Monday, 25 August 2014
சென்னை அண்ணா ரோடு NFTCL கோட்ட மாநாடு 

தீன் ரோஸ் EXCHANGE-இல் நடைபெற்றது . இந்த 

கூட்டத்தில்  ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

The North Chennai District Conferences on 20/08/2014:

The first District Conferences of North Chennai was held on 20/08/2014 under the presidentship of Com. V.Ashokkumar, District President. The Conference was inaugurated by Com. C.K.Mathivanan and greeted by Com. S. Anandan, Circle secretary, NFTCL, Tamil Nadu state Committee and three Dy. GM’s of BSNL from North area. The conference adopted the report of the activities submitted by K.Anbu, District secretary with several amendments. The conference was attended by 280 delegates including 43 women comrades. The conference unanimously elected comrades K. Venkatesan, Sr. TOA(P), K.Anbu, TM and C. Elumalai, Sr. TOA(G) as president, Distict secretary and District treasurer respectively. Election of office bearers was unanimous. The circle union conveys its best wishes to the new team.
Friday, 22 August 2014


கொடுமை....
மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக
இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில்
மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில்
வந்தேன்.
கைலி, அழுக்கு சடையோடு 45
வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என்
எதிரே வந்தார்.

'ஏன் முன்னாடியே வரக் கூடாதா?
கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’
என்று அவரிடம் கேட்டேன்.'அய்யா... நான்
வ.உ.சிதம்பரம்பி ள்ளையின் பேரன். நானும்
என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட்
அடிக்கும் வேலை செய்துவருகிறோம் .
சமீபத்தில் ஒரு உயரமான
கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என்
தம்பி தவறி விழுந்துவிட்டான ்.
இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான்.
அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.
வெளியில் இருக்கும்
காவலாளி என்னை உள்ளே விடாமல்
துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு
வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’
என்று பரிதாபமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்
.'உனக்கு இங்கே நிற்கும்
உரிமையை வாங்கிக்கொடுத்த தே என்
பாட்டன்தானடா என்று முகத்தில்
அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’
என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தி
னேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம்
கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர்
உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி-யின்
குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக் கு எதிராக
சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-
க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள்
தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும்
சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச்
செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக செக்கிழுத்தவரின ் பேரன்கள்
பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சம்பந்தமே இல்லாத யார்
யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
                                                                                                 - சகாயம் ஐ.ஏ.எஸ்.—

எபோலா எமன்! தப்புவது எப்படி?


இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் 'எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும்  மற்றொரு அபாயத்தின் பெயர் 'எபோலா’.

1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா.
இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. 'எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகு
தொலைவில் இருக்கிறோம்' என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் மூலம் இந்த வைரஸ் கிருமி  இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.  இதனால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் ஒவ்வோர் இந்தியரும் தீவிரப் பரிசோத
னைக்குப் பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள கினியாவில் இருந்து தமிழகம் வந்த இளைஞர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க தீவிர கண்காணிப்பில் வைத்தி
ருந்தனர். இத்தனைக்கும் அவர் அப்பா மரணப்படுக்கையில் இருந்தார். இருந்தபோதும் 'நோய்க்கூறுகள் இல்லை’ என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகே, அவர் சொந்த ஊரான தேனிக்கு அனுப்பப்பட்டார். இந்த எபோலா எமன் குறித்த   'பய’டேட்டாவைத் தருகிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் பொது மருத்துவர் சிவராஜ்.
'எபோலா வைரஸ் என்றால் என்ன?'
'இந்த நோய் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நகரில் எபோலா நதிக் கரையில் இருந்து பரவியது. அதனால் தான் இந்த நோய்க்கு எபோலா என்று பெயர்.  ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.'
'எபோலா வைரஸ் எங்கிருந்து எப்படிப் பரவும்?'
'எபோலா வைரஸ்,  ஐந்து வகைளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் நான்கு வைரஸ்கள் மனிதர்களையும், ஒரு வைரஸ் விலங்குகளையும் தாக்கக் கூடியவை. இந்த எபோலா வைரஸ், விலங்கிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவி இருக்கிறது. பாதிக்கப்பட்ட நபரோடு நெருக்
கமாகப் பழகும்போது, எளிதில் இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. நோயாளியின் ரத்தம், எச்சில், சிறுநீர், விந்து போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும்.  பாதிப்புக்கு உள்ளானவர் பயன்படுத்திய மருத்துவக் கருவிகளை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் மற்றவர்களுக்கு உபயோகப்படுத்தும்போதும் இந்த நோய் பரவ அதிகம் வாய்ப்பு உண்டு. இந்த நோய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு இன்றி, நோயாளியை அணுகினாலும், அவர் களுக்கும் பரவும் அபாயம் உண்டு!'
'எபோலா வைரஸின் அறிகுறிகள் என்ன?'
'உடலில் எபோலா வைரஸ் நுழைந்து  இரண்டு முதல் 10 நாட்களுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு 21 நாட்கள் வரைகூட அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். முதலில் சாதாரணக் காய்ச்சல் போல்தான் இருக்கும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். மேலும் மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி மற்றும் ரத்தப்போக்கு இருக்கும்.
இந்தப் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில், ரத்த அழுத்தம் குறைந்து, நாடித் துடிப்பு பல மடங்கு உயரும். எபோலா வைரஸ் உடல் முழுதும் பரவிவிட்டதை உறுதி செய்யும் அறிகுறிகள் இவை. அதன் பிறகு இந்த நோயால் பாதிக்
கப்பட்டவர்கள் எழுந்து உட்காரக்கூட முடியாத நிலை ஏற்படும். இந்த நோய் தீவிரமானால், பாதிக்கப்பட்டவருக்கு உடல் வலி, தசை வலி அதிகரிக்கும்.  தலை முடி ஏராளமாக உதிரத் தொடங்கும். தோலில் அரிப்பு ஏற்பட்டு உடல் சிவந்து காணப்படும். கண் பார்வை மங்கலாகும். பார்வையே பறிபோகும் நிலையும் ஏற்படலாம். இறுதியில் மரணம் நிகழும்.'
'இதற்கான சிகிச்சை என்ன?'
'இப்போதைய நிலவரம் வரை எபோலா வைரஸ் கிருமியை அழிக்க மருந்தும் இல்லை. தடுப்பதற்கான தடுப்பூசியும் இல்லை. ஆனால் காய்ச்சல் வந்தால், அது சாதாரணக் காய்ச்சல் என்று அலட்சியமாக இருக்காமல் உடனடியாகப் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதாவது இந்த வைரஸ் ஏற்படுத்தும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் எபோலா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் இது தொடர் சிகிச்சையாக இருக்கவேண்டும்.
எபோலா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும், அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகு அவர், தனி அறையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த நபருக்கு நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்துகளை மருத்்துவர்கள் தொடர்ச்சியாகத் தந்துகொண்டிருப்பார்கள். எபோலா வைரஸ் நோய் ஒருவருக்கு இருப்பது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், அதற்கு உரிய, தீவிர சிகிச்சை அளித்து அவரைக் குணப்படுத்த முடியும்.
மேலும், எபோலோ வைரஸ் பற்றிய விழிப்பு உணர்வை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். எபோலா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், 50 முதல் 90 சதவிகிதம் வரை மரணத்துக்கான வாய்ப்புகள் உண்டு. .
இந்த நோய் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக சாத்தியம் இல்லை. எனினும், ஆப்பிரிக்காவில் இருக்கும் பலருக்கும் இந்த நோய் பரவி இருப்பதால், தற்போது அங்குள்ள பல நாட்டினரும் தங்கள் நாடு திரும்பும் எண்ணத்தில் இருக்கின்றனர். அவர்களில் எத்தனை பேருக்கு இந்த நோய் தாக்கி இருக்கும் என்பது தெரியாது. நமது அரசும் விழிப்புடன் இந்த நோய்க்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்றார்.
இந்தியா இந்த எமனிடம் மாட்டாமல் இருக்கவேண்டியதே இப்போதைய நமது சவால்.
அச்சம் வேண்டாம்!
'தமிழகம் உட்பட இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை’ என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.  எபோலா வைரஸ் காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கு, தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் IGM, PCR - என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நோய் குறித்த புகார்கள், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறையின் 104 மற்றும் 0442345 0496, 0442433 4811 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். மத்திய அரசின் 24 மணி நேர அவசர உதவி மையத்துக்கு 01123061469, 3205, 1302 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இந்தியாவுக்குள் எபோலா...
எபோலா வைரஸ் இந்தியாவுக்குள் நுழையாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது. பிறநாடுகளில் இருக்கும் இந்தியர்களிடமும் இந்திய தூதரக அதிகாரிகள் விழிப்பு உணர்வு எற்படுத்தி வருகிறார்கள். இந்த நோய் இந்தியாவுக்கு வர சாத்தியம் இல்லை என்றாலும், நைஜீரியாவில் இருந்து இந்தியாவிற்குப் பயணம் செய்த ஒருவர் எபோலாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இ்தையடுத்து அவரைப் பரிசோதித்த சுகாதாரத் துறை, தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தீவிரக் கண்காணி்ப்புில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் அதிகம் பரவியுள்ள லைபீரியா, சியராலியோ, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் பயணி்ப்பதைத் தவிர்க்கவும்’ என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் எபோலா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெறுவதற்காக, ராம் மனோகர் லோகியா மருத்துவ
மனை தயார் நிலையில் உள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Reactions: 
No comments: Links

சாஃப்ட்வேர் துறையில் தற்போது 4041 உடனடி வேலைவாய்ப்புகள் இங்கே உள்ளன..http://bit.ly/1uajKm2 

நல்ல வேலையில் சீக்கிரம் சேருங்க.

ஆகஸ்ட் 21: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன் ஜீவா பிறந்த நாள் இன்று..

ம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன்!* ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப்போனோமடா!' என்ற இவரது பாட்டுதான் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!

* எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான். சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதவிகளைத் தட்டிக் கழித்தார்!

* பத்மாவதி மீதான ஜீவாவின் காதலுக்குத் தூதுவனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. 'காதல் கடிதம் கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன். காதல் கடிதமா அது? சுத்த வரட்டு மனுஷன்... ஜனசக்திக்குக் கட்டுரை எழுதுறது மாதிரியில்ல எழுதியிருந்தார்' என்று கிண்டல்அடித்தார் ராதா!

* புத்தகப் பிரியர். ஜீவா வருகிறார் என்றால் பலரும் தங்களது புத்தகங்களைப் பதுக்க ஆரம்பிப்பார்களாம். ஆனால், இவர் படித்து முடித்த புத்தகத்தை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அடுக்கிவைக்கவே மாட்டார்!

* ஜீவாவுக்கு இடது காது கொஞ்சம் மந்தம். அதனால் காது கேட்கும் கருவியை மாட்டியிருப்பார். அடுத்தவரைப்பற்றி யாராவது குறை சொல்ல ஆரம்பித்தால், கருவியைக் கழற்றிவிட்டு, 'இனி எனக்குக் கேட்காது. பேசலாம்' என்று அறிவிப்பார்!

* 'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; உலகம் முழுமைக்கும் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும். ஆகவே, அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது. கூடாது!' - இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்!
Photo: ஆகஸ்ட் 21: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன் ஜீவா பிறந்த நாள் இன்று..

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன்!

* ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப்போனோமடா!' என்ற இவரது பாட்டுதான் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!

* எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான். சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதவிகளைத் தட்டிக் கழித்தார்!

* பத்மாவதி மீதான ஜீவாவின் காதலுக்குத் தூதுவனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. 'காதல் கடிதம் கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன். காதல் கடிதமா அது? சுத்த வரட்டு மனுஷன்... ஜனசக்திக்குக் கட்டுரை எழுதுறது மாதிரியில்ல எழுதியிருந்தார்' என்று கிண்டல்அடித்தார் ராதா!

* புத்தகப் பிரியர். ஜீவா வருகிறார் என்றால் பலரும் தங்களது புத்தகங்களைப் பதுக்க ஆரம்பிப்பார்களாம். ஆனால், இவர் படித்து முடித்த புத்தகத்தை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அடுக்கிவைக்கவே மாட்டார்!

* ஜீவாவுக்கு இடது காது கொஞ்சம் மந்தம். அதனால் காது கேட்கும் கருவியை மாட்டியிருப்பார். அடுத்தவரைப்பற்றி யாராவது குறை சொல்ல ஆரம்பித்தால், கருவியைக் கழற்றிவிட்டு, 'இனி எனக்குக் கேட்காது. பேசலாம்' என்று அறிவிப்பார்!

* 'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; உலகம் முழுமைக்கும் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும். ஆகவே, அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது. கூடாது!' - இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்!

- ப.திருமாவேலன்

Thursday, 14 August 2014சுதந்திரமும் இந்திய வர்த்தகமும்!!
 
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு காரணம் வியாபாரம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? இல்லை என்று நீங்கள் மறுத்தாலும் நம்பி தான் ஆகவேண்டும். கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்று இந்தியாவுக்குள் வியாபாரம் செய்ய வரவில்லை என்றால் இந்திய அடிமைபட்டிருக்காது. அப்படி அடிமை படாவிட்டால் இந்தியா சுதந்திர நாடாகவே இருந்திருக்கும். 
 
இன்று நாம் இந்தியாவை ஐடி துறையின் மையமாக விளங்குகிறது என்கிறோம். சுதந்திரத்திற்கு முன்பு அனைத்து இயறகை வளங்களுக்கும் இந்தியா ஹப்பாக விளங்கியுள்ளது. வெளிநாட்டு வியாபாரிகளுக்கு தெரிந்த இதனை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். இன்று நாம் மேலாண்மை படிப்பில் பயிலும் ''கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்‌ஷன்'' ''மார்க்கெட் ட்ரெண்ட்'' ''ஃபர்ஸ்ட் மூவர் அட்வான்டேஜ்'' ''மோனோபோலி'' போன்ற விஷயங்களை இந்திய வாடிக்கையாளர்களிடம் அன்றே நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறது கிழக்கிந்திய கம்பெணி.
 
 
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு வரை தனித்தனியே குறிப்பிட்ட பகுதியை சார்ந்த மக்கள் அவர்களது அருகில் உள்ள மக்களின் தேவைக்கு ஏற்றவாறு வியாபாரம் செய்து வந்தனர். சிலர் அந்நிய வணிகத்திலும் ஈடுபட்டு வந்தனர். பக்கத்து நாடுகளான இலங்கை, சீனா, பாகிஸ்தான் (அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியா), போன்றவற்றில் பொருட்களை விற்று வந்தனர். 
 
வாஸ்கோடகாமாவின் வருகை, அவரது குறிப்புகள் இந்திய வர்த்தக சந்தையை விளக்கி இருந்தன. அதன் அடிப்படையில் இந்தியா வந்தது கிழக்கிந்திய கம்பெனி இங்கிலாந்து ராணியின் அனுமதி பெற்று வந்த அவர்களை இந்தியாவும், இந்திய மக்களும் அவர்களது பொருட்கள் மீதுள்ள மோகத்தில் முதலில் ஏற்றுக்கொண்டனர் என்பது தான் உண்மை. அதனை தொடர்ந்து அவர்கள் தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 13 டாலராக இருந்தது. 
 
 
உங்களுக்கு இது அதிர்ச்சி அளிக்க தான் செய்யும் என்னது ஒரு ரூபாய் 13 டாலருக்கு சமமா? இந்த நிலையை மாற்ற தான் விரும்பி தான் ஆட்சியை பிடிக்க தொடங்கியது. இந்தியர்களது பழக்க வழக்கங்கள், அவர்களது பொருட்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த அவர்கள் வியாபாரத்தின் மூலம் இந்திய மக்களை அடிமைப்படுத்த துவங்கினர். 
 
இவையெல்லாம் சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலைமை சுதந்திரம் வாங்கியபோது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 
 
இனி இந்திய அடிமை நாடு இல்லை! சுதந்திர நாடு இந்தியாவின் சுதந்திரம் வியாபார உலகில் இந்தியர்களை தனித்து காட்டும் என புத்துணர்ச்சியோடு ஆரம்பித்தது புதிய இந்தியா. தனித்தனி அரசுகளாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கிணைக்கவே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதற்குபின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் புதிய வியாபாரங்கள், அதன் ஏற்றுமதி, அரசின் புதிய திட்டங்கள் என வியாபாரம் இந்தியாவில் உள்ள எல்லா பகுதிகளிலும் பரவ தொடங்கியது.
 
 இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனகளும் தன்னை நிலைபடுத்த துவங்கின. நேரு தலைமையிலான அரசு இந்தியாவில் 1950ம் ஆண்டு ஹிந்துஸ்தான் இரும்பு தொழிற்சாலையை துவங்கியது அப்படியே படிப்படியான மாற்றங்களால் இந்தியா வியாபார உலகில் தன்னை நிலைப்படுத்த ஆரம்பித்ததற்கு அடையாளமாக பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை 1990ல் கொண்டுவந்து இந்தியாவும் உலகமயமாக்கலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
 
புதிய முயற்சிகளால் இந்திய பொருளாதாரம் வளர தொடங்கியது. மீண்டும் அந்நிய நிறுவனங்கள் தன்னை வியாபாரத்திற்காக மட்டும் என்ற அளவில் அனுமதி பெற்று இந்தியாவில் கடை திறந்தன. இந்தியர்களும் ''இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவேன்'' சுதேசி இந்தியாவை விரும்புகிறேன் என்றவர்கள் கொஞ்சம் தங்களை தேவைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் தளர்த்தி கொண்டு அந்நிய பொருட்களையும் பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு மாறினர். 
 
 
அமெரிக்கர்கள் பயன்படுத்தும் ஜீன்ஸ், இத்தாலியினரின் காஃபி, ஜெர்மனியின் தோல் பொருட்கள் எல்லாம் இன்று சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. இந்தியர்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துவிட்டதால் ஆப்பிள் போனுக்கு கூட இந்தியாவில் ஆடி தள்ளுபடியில் கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
 
அந்நிய முதலீடு வந்தால் இந்தியா மீண்டும் அடிமைபடுத்தப்படும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறும் அதேவேளையில் , இந்திய நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுக்கு இந்திய சந்தையிலும், சர்வதேச சந்தையிலும் கடுமையான போட்டியை அளிக்கின்றன. இந்தியா சுதந்திரத்திற்கு பின் தன் வர்த்தக உத்திகளை மாற்றி இருக்கிறது. உலக மக்களின் ரசனை கூட சில நேரங்களில் இந்தியர்களின் ரசனையை கொண்டு முடிவெடுக்கும் அளவிற்கு மாறியுள்ளது. 
 
எனவே இந்தியா வியாபாரமும் சுதந்திரத்திற்கும் அதன் பின் உண்டான மாற்றங்களுக்கும் காரணமாய் இருந்திருக்கிறது அன்று ஒரு ரூபாயாக இருந்த ஒரு டாலர் மட்டும் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய்க்கு மேல் மாறியுள்ளது. பொருளாதார உலகில் பல அந்நிய பிராண்டுகளுக்கு வாழ்வாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
 
முன்பு வியாபாரம் செய்தவர்கள் அடிமைப்படுத்தியது மாறி இப்போது வியாபாரம் செய்ய வந்த நிறுவனங்கள் நான் இங்கே வியாபாரம் செய்வதை தான் விரும்புகிறேன் என்று அடிமையாகி கிடக்கும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது என்பதை நினைத்து பெருமைப்படுவோம்.இந்திய வர்த்தகமும் சுதந்திரமும் பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்று!
 
 
-ச. ஸ்ரீராம்


NFTCL TAMIL NADU STATE UNION WISHES TO  ALL


              HAPPY INDEPENDANCE DAY TO ALL!!!!!

                        LET US ENJOY THE FREEDOM!!!!!Thursday, 7 August 2014

              
            Hanumantal Bada Jain Mandir
  
      அகில இந்திய மாநாடு 

நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு, 
2014 - அக்டோபர் 10 முதல் 12 வரை மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் நடைபெற உள்ளது என்று முறையான அறிவிப்பை நமது அகில இந்திய சங்கத் தலைமை வெளியிட்டு  ள்ளது. 

       சார்பாளர்கள் தங்களது பயணத்திற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம்.  

Notice for All India Conference. Letter No.-TF-1/2/AIC, Dated:-06-08-2014. 

                            Click Here

Tuesday, 5 August 2014

  சொத்து


நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின் அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.
            -நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்

              வண்மையாக கண்டிக்கிறோம் 

 வேலூர் மாவட்ட நிர்வாகதை NFTCL மாநில 

சங்கம்   வண்மையாக கண்டிக்கிறோம் , நீதி 

களைய வேண்டும், இல்லை என்றால் , NFTCL 

மாநில சங்கம் இணையும் நீதி களையும் ....

வேலூர் போராட்டம் வெற்றி பெற 

NFTCL மாநில சங்கம் வாழ்த்துகிறது !!!!!  
DE  URBAN BRANCH...புதுச்சேரி 

தோழர்களே ,தோழியர்களே ...

தர்மத்தின் வாழ்வதனை சூது கவும் ...
இறுதியில் தர்மமே வெல்லும் ... 

பல ஒற்றுமை முயற்சிக்கு முயன்றும் விடா பிடியாக  தான் நினைப்பதை மட்டும் செய்யவேண்டும் என்கிற அகந்தையை....தோழர்கள் உணர்ந்ததால் ,

02-08-2014அன்று நடைபெற்ற கிளை மாநாட்டின் நிர்வாகிகள் தேர்வில் ,தோழர் மாலி வகுத்த 9-6 நியதின்  படி.

 செயலர் பதவிக்கு  04-08-2014அன்று  போட்டி நடைபெற்றது ,

 நமது தோழர்  M கிருஷ்ணன்  வெற்றி பெற்றார் .
     
மேலும் ஒன்று பட்ட புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு     செய்யப்பட்டனர் 

Monday, 4 August 2014NFTCL SPREADS WINGS IN MAHARASTRA:

 On 03/08/2014 the District Committee of NFTCL will be formed at the convention for both Bheed and Jalgon Districts.As we all know already many District committee of NFTCL formed throughout the country including Aurangabad(Maharastra), South Cennai( Tamil Nadu), Cuddalore(Tamil Nadu). Pathanamthitta(Kerala) and Trichur etc.

A SPECIAL MEETING OF TELECOM    CONTRACT LABOURS ON 21/08/2014 AT CHENNAI:

 A special meeting of Telecom contract labours under the banner of NFTCL will be held at 02.00 PM in Chennai on 21/08/2014. In this meeting National Co- Ordinator, Tamil Nadu, State Secretary of NFTECL will participate and address the Telecom contract labours about the demands and struggles for achieving them.

Saturday, 2 August 2014

     

          நமது கூட்டுறவு சங்கம்  GTECS

" சிறப்பாக நிர்வகிக்கப்படும்  நிறுவனம் " 

என்று மத்திய அரசின் கூட்டுறவு துறையால்   

தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான  விருது வழங்கப் 

படுகிறது. 

மேலும் இந்திய நேபாள நட்புறவு விருதும் நமது 

 கூட்டுறவு  சொஸைட்டிக்கு ழங்கப்படுகிறது. 

இந்த விருது  3-8-14 அன்று காத்மண்டுவில் 

நடைபெறும் விழாவில்   சொஸைட்டி தலைவர் 

தோழர் வீரராகவன் அவர்களிடம்  வழங்கப்பட  ள்ளது.

 இந்த பாராட்டுகளை பெற உழைத்த சொஸைட்டி 

தலைவர், நிர்வாகிகள், மற்றும் ஊழியர்களுக்கு 

நமது  நல்வாழ்த்துக்கள்
             NFTCLன்   சிறகுகள் விரிகின்றன !

NFTCL
                

வருங்காலத்தில் நமது நிறுவனத்தில் அதிகாரிகள் மட்டத்திலும் 
"ஒப்பந்த அதிகாரிகள்" முறையை இனிப்பு கலந்து  திணித்திட 
நவீன முதலாளித்துவ வாதிகள் முயல்வர். அதன் ஒரு பகுதி 
முயற்சிதான் டிலாய்ட் அறிக்கை.

 ஆகவே NFTEன் மரபு சார்ந்த ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை 
இந்தியா முழுவதும் கட்டுவது இன்றைய காலத்தின் கட்டாயம்.

     அதன் ஒரு பகுதியாக மராட்டிய  மாநிலத்தில் பீட்,  ஜல்கான் மாவட்டங்களில் NFTCL அமைப்பின் மாவட்ட அமைப்பு கூட்டங்கள் 
3-8-2014 அன்று நடைபெற உள்ளது மனதை மகிழ வைக்கும் 
செய்தியாகும்.

  
நமது ஒப்பற்ற தலைவர்கள் O.P குப்தா, சந்திரசேகர், ஜெகன் 
ஆகியோரின் பெருமையே நிராதரவாக நின்ற லட்சக்கணக்கான 
மஸ்தூர் களின் வாழ்வில் ஒளிதீபத்தை ஏற்றினர் என்பதுதான்.

  அவர்களின் வழியில் NFTCL கொடியேந்தி இந்தியாவெங்கும் 
சங்கமமைத்து செயலாற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் 
உண்மையான அஞ்சலியாக இருக்கும். 

Friday, 1 August 2014

தேனினும் இனிய நற்செய்தி : 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான ONGC (ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்), BSNL + MTNL நிறுவனங்களுடன், டெலிகாம் சேவையை பயன்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தடையில்லா சிறந்த சேவையை  BSNL+MTNL வழங்கி வருவதால் தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ONGC நிறுவனம்  தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

BSNL-MTNL in pact with ONGC to provide telecom services for 5 years :
                                ONGC has entered into agreement with BSNL and MTNL as they are providing complete telecom solution based on latest available technology.
                                            ONGC has entered into agreement with BSNL and MTNL 
                                        as they are providing complete telecom solution based on 
                                                            latest available technology. 

NEW DELHI: BSNL and MTNL today said they have inked a 5-year pact with ONGC to provide all telecom services to the state-owned oil firm on a pan-India basis. 

"A tripartite MoU was signed among ONGC, BSNL and MTNL on July 28 at ONGC Corporate 
Office for providing all telecom services such as basic telephones, 
mobile services, leased circuits including VSAT services to ONGC on pan India 
basis, including service areas of MTNL at Delhi and Mumbai," BSNL and MTNL  
said in a joint statement. 

Financial and other details related to the deal was not disclosed. 

"The MoU (Memorandum of Understanding) was signed by Shashi Shankar, 

Director (T&FS) ONGC, A. N. Rai, CMD BSNL and A. K. Purwar, CMD MTNL 
for a period of five years up toMarch 2019," the statement said. 

ONGC has entered into agreement with BSNL and MTNL as they are providing complete telecom solution based on latest available technology all across 
country including remotest corners from Kashmir to Kanyakumari, it added. 

THURSDAY, 31 JULY 2014

        சுட்டது நெட்டளவு: ஞானியும் பணக்காரனும்

                                       


                             ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன், “சுவாமி! என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை!” எனப் பெருமையடித்துக் கொண்டான்.
புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி, “வா! சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம்!” என்றார். “கடுமையான வெயிலில் போக வேண்டுமா?” என தயங்கினாலும், ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான்.
சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த பணக்காரன், ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்க லாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை.
ஞானி கேட்டார், “என்ன தேடுகிறாய்?”
“நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன்.”
“ஏன் உன் நிழல் உள்ளதே, அதில் நீ ஒதுங்கிக்கலாமே?”
“சுவாமி! என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?”
“என்னப்பா இது... நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை.உன் பொருட்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? ஆனால், இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே?” என்றார்.
செல்வந்தன் உண்மையை உணர்ந்தான்.