திங்கள், 27 ஜூலை, 2015


முன்னாள் குடியரசு தலைவர் மேதகு.டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஐயா.. காலமானர்....
மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது.
அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15,1931- சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்கு பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.
இராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு வருட படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். அவர் 1955 ஆம் ஆண்டில், எம் ஐ டி சென்னையில், விண்வெளி பொறி இயல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்று இருந்தாலும், முறையான படிப்பை, எம் ஐ டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.
கலாம் ஒரு உயர்ரகத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து அதிருப்தி ஆனதோடு, இரண்டு தினங்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லுரி தீனின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் " நான் உனக்கு அதிக பளு கொடுத்து மிக கஷ்டமான காலக்கெடுவை விதித்தேன்." என்று கூறினார்.ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்.
இன்று 27/07/2015 ஏபிஜே அப்துல்கலாம் ஐயா.. காலமானர்....
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒருசரித்திரமாக இருக்கவேண்டும்..!

எளிமையின் இலக்கணம்... 

டாக்டர் அப்துல்கலாம்

உண்மை, நேர்மை, திறமை,
கடும் உழைப்பு , நாட்டுப்பற்று
இருந்தால் 
ஒருவன் எந்த குக்கிராமத்தில்
பிறந்தாலும்
எவ்வளவு ஏழையாகப்
பிறந்தாலும்
எந்த மதத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும்
நாட்டில் உயர்ந்த பதவியைப்
பெற முடியும்.
உன்னத நிலையை
அடைய முடியும்
என்பதற்கு உதாரணமாக
வாழ்ந்தவர்
டாக்டர் அப்துல்கலாம்.
பதவியில் இருந்த போதும்
பதவியில் இல்லாத போதும்
உலக மக்களால் ஒன்றுபோல்
நேசிக்கப் பட்ட மகான் !
இளைஞர்களின் உந்து சக்தியாக
இறுதி மூச்சு வரை வாழ்ந்த
அற்புத மனிதர்!


செவ்வாய், 21 ஜூலை, 2015

வியாழன், 2 ஜூலை, 2015


.சிந்தித்துப்பாருங்கள் !....


ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான். ஒரே ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருந்தது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.
அருகில் இருந்த பாகனிடம்,
"இந்த யானைகள் இதை அறுத்து கொண்டு போகாதா..!?"
என்று கேட்டான்.
அவன் சிரித்தபடி, "இந்த யானைகள் குட்டியாக இருக்கும்போது இதில்தான் கட்டிவைத்தோம். அப்போது அது எவ்வளவோ இழுத்து பார்த்தும், இந்த சங்கிலியை அறுக்க முடியவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் இதை அறுக்க முடியாது என்கிற எண்ணமும் சேர்ந்தே வளர்ந்தது. இப்போது அந்த எண்ணம் மனதில் பதிந்து, அறுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டது. அறுக்க முயற்சிப்பதேயில்லை.." என்று சொன்னான்.
அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த சங்கிலியை அறுத்து கொண்டு போகலாம். ஆனால் அவைகள் அதற்கான முயற்சியை செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.
இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் "முன்பு சில முறை தோற்றதனால், மீண்டும் முயற்சிக்காமலேயே துவண்டு போகிறோம். முயற்சிப்பதையே விட்டு விடுகிறோம்...!?...சிந்தித்துப்பாருங்கள் !
-------------------------------நன்றி யாரோ ஒருவர்