- ஒரு நான்கு வயது சிறுவன் விவசாய நிலத்திற்கு அருகே ஒரு பொம்மை துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே விவசாயிகள் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்!
உடனே, அவன் அந்த துப்பாக்கியை மண்ணிற்குள்ளே புதைத்து நீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அதை பார்த்த அவன் அப்பா, “என்னடா, உனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சா, அதைய எதுக்கு மண்ணுக்குள்ள போட்டு தண்ணி ஊத்தர” என்று கேட்டார். அதற்கு அந்த நான்கு வயது சிறுவன், “இப்போ ஒரு விதைய மண்ணுக்குள்ள போட்டா, அது மரமாகி நாளைக்கு நிறையா விதை கொடுக்குதுள்ள, அதே மாதிரி நான் இப்போ ஒரு துப்பாக்கிய விதச்சிருக்கேன், அது நாளைக்கு நிறையா துப்பாக்கிகளை கொடுக்கும், அந்த துப்பாக்கிகளை என்னோட நண்பர்களுக்கு கொடுத்து, இந்த நாட்டு விடுதலைக்காக வெள்ளைக்காரங்கள எதிர்த்து சண்டை போட போறேன்” என்றான். உடனே, அவன் தேச பக்தியை பார்த்து கட்டி அணைத்துக் கொண்டார்.
யார் அந்த சிறுவன்! அவன் தான் 23 வயதிலேயே இந்தியாவின் விடுதலைக்காக தூக்கு மேடை ஏறிய மாவீரன் ‪#‎பகத்சிங்‬.
இன்னும் சில மணி நேரங்களில் தூக்கு என்ற தெரிந்த பின்பும், மாமேதை லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்!
தூக்குமேடை ஏறும் முன்பு, அங்கிருந்த வெள்ளை மாஜிஸ்திரேட்டிடம், “மாஜிஸ்திரேட் சார்! நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். இந்தியப் புரட்சியாளன் ஒருவன், ஒரு மகத்தான லட்சியத்திற்காகப் புன்சிரிப்போடு உயிரை அர்ப்பணிக்கும் காட்சியைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று பெருமிதத்துடன் கூறினான்.
இப்படிப்பட்ட மாமனிதனை நாம் மறந்து விட்டோம்!
பல சினிமாப் படங்களுக்கு பேனர் வைக்கிறோம்! பாலூற்றி கொண்டாடுகிறோம்! நாட்டுக்காக உயிரை விட்டவனை தூக்கிப் பிடிக்காமல், நாட்டுக்காக உயிர் விடுவது போன்று நடிக்கும் நடிகர்களை நாம் இன்று தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்!
ஒரு பொதுவுடைமைச்(கம்யூனிச) சமுதாயம் அமையும் என்று அவன் நம்பினான்! அதை நாம் தான் படைக்க போராட வேண்டும்!
பகத்சிங் காண விரும்பிய பொதுவுடைமைச்(கம்யூனிச) சமுதாயத்தை படைப்பதற்காக ‪#‎AIYF_அனைத்திந்திய_இளைஞர்_பெருமன்றம்‬ பல உயிர் தியாகம் செய்து போராடிக் கொண்டிருக்கிறது!
இணைவீர் - Join Our Group(https://www.facebook.com/groups/aiyftamilnadu/)
‪#‎பகத்சிங்_கண்_தான_இயக்கம்‬
‪#‎பாலதண்டாயுதம்_இரத்த_தான_இயக்கம்‬