புதன், 29 அக்டோபர், 2014

NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பாக

மாவட்ட தலைநகரில் 

28/10/2014 அன்று நடத்த மாபெரும்

தொடர் உண்ணாவிரதம் 

LABOUR ENFORCEMENT OFFICER மற்றும் நிர்வாகதின் வேண்டுகோளை ஏற்று ஒத்திவைக்கபட்டது.  நாம் செய்த போரட்டத்தின் விலைவாக மறுநாலே விருதை பகுதியில் சம்பள பட்டுவாட நடைபெற்றது என்பது நமக்கு சந்தோஷமான செய்தி !!! பெற்று தந்த மாவட்ட சங்கத்திற்கும்,மாவட்ட நிர்வாகத்திற்கும் நமது LEO அவர்களுக்கும் 

நன்றி!!!!! .நன்றி!!! நன்றி!!!!!

  























திங்கள், 27 அக்டோபர், 2014


NFTCL கடலூர் மாவட்ட  சங்க செய்தி 



கடலூர் மாவட்டத்தில் ஒரு சில   பகுதி 

களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு (27/10/2014)

இன்று வரை

சம்பளம்   வழங்கப்படவில்லை 

இப் பிரச்சினையில் நிர்வாகத்தை  

கண்டித்தும், ஒப்பந்தகாரரை  கண்டித்தும்

NFTCL மாவட்ட சங்கத்தின் சார்பாக

மாவட்ட தலைநகரில் 

28/10/2014 முதல் 

தொடர் உண்ணாவிரதம்

AITUC மாவட்ட பொது செயலர் M .சேகர்

NFTE அகில இந்திய செயலர் தோழர் 

G .ஜெயராமன் 

மாநில பொருளாளர் அசோகராஜன்

மற்றும் மாநிலஅமைப்பு  செயலர்

தோழர்N .அன்பழகன்

ஆகியோர்

உன்னநோண்பை

துவக்கி வைக்க உள்ளனர் .அனைவரும் தவறாமல் 

கலந்து கொள்ள வேண்டுகிறோம் 

                               தோழமையுடன் 

S .ஆனந்தன்            E .டெல்லி பாபு      K .மதிவாணன் 
மாவட்ட செயலர்                    மாவட்ட தலைவர்                மாவட்ட பொருளர்  


ஞாயிறு, 26 அக்டோபர், 2014

போராடும் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ஆதரவாக  NFTCL மாநில சங்கம் 

 சார்பாக சென்னையில் கலெக்டர் அலுவலகம் 

முன் நடந்த ஆர்ப்பாட்ட காட்சிகள்









ஞாயிறு, 19 அக்டோபர், 2014

NLCஒப்பந்த ஊழியர்கள்  போராட்டத்திற்கு   
NFTCL மாநில சங்கத்தின்  ஆதரவுதெரிவித்து ஆர்பாட்டம் !!!!!!

வருகின்ற 25/10/2014 அன்று சென்னையில் NFTCL மாநில சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய  ஆதரவு ஆர்பாட்டம் நடத்த மாநில குழு தீர்மானித்து உள்ளது.

வியாழன், 16 அக்டோபர், 2014

          மீண்டும் போனஸ் 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக 
தொடரப்பட்ட வழக்கின் காரணமாக 
LEO அவர்கள் நடத்திய 
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 
CONTRACTOR மற்றும் நமது மாவட்ட 
சங்க நிர்வாகிகள் பங்கேற்றதன் 
அடிப்படையில் குறைந்த பட்ச  BONUS 
CONTRACTOR வழங்க   LEO  

உத்தரவிட்டார்  கடந்த ஆண்டு 

போலவே இந்த 

ஆண்டும்  நமது 

தோழர்கள் குறைந்த பட்ச BONUS 

ரூபாய் -3500/- பெற வழி வகுத்திட்ட 

LEO அவர்களுக்கும் ,

பெற்று தந்த மாவட்ட சங்கத்திற்கும் 

,மாவட்ட நிர்வாகத்திற்கும் 

 நன்றி ... நன்றி ...நன்றி ....

புதன், 15 அக்டோபர், 2014

புலம்பாதே போராடு ...
================
புதைபட்டு விட்டோமென்று 
புலம்பாதே என்நண்பா ...
புதைக்காமல் முளைக்கும்விதை
மரமாக மாறாது ...
அடிமேலே அடியென்று
அலடிக்காதே நீசும்மா ...
தானாக சிதையும்கல்
சிலைவடிவம் காணாது ...
வெற்றியால் பிறருக்குன்
வீரத்தைக் காட்டலாம் ...
தோல்வியால் மட்டும்தான்
உன்திறனைக் கூட்டலாம் ...
திறனைநீ கூட்டாமல்
தீர்க்கம்பெற முடியாது ...
மூர்க்கத்தோடு முயலாட்டி
முன்னேற்றம் நிலையாது ...
எதிராளியின் தவறால்கூட
என்றோஒருநாள் வெல்லலாம் ...
சும்மாகிடந்த உன்னக்கூட
யோகம்தூக்கிச் செல்லலாம் ...
ஆனால்அந்த வெற்றியெல்லாம்
ஆலமரம் இல்லையப்பா ...
நேற்றுமுளைத்து இன்றுவாடும்
கோரைப்புல்லு போலதாம்பா ...
போராடு தோற்றாலும்
போராளி பட்டம்கிட்டும் ...
சாகும்வரை தோற்றாலும்
சரித்திரம்உன் பெயரைவெட்டும் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வெற்றிகரமான அகில இந்திய 


மாநாடு !


























ஜபல்பூரில் அக்-10முதல் 12 வரை நடைபெற்ற அகில இந்திய 

மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் 

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தோழர் C.K. மதிவாணன், நிர்வாகிகள் பட்டியலை முன் மொழிந்தார்.



                                              தலைவர்: இஸ்லாம் அகமது (டெல்லி)

                                பொதுச்செயலர்:சந்தேஸ்வர்சிங். (பீகார்)


                                       பொருளாளர்: A.ராஜ்மௌலி (ஆந்திரா)

             சம்மேளனச்  செயலர்கள்:  K.S.சேஷாத்திரி (கர்நாடகா)
                                                                  K.K.சிங் (ஜார்கண்ட்)
                                                                  ராஜ்பால் (டெல்லி NTR))
                                                                  N.J.பாட்டியா ( குஜராத்)
                                                                 G.செயராமன்  (தமிழ்நாடு)
                                                                 குல்சார் சிங் (மத்தியபிரதேசம்)
                                                                 S.S.G  (தமிழ்நாடு)
                                                                 K.அஞ்சையா (ஆந்திரா)
                                                                 T.R.  ராசசேகரன் (சென்னை)


தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நமது மனம்

 நிறைந்த வாழ்த்துக்கள்.

---------------------------------------------------------------------------------------------------

                                    Mathivanan, the Great.......
 
 
Leaders become great not because of their power.
But because of their ability to empower others.
 




     தொழிற்சங்கங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோரில் பெரும்பான்மையினர் (Serving  Employee) பணியில் உள்ளோராக
 இருக்கவேண்டும்.

பணி ஓய்விற்குப் பிறகு நடக்கும் மாநாடுகளில் தங்களது சங்க பொறுப்பை மீண்டும் ஏற்காமல், இளைய தலைமுறைக்கு வழி விட்டு,அவர்களுக்கு ஆலோசகர்களாக, வழிகாட்டிகளாக மூத்த தலைவர்கள் இருக்க வேண்டும்.

இதனை பல அரங்குகளிலும் வலியுறுத்தி வருபவர் தோழர் சி.கே.மதிவாணன்.

   மாநாட்டில் அனைவரும் எழுச்சி பெறும் வகையில் நீண்ட உரையாற்றிய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன், 
இறுதியில்,  தனது நிலைபாட்டை  நிறைவேற்றும் வகையில்
தான் பணி ஓய்வு பெற்ற பிறகு முதன் முதலாக நடக்கும் 
இம்மாநாட்டில் மத்திய சங்க பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

பல தோழர்கள் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய 
வேண்டும் என்று வலியுறுத்திய போதும், தான் அவர்களது 
உணர்வை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில், தனது நிலைபாட்டை மாற்றுவது  சாத்தியமில்லை என்று நயமாக எடுத்துரைத்தார். 

அது மட்டுமல்லாது, மற்ற புதிய நிர்வாகிகளை மன
மகிழ்ச்சியோடு அவரே முன்மொழிந்தார்.

சென்னை மாநிலத்தின் சார்பாக  தோழர் T.R ராஜசேகரன் 
(போன் மெக்கானிக்) அவர்களை செயலர் பொறுப்பிற்கும் 
இளைய தோழர் K.M.இளங்கோவன்  (போன் மெக்கானிக்) 
அவர்களை நிரந்தர அழைப்பாளர் பொறுப்பிற்கும் நியமிக்க வைத்தார். 

 புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்தவுடன் பல முன்னணி அகில இந்திய தலைவர்கள், சொன்னதை செய்த 

    " Com.Mathivanan, you are really great 

என்று கைகொடுத்து மகிழ்ந்தனர்.

 1994ல், நம்பூதிரி அணி கடும் அராஜகத்தை அரங்கேற்றிய  திருவனந்தபுரம் அகில இந்திய  மாநாட்டில், அதனை தைரியமாக எதிர்கொண்ட தளபதியாக செயல்பட்ட காரணத்தால், அம்மாநாட்டில் அகில இந்திய அமைப்புச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் மதிவாணன், 2014 வரை, நமது சங்க வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் சிறப்பாக செயல்ட்டுள்ளார். அவருக்கு நமது நன்றியையும் பாராட்டையும் உரிதாக்குகிறோம்.
-----------------------------------------------------------------

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள்


சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் 



சம்மேளனச் செயலர் தோழர் S.S.கோபாலகிருஷ்ணன்



நிரந்தர அழைப்பாளர்  புதுவை தோழர் P. காமராஜ் 
( தோழர் பட்டாபி அருகில்)