைக்கும் மத்திய அரசு ஊழியர் இயக்கங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அடக்குமுறையினால் வேலைநிறுத்தங்கள் தோல்வியுற்றது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் அவைகள் தற்காலிகமானதே. தொழிற்சங்கங்கள் தோற்றதாக வரலாறு இல்லை. தியாகங்கள் வீணானதாக வரலாறும் இல்லை. 

செப்டம்பர் -19- 1968 தியாகிகளுக்கு வீர வணக்கம் !

Monday, 14 September 2015

dharna

clip

தெலுங்கனா மாநில CPM உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாரங்கல் மக்களவைதொகுதி இடைத்தேர்தலில்உண்மையான புரட்சி கலைஞர் கத்தர் அவர்களை நிறுத்த ஆர்வமாக உள்ளனர். இந்தியாவின் மாபெரும் மக்கள் பாடகர்,தன் வாழ்நாள் முழுவதும் புரட்சிகரசமுக மாற்றத்துக்கு அர்ப்பணித்துகொண்ட போராளி,மனித உரிமைக்குபோராடும் நெஞ்சுரம் மிக்கதலைவர் கத்தர் கம்யூனிஸ்ட்கட்சிகளின் முடிவைஏற்று வாரங்களில் போட்டியிடவேண்டும்.பாசிச மதவெறி ஆட்சியில்,மனிதஉரிமைகளை காக்க,ஜனநாயகசீர்கேடுகளை உள்ளிருந்து அம்பலபடுத்த,ஒருபிரசார மேடையாக இந்த வாய்ப்பு பயன்படும்.சுரண்டலுக்கு-அடக்குமுறைக்கு-சாதி தீண்டாமைக்கு எதிராக ஒலித்தஉங்கள் கால்சலங்கைகள் நாடாளுமன்ற படிக்கட்டுகளிலும் ஒலிக்கட்டும்,ஆயிரம்ஆயிரம் லட்சம் என உழைக்கும் மக்களை சிலிர்க்கவைத்த உங்கள் போர்முழக்கம் டெல்லியில் எதிரொலிக்கட்டும் .Friday, 11 September 2015


                                NFTCL 

தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் நடத்தும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !!! 

அனைவரும் பங்கேற்ர்போம் !!!


Sunday, 6 September 2015


வாழ்த்துக்கள் 

செப்டம்பர் 2
குலுங்கியது பாரத தேசம்.. 
கலங்கியது ஆள்வோர் நெஞ்சம்.. 

காக்கிச்சட்டைத்  தொழிலாளி முதல்..
வெள்ளைச்சட்டை ஊழியர் வரை.. 
ஒன்று பட்டுப்போராடிய 

உலகின்  மாபெரும் 
உரிமைப்போராட்டத்தில் 
உணர்வோடு பங்கு கொண்ட 

அனைவருக்கும் 
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்..

Saturday, 5 September 2015

வாழ்த்துக்கள்.
. கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  சிதம்பரம், காட்டுமன்னார்குடி, செஞ்சி, அரகண்டநல்லூர், உளுந்தூர்பேட்டை, நெல்லிக்குப்பம்,பெண்ணாடம் & திட்டக்குடி  கிளைகளில்100%, கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சியில் 90%, கடலூர்-OD, திண்டிவனம் 80%தோழர்கள் இன்றைய வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். மொத்ததில் 80 சதவிகிதம் தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  விழுப்புரம், பண்ருட்டியில் பல்வேறு குறைகள் நிலவுவதால் ,நிறைவான தோழர்கள் கலந்து கொள்ளாவில்லை . வேலைநிறுத்தத்தில் தோழர்களும், தோழியர்களும், NFTCL - நமது ஒப்பந்தஊழியர்களும் 100%, இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கடமையை செய்துள்ளனர். 
  NFTCL  மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Thursday, 3 September 2015

சொஸைட்டி வட்டிப் பிரச்னையும் BSNLEUவின் 


கபட நாடகமும்:சென்ற முறை,  சொஸைட்டி  BSNLEUவின் 


 முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சாதாரண 


கடனுக்கான  வட்டி விகிதம் 16.5 


சதம். அப்போது

வட்டியை குறைக்க வேண்டும் 

என்று நமது சங்கஆதரவு   டைரக்டர்கள் மற்றும்  

RGb உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, " ஐயோ 


அது சாத்தியமில்லை ! வட்டியை குறைத்தால் 


 சொஸைட்டி திவாலாகிவிடும் ! " என்று 


 பேசியவர்தான் முன்னாள் இயக்குனர்( BSNLEU) 


அன்புமணி. சென்ற RGB  தேர்தலுக்கு பிறகு 


 காட்சிகள் மாறின. 

BSNLEU கூட்டணி சொஸைட்டி தேர்தலில் 


படுதோல்வி அடைந்தது. நமது  கூட்டணியின் 


வசம் சொஸைட்டி நிர்வாகம் வந்தது. 


ஒவ்வொரு சதமாக, இருமுறை வட்டி விகிதம் 


குறைக்கப்பட்டது. மொத்தத்தில்  வட்டி விகிதம் 


14.5 சதமாக ஆனது. உறுப்பினர்கள் 


பெருமகிழ்ச்சி அடைந்தனர்.சென்ற ஆண்டு 


நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியைப் 


 பிடித்தார். நல்ல காலம் பிறக்கும் என்றும் 


வாக்குறுதி அளித்தார்.ஆனால், நாட்டு 


 மக்களுக்கு மட்டுமல்லாது, நமது  சொசைட்டி 


உறுப்பினர்களுக்கும் நல்ல காலம் பிறப்பதற்கு 


பதிலாக கெட்ட காலம் பிறந்தது. இதுநாள் வரை 


விவசாயிகளுக்கு வழங்கிய சலுகை 


வட்டியிலேயே வங்கிகள் நம்மை போன்ற 


ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கும் கடன் 


வழங்கி வந்தது. அந்த முறையை அடியோடு 


மாற்றி, சலுகை வட்டி தரக் கூடாது என்று 

.

உத்திரவு பிறப்பித்தது மோடி அரசு. அதன் .


காரணமாக நமது கூட்டுறவு சங்கமும் 


ஏற்கனவே  வாங்கிய கடனுக்கு அதிக வட்டி தர 


வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. தவிர்க்க 


முடியாமல் உறுப்பினர்களுக்கு வழங்கிய 


கடனுக்கான  வட்டியை உயர்த்த வேண்டிய .


கட்டாயம் ஏற்பட்டது. வெறும் வாயை 


மெல்பவனுக்கு  அவல் கிடைத்ததுபோல, 


தோல்வியில் துவண்டு போயிருந்த அன்புமணி 


கம்பெனி உயிர்த்தெழுந்தது.ஆகா ! வட்டி உயர்வு 


அநியாயம் !!   ஏற்க மாட்டோம் !!  என்று  நீட்டி 


முழக்கி தமிழக சொஸைட்டி உறுப்பினர்களிடம் 


மட்டுமல்லாது, உறுப்பினர் 


அல்லாதவர்களிடமும் தங்களது வழக்கமான 


கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். நாட்டில் .


உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் மோடிதான் 


காரணம் என்று மேடை தோறும் பிரசங்கம் 


செய்பவர்கள்,  இந்த வட்டி உயர்வு பிரச்னையில் 


மட்டும் மோடி அரசின் மோசடித்தனத்தை 


தோலுரிக்காமல்,  அன்புமணி தலைமையில் 


தற்போதைய இயக்குனர் குழுவை சந்தித்து 


கையெழுத்து படிவத்தை கொடுத்துவிட்டு 


ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பது ஏன் ?வட்டி 


குறைப்பில் இவர்களுக்கு உண்மையிலேயே 


அக்கறை  இருக்குமானால்  


இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது, 


மோடி அரசை எதிர்த்து அல்லவா ? அதை 


விட்டுவிட்டு, பொறுப்பேற்றவுடன் வட்டியை 


குறைத்த இயக்குனர் குழு மீது பாய்வது ஏன் !!


வெள்ளானூர் நிலத்தில் அடுக்கு மாடி 


குடியிருப்பு என்பது சென்ற இயக்குனர் குழு 


காலத்திலேயே முடிவாகிவிட்டதோடு, சென்ற 


தேர்தலில் ஆகப் பெரும்பான்மை 


உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட,  இனி மாற்ற 


முடியாத முடிவு....  சோழியன் குடுமி சும்மா 


ஆடுமா ! இவர்களது உள்நோக்கம் அடுத்த 


அங்கீகாரத் தேர்தல் !இந்தியாவெங்கும் 


பொய்ப்பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் 


பெற்றாலும்  தமிழகத்தில இவர்களது பாச்சா 


இது நாள் வரை பலிக்கவில்லை  ! 


BSNLEUவின் பன்னிரெண்டாண்டு  அங்கீகார 


காலத்தில் சொல்லிக்


 கொள்ள சாதனை ஏதுமில்லை...போனஸ் 


இல்லை,  ஊதிய 

மாற்றத்தில் குளறுபடிகள் என்ற 

வேதனைகளே தொடர்கதையாகி வருகிறது.  இந்த 

முறை எப்படியாவது தமிழகத்தில் ஜெயிக்க 


வேண்டும் என்ற நப்பாசையில்தான் இந்த வட்டி 


குறைப்பு 

ஆர்ப்பாட்டம் எனும்  கபட நாடகம்  ! 

                 BSNLEUவின்  பொய்ப் பிரச்சாரத்தை 


முறியடிப்போம் !! 


                                 உண்மையை எடுத்துரைப்போம் 


!! 
        தமிழகத்தில் NFTE-BSNL சங்க வெற்றிக்கு 


அயராது பாடுபடுவோம் !!