Wednesday, 30 April 2014


NFTCL -தனது போரட்ட பயணமும் இப்படிதான் 

இந்த வருடம் அமையும் என்பதை தெரிவித்து 

மே டே வாழ்த்துக்கள்...தோழர்களுக்கு!!!!!

 ஒரு நல்ல 

செய்தி இன் நாளில் 


போராடதவனுக்கு  டவுன்லோட் செய்த  படம்தான் MAY DAY அமையும்!!!!!
போராளிக்கு அது தேவை இல்லை போரட்டமே படமாய்  அமையும் என்பதை
எ டுத்து காட்டிய திருச்சி  தோழர்களுக்கு   வாழ்த்துக்கள்...

NFTCL STATE UNIT FORMED IN KERALA ON 27/04/2014:

 Com. C.K.Mathivanan inaugurated the state formation conference Kerala in Perumbavur near Ernakulam. Com. S.P. Mohankumar was unanimously elected as the Secretary of State committee of Kerala NFTCL. The formation conference was presided over by Com. P.K. Radhakrishnan Circle president of the NFTE-BSNL and was addressed by comrades P.V. Dharmadass (CS,NFTE-BSNL),P.M.Michel(CHQ,NFTE-BSNL) T.V.Paulose, S. Anandan( Tamil Nadu, State secretary of NFTCL) and L. Subbarayan (ACS, TN Circle NFTE-BSNL). Contract labours from Pathnamthitta and Trichur expressed their difficulties at the conference. AITUC district secretary cOM.Asraf and CPI leaders of Ernakulam district greeted the conference. Com. C.K.Mathivanan expressed hope that within few months time state unit of NFTCL will be formed in Karnataka, Maharastra and Bengal. The conference demanded equal pay for equal work to contract labour as per the Supreme court judgment and demanded skilled labour status for contract labour in telecom The Conference also resolved to ensure permanent job for contract labours on the principles of permanent job be done by permanent worker. The branch secretary of Perumbavur of NFTE-BSNL proposed vote of thanks. Com. M. Ramakrishnan Dist Secretary Coimbatore NFTE-BSNL along with Com. Kumaresan circle Organizing secretary of NFTCL graced the conference

NFTCLன் எல்லை விரிகின்றது

கேரளாவில் எழுச்சிமிகு NFTCL மாநில அமைப்பு கூட்டம்

      27-4-14  காலை 11 மணி அளவில் கேரளாவில் 

உள்ள  எர்ணாகுளம்  மாவட்டம்  பெரம்பாவூரில், 

NFTE மாநில தலைவர் தோழர் ராதாகிருஷ்ணன் 

தலைமையில் NFTCL மாநில அமைப்புக் கூட்டம் 

நடைபெற்றது.

தோழர் ராதாகிருஷ்ணன் தனது தலைமையுரையில், 

இலாகா பணியிலிருந்து சில மாதங்களுக்கும் முன் 

ஓய்வு பெற்ற பின்னும், ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், 

நமது தொலைத் தொடர்பு துறையில் கடும் சுரண்டலுக்கு

ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை அணி திரட்ட,அவர்களுக்கும் 

நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சிய வெறியோடு 

செயல்படும் தோழர் மதிவாணன் அவர்களை மனமுவந்து 

வரவேற்பதாக கூறியது நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது.   

தோழர் C.K.மதிவாணன், அகில இந்திய துணைப் 

பொதுச்செயலர்  சிறப்புரை ஆற்றினார். 

NFTCL துவங்கப்பட்டதன் நோக்கம், லட்சியம் ஆகியவற்றை 
விளக்கினார். 

AITUC, அகில இந்திய அமைப்பின் வழிகாட்டுதலோடு NFTCL துவக்கப்பட்டுள்ளது. 

BSNLல் தற்போது 60 சத பணிகளை ஒப்பந்த ஊழியர்கள்தான் 
செய்து வருகின்றனர். ஒருசில வருடங்களில் நிரந்தர ஊழியர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி அப்பாவி ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட திட்டமிடும் அரசின் சதியை முறியடிக்க வேண்டும். AirTel, 
Vodofone போன்ற  தனியார் துறையில் பணியாற்றும் ஒப்பந்த 
ஊழியரின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. இது போன்ற பிரச்னைகளை அகில இந்திய அளவில் எடுத்து தீர்த்திடவே NFTCL துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் அமைப்புரீதியாக திரண்டு வருகின்றனர்.
அவர்களை ஒருங்கிணைத்து NFTECL விரைவில் அகில இந்திய அமைப்பாக பரிணமிக்கும் என்று விளக்கினார் தோழர் C.K.M.

கடந்த 4 ஆண்டுகளாக  BSNLEU சங்கத்தின் தவறான  உடன்பாடு  காரணமாக BSNL ஊழியர்க்கு போனஸ் மறுக்கபட்டபோதும், 
தோழர் ஆனந்தன், கடலூர் மாவட்டச் செயலராக காண்ட்ராக்ட் ஊழியர்க்கு போனஸ் பெற்ற சாதனையை விளக்கினார்

கேரளத் தலைவர்கள் கேரள மாநிலச் செயலர் 

தோழர் தர்மதாஸ், அகில இந்திய நிர்வாகி 

தோழர் மைக்கேல், மூத்த தோழர் பௌலோஸ் 

உட்பட பலர் கலந்துகொண்டனர்.

NFTCL -ன் தமிழ் மாநில செயலர் தோழர் ஆனந்தன் 

தமிழகத்தில்  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு செய்த 

சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

சமீபத்தில் கடலூரில் இறந்த ஒப்பந்த ஊழியரின்  

குடும்பத்தாருக்கு இழப்பீடு பெற்று கொடுத்ததோடு 

அவரது மனைவிக்கு வேலை வாங்கிக் கொடுத்ததையும் 

விளக்கினார். 

தோழர் மோகன் குமார், NFTCL - ன் மாநிலச் செயலராக 

தேர்வுசெய்யப்பட்டார்.

கோவையிலிருந்து தோழர்கள் சுப்பராயன், ராமகிருஷ்ணன், குமரேசன்,    மோகன் குமார் கலந்து கொண்டனர்.

 புதிய நிர்வாகிகளுக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

பாட்டாளி வர்க்க உணர்வை நெஞ்சில் ஏந்திய போராளி தோழர்.எம்.கைலாசம் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 27-04-14 அன்று  தஞ்சையில் கவிதாலயா அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

NFTE-BSNL தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.பிரின்ஸ் தலைமையில் நடந்த இந்த விழாவில்,தோழர் கைலாசம் அவர்களின் நற்பண்புகள்,தோழமை உணர்வு,தடம்மாறாத கொள்கை உறுதி,மனிதநேயம் ஆகிய சிறப்புக்கள் தோழர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

NFTE-BSNL  சம்மேளனச் செயலாளர் தோழர் 
கோவி. ஜெயராமன்   பங்கேற்று சிறப்பித்தார். AIBSNLOA சார்பில் தோழர்எஸ்.காமராஜ், 
NFTE -BSNL திருச்சி சார்பில்தோழர்எம்.பாலகுரு, மாவட்டச்  செயலாளர் எஸ்.பழனியப்பன்,
தஞ்சை NFTE-BSNL மாவட்ட செயலாளர் தோழர் T.பன்னிர்செல்வம்,மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் பாராட்டு உரை வழங்கினர்.Saturday, 19 April 2014

ஆரோக்கியம் தரும் காலிபிளவர்

புற்றுநோய் வருவதை தடுக்கும் காலிஃப்ளவர்
ஆரோக்கியம் தரும் காலிபிளவர் 
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய்,

இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். நோயெதிர்ப்பு அழற்சி காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.

தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும். நச்சுத் தன்மை நீக்கும்.

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது. இதய நோய்களுக்கு எதிரானவை ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது.

செரிமானத்தை அதிகரிக்க நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.

எடையைக் குறைக்க குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை.

காலிஃப்ளவரில் இருக்கும் போலேட்(folate) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

புற்றுநோயைத் தடுக்கும் காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

Friday, 18 April 2014

கம்யூ.,கட்சியை மிஞ்சிட்டாங்கப்பா ! 
                         கெஜ்ரிவாலுக்கு கோடி, கோடியாக நிதி !!

                                

புதுடில்லி: கட்சி துவங்கியது முதல் பல இடங்களில் , பல முனைப்புகளில் நிதி என்ற பெயரில் கட்சிக்கு பணம் சேர்த்து வரும் கெஜ்ரிவால் தற்போது வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். நாடு முழுவதும் கட்சிக்கு நிதி திரட்டும் பணியில் ஆம்ஆத்மி கட்சியினர் உண்டியல் ஏந்தியும், துண்டு ஏந்தியும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 1. 15 கோடி ரூபாய் கட்சி கஜானாவுக்கு வந்து விழுந்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாரணாசியில் தேர்தல் பணியாற்றும் கட்சி தொண்டர்களுக்கு 10 லேப்டாப்புகள் வழங்கி இங்கு கட்சி பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசியில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்கையில் கட்சிக்கு நிதி கொடுங்கள் என்றார், தனது டுவிட்டரில் , ராகுலையும், மோடியையும் எதிர்கொள்ள பண பலம் தேவைப்படுகிறது. கட்சிக்கு நிதி அளியுங்கள், என்று ஒரு வரியில் வேண்டுகோள் வைத்தார். அதுவும் ' ஒயிட்டாக ' இருக்கட்டும் என்றாராம். இதன் 48 மணி நேரத்தில் 1. 15 கோடி வியாழக்கிழமை ( 80 லட்சம்), வெள்ளிக்கிழமை ( 35 லட்சம்) , கிடைத்துள்ளது. இது, ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்தும், உலகம் முழுவதும் இருந்து நிதிகள் வந்துள்ளன. எங்களின் ஆதரவாளர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஒமன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து நிதி அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு நபர் மட்டும் ஒரு லட்சம் நிதியாக கொடுத்துள்ளார். 10 ரூபாய் முதல் நிதி வசூலிக்கப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆம் ஆத்மியின் நிதி குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் கெஜ்ரிவாலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் நடப்பதால் மத்திய அரசு எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் வாய் மூடி விட்டது.

பின் குறிப்பு: கட்சி, அமைப்புகளில் நிதி வசூலிப்பதில் தி.மு.க., வுக்கு என ஒரு தனிப்பெயர் உண்டு, இடதுசாரிகளும் வசூல் செய்வதில் வல்லவர்கள். இந்த வரிசையில் ஆம்ஆத்மியும் சேர்ந்துள்ளது. சமீபத்தில் கூட இலங்கை புலிகள் அமைப்பினர் தங்களுக்கு நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபய ராஜபக்சே அச்சம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே கூறுகையில், 'இலங்கைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு உதவவும், சர்வதேச அளவில் 30 நாடுகளில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிரான பிரசாரத்திலும் அங்கு ஈடுபட்டுள்ளனர்,' என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி.க்கு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

                                    


தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், மத்திய தணிக்கைத் துறை(சிஏஜி) அமைப்புக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதி மத்திய அரசுக்கு கட்டணமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் வருவாய் ஆதாரங்களை தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய தணிக்கைத் துறைக்கு உள்ளது. அதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவன கணக்குகளை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி. முயன்றபோது அதை எதிர்த்து அந்நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசுடன் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை பகிர்ந்து கொள்வதாக சிஏஜி அமைப்பு தவறாக கருதியுள்ளது. இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிமக்கட்டணம் மட்டுமே செலுத்துகின்றன. அது, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக உள்ளது,” என்று தெரிவித்தன.
இதை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “தொலைத்தொடர்பு நிறுவனங் களின் கணக்கில் மத்திய அரசின் வருவாய் அடங்கி இருப்பதால், அந்த கணக்கை தணிக்கை செய்ய சிஏஜி அமைப்புக்கு சட்ட அதிகாரம் உண்டு,” என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு , மொபைல்போன் நிறுவனங்களின் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகி ருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள உத்தரவில், “தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்கை தணிக்கை செய்ய சிஏஜி அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானதே,” என்றனர்.
தேர்தல் களப்பணி...

 
தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. 
நல்லோர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்...
நாடழிக்கும் நயவஞ்சகம் அழிக்கப்பட வேண்டும்...
எனவே... நமது மூத்த தலைவர்கள் 
பொதுவுடைமைப்பூங்காவில் முத்த.தலைவர்கள் 
.NFTE  சங்கதின்  அகில இந்திய செயாளர் ...  அருமைத்தோழர். ஜெயராமன்
பம்பரமாய் பணியாற்றுபவரும்... பண்பு மிக்கவருமான... 
நமது வழிகாட்டி தோழர்.ஆனந்தன் 
ஆகியோர் கடலூர்  பகுதிகளில் மற்றும் PUDHUCHERRY பகுதிகளில் 
களப்பணி ஆற்றுகின்றனர்... தெரியுமாடா தோழ   

நல்லவர்கள் வெல்ல எப்போதும் உறுதுணை செய்யும் 
நமது தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...Tuesday, 15 April 2014

ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

- அம்பேத்கர் பிறந்தநாள் : ஏப்ரல் 14

Thursday, 10 April 2014

ஒரிஜினல் (உண்மையான)அல்வா தயாரிப்பது

தளத்தில் படித்ததில் பிடித்தது.


 திருநெல்வேலி, தாமிரவருணிக்கும், அல்வாவுக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் பேர் போனது. முதலில் அல்வாவைப் பார்த்து விடலாம். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற (சாமி படத்தில் திருட்டுக் கடை அல்வாதான் என்று பாடலில் இடம் பெற்ற) அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்;  அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா).

    – ச.திருமலை

தேவையான பொருள்கள்:

சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

சம்பா கோதுமை கிடைத்தபின் செய்து படம் இங்கே சேர்க்கப்படும். அதுவரை ச.திருமலையின் ஆல்பத்திலிருந்து எடுத்த இருட்டுக் கடை திருட்டு (அவரிடம் அனுமதி வாங்காமல் எடுத்ததால்) அல்வாவை வைத்து அட்ஜஸ் செய்து கொள்ளவும்.

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)

செய்முறை:

    சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
    நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
    அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
    பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
    கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
    விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
    இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.

* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது

* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.

அணியின் பெயரால் அடிமரத்தை வெட்டுபவர்கள்-----திருச்சி வலைதளத்திலிருந்து........


தோழர் பட்டாபி தலைமையிலான NFTE சங்கமே உண்மையான NFTE – BSNL சங்கம்!
ஏப்ரல் மாத வெயிலில், RGP தேர்தல் பித்தத்தில் சிலர் இப்படி பிதற்ற தொடங்கி விட்டனர்! திருச்சி மாவட்டத்தில்!!

“பட்டாபி தலைமையிலான NFTE சங்கம்” இந்த பதத்தை தோழர். பட்டாபி அவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே நம்புகிறோம்.

பட்டாபி அணி என்ற முகமூடி அணிந்த சில சுயநல பேர்வழிகள், எங்களுக்கு நாலு சீட்டு கொடு! என வீண் விவாதம் செய்ய வைத்து, மற்ற கூட்டணி சங்கங்களுக்கும் தர வேண்டுமே, மூன்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகும், ஒரே ஒரு சீட்டு குறைவுக்காக, ஓடி சென்று ஐந்தே நிமிடத்தில் BSNLEU செல்லப்பா அணியுடன் ஒரு கூட்டணி போட்டனர். (நம்மிடம் பேசியதே ஒரு நாடகம் தான் என பின்பு அறிந்துகொண்டோம்)

இன்று, NFTE சங்கத்தை, NFTE சங்க தலைவர்களை, NFTE திருச்சி மாவட்ட சங்கத்தை தர குறைவாக செல்லப்பா அணியினர் விமர்சிக்கும் பொது அதை கைகொட்டி ரசிப்பவர்களுக்கு பெயர் பட்டாபி அணியாம்! கேட்க நமக்கு வெட்கமாக இருக்கிறது.

தமிழகத்தில், சென்னை தொலைபேசியில் இதுவரை நடந்துள்ள RGB தேர்தல்களில் BSNLEU சங்கம் பெற்ற படுதோல்வியை மறைக்க பட்டாபி அணி வெற்றி பெற்றுள்ளதாக செல்லப்பா அணி தில்லுமுல்லு பிரச்சாரம் செய்கிறது.

அணியின் பெயரில், அதையே FLEX பேனராக அடித்து BSNLEU சங்கத்திற்கும் சேர்த்து வோட்டு கேட்கும் அவலத்தை இங்கு சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்.( இந்த தரமற்ற செயலுக்கு கடலூர், கும்பகோண இணைய தளங்களில் இலவச விளம்பரம் வேறு! )

மதுரை மாநாட்டில் போட்டி ஏற்பட்டது உண்மை!
தோழர்.பட்டாபி வெற்றி பெற்றதும் உண்மை!
அதை அனைவரும் எற்றுகொண்டதும் உண்மை!

அதே சமயம், மாவட்ட சங்க நிதி இரண்டு லட்சத்தை கையாடல் செய்தவர்களும், அரியலூர் மாவட்ட மாநாடு கணக்கை இதுவரை சமர்பிக்காதவர்களும், கிளை மாநாடு முடிந்து புதிய பொருளரிடம் எதையும் கொடுக்காதவர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு தங்கள் தவறுகளை மறைக்க, நாங்கள் பட்டாபி அணி என்று சொல்லி தப்பிக்க முயல்வதை, உண்மையான, தன்மானமுள்ள எந்த NFTE உறுப்பினரும் ஏற்க மாட்டான் என்ற உண்மையையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

NFTE சங்கத்திற்கு தலைவர் தோழர்.இஸ்லாம் அஹமது, பொது செயலர் தோழர். C. சிங், என்று தானே எனக்கு தெரியும். தோழர் பட்டாபி தலைமையில் NFTE சங்கம் ஒன்று இருக்கா சார்?

இது ஒரு NFTE உறுப்பினரின் கேள்வி!

அணியின் பெயரால் அடிமரத்தை வெட்டுபவர்கள்-----திருச்சி வலைதளத்திலிருந்து........


தோழர் பட்டாபி தலைமையிலான NFTE சங்கமே உண்மையான NFTE – BSNL சங்கம்!
ஏப்ரல் மாத வெயிலில், RGP தேர்தல் பித்தத்தில் சிலர் இப்படி பிதற்ற தொடங்கி விட்டனர்! திருச்சி மாவட்டத்தில்!!

“பட்டாபி தலைமையிலான NFTE சங்கம்” இந்த பதத்தை தோழர். பட்டாபி அவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே நம்புகிறோம்.

பட்டாபி அணி என்ற முகமூடி அணிந்த சில சுயநல பேர்வழிகள், எங்களுக்கு நாலு சீட்டு கொடு! என வீண் விவாதம் செய்ய வைத்து, மற்ற கூட்டணி சங்கங்களுக்கும் தர வேண்டுமே, மூன்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகும், ஒரே ஒரு சீட்டு குறைவுக்காக, ஓடி சென்று ஐந்தே நிமிடத்தில் BSNLEU செல்லப்பா அணியுடன் ஒரு கூட்டணி போட்டனர். (நம்மிடம் பேசியதே ஒரு நாடகம் தான் என பின்பு அறிந்துகொண்டோம்)

இன்று, NFTE சங்கத்தை, NFTE சங்க தலைவர்களை, NFTE திருச்சி மாவட்ட சங்கத்தை தர குறைவாக செல்லப்பா அணியினர் விமர்சிக்கும் பொது அதை கைகொட்டி ரசிப்பவர்களுக்கு பெயர் பட்டாபி அணியாம்! கேட்க நமக்கு வெட்கமாக இருக்கிறது.

தமிழகத்தில், சென்னை தொலைபேசியில் இதுவரை நடந்துள்ள RGB தேர்தல்களில் BSNLEU சங்கம் பெற்ற படுதோல்வியை மறைக்க பட்டாபி அணி வெற்றி பெற்றுள்ளதாக செல்லப்பா அணி தில்லுமுல்லு பிரச்சாரம் செய்கிறது.

அணியின் பெயரில், அதையே FLEX பேனராக அடித்து BSNLEU சங்கத்திற்கும் சேர்த்து வோட்டு கேட்கும் அவலத்தை இங்கு சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்.( இந்த தரமற்ற செயலுக்கு கடலூர், கும்பகோண இணைய தளங்களில் இலவச விளம்பரம் வேறு! )

மதுரை மாநாட்டில் போட்டி ஏற்பட்டது உண்மை!
தோழர்.பட்டாபி வெற்றி பெற்றதும் உண்மை!
அதை அனைவரும் எற்றுகொண்டதும் உண்மை!

அதே சமயம், மாவட்ட சங்க நிதி இரண்டு லட்சத்தை கையாடல் செய்தவர்களும், அரியலூர் மாவட்ட மாநாடு கணக்கை இதுவரை சமர்பிக்காதவர்களும், கிளை மாநாடு முடிந்து புதிய பொருளரிடம் எதையும் கொடுக்காதவர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு தங்கள் தவறுகளை மறைக்க, நாங்கள் பட்டாபி அணி என்று சொல்லி தப்பிக்க முயல்வதை, உண்மையான, தன்மானமுள்ள எந்த NFTE உறுப்பினரும் ஏற்க மாட்டான் என்ற உண்மையையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

NFTE சங்கத்திற்கு தலைவர் தோழர்.இஸ்லாம் அஹமது, பொது செயலர் தோழர். C. சிங், என்று தானே எனக்கு தெரியும். தோழர் பட்டாபி தலைமையில் NFTE சங்கம் ஒன்று இருக்கா சார்?

இது ஒரு NFTE உறுப்பினரின் கேள்வி!

Friday, 4 April 2014

தோழர்களே!தோழியர்களே!! 
நமது மாநிலசங்கத்திற்க்கு  NFTCL  கிடைத்திட்ட முதல் வெற்றி!!!
01-04-2014 முதல் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு VDA  உயர்ந்துள்ளது. மாநில சங்கத்தின் தொடர் முயற்ச்சியின் காரணமாக உயர்த்தப்பட்ட* VDA * அனைத்து மாவட்ட தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர் நலத்துறை அமலாக்க அதிகாரி ( LEO )  அவர்கள் நமது BSNL தலைமை பொது மேலாளர் அவர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.இந்த உத்தரவை பயன்படுத்தி அனைத்து மாவட்டத்திலும்  நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய VDA-உடன் கூடிய ஊதியம் கிடைத்திட NFTCL மாநில நிர்வாகிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.மேலும் விபரங்களுக்கு மாநில செயலர் தோழர்  S.ஆனந்தன்  அவர்களை அணுக வேண்டுகிறோம் 


Add caption